கோவாவில், ரெனோ லாட்ஜியுடன் ஒரு லாஜிக்கல் பயணம்!
வலைப்பூக்களுக்கான பிரபல அமைப்பான பிளாக்அட்டாவுடன் இணைந்து ரெனோ லாட்ஜி காரை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியை ரெனோ கார் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது.
கோவாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வலைப்பூ செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த 19ந் தேதி முதல் 21ந் தேதி வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் ரெனோ கார் நிறுவனத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சார்பில் ஆசிரியர் ஜோபோ குருவில்லா பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலைப்பூ எழுத்தர்களுக்கு டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் வழியாகவும், நேரடியாகவும் பல சுவாரஸ்யமான போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் சிறந்த ட்வீட் செய்ததற்காக ஜோபோ குருவில்லாவிற்கு இரண்டு பரிசுகள் கிடைத்தன. மேலும், வலைப்பூ எழுத்தாளர்கள் 10 குழுக்களாக பிரிந்து ரெனோ லாட்ஜி காரில் பயணிக்கும் வாய்ப்பையும் பெற்றனர்.
இதன்படி, லீலா பேலஸ் ரெசார்ட்டிலிருந்து குறிப்பிட்ட இடங்கள் வழியாக திரும்பவும் லீலா பேலஸ் ஓட்டலை அடைந்துவிடும் விதத்தில் போட்டி நடந்தது. இது மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியிலிருந்து சில துளிகளை கீழே உள்ள படங்களில் காணலாம்.
முதல் நாள் நடந்த புதையல் வேட்டை போட்டி...
We have a very interesting treasure hunt activity #LiveLodgycal pic.twitter.com/daNArvXlop
— BlogAdda (@blogadda) June 19, 2015 

Click it and Unblock the Notifications








