மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

By Saravana Rajan

வனங்களை வர்த்தகமயமாக்கியதன் விளைவுகளை கேரள வெள்ளம் தோலுரித்து காட்டி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையை புரட்டி போட்ட வெள்ளமும் வர்த்தக மயமாக்கலின் கோர முகத்தை காட்டியது. இயற்கை நியதிகளையும், நீர் வழித்தடங்களுக்கு எதிராக ஆக்கிரமித்து வரைமுறை இல்லாமல் பெருகி வரும் குடியிருப்புகள், வர்த்தக பகுதிகள் இயற்கை சீற்றங்களால் சின்னாபின்னமாகும் நிலையை மீண்டும் ஒருமுறை உணர்த்தி இருக்கிறது கேரள வெள்ளம்.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் பல்லாயிரக்கணக்கானோரை பரிதவிக்கவிட்ட கேரளாவில் நடந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு மீனவர்கள், ராணுவத்தினர், தன்னார்வலர்கள் இரவு பகலாக ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானோர் படகு, ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

இந்த நிலையில், கேரள மீட்புப் பணியிலும், நிவாரணப் பணியிலும் ஆஃப்ரோடு எஸ்யூவி குழுமங்களை சேர்ந்தோரும் களமிறங்கி பலரையும் மீட்டுள்ளனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும் தங்களது உயிரை துச்சமென மதித்து, ஆஃப்ரோடு வாகனங்களை பயன்படுத்தி பலரையும் மீட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

கேரளாவில் பங்களாக்களிலும், சொகுசு வீடுகளிலும் விலை மதிப்புமிக்க கார்கள் முடங்கி போயிருந்தன. பல கார்கள் தண்ணீரில் மூழ்கி செயலற்றுவிட்டன. ஆனால், அங்கு மஹிந்திரா தார், இசுஸு வி க்ராஸ், ஃபோர்ஸ் குர்கா உள்ளிட்ட ஆஃப்ரோடு ரக எஸ்யூவி வாகனங்கள் மீட்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

ஆஃப்ரோடு சாகச விளையாட்டுகள் மற்றும் பந்தயத்திற்காக பிரத்யேக அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட அந்த ஆஃப்ரோடு எஸ்யூவி வாகனங்கள் கேரள மீட்புப் பணியின்போது மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. மிக மோசமான சாலைகளில் செல்வதற்காகவே பல கூடுதல் ஆக்சஸெரீகளும் இந்த கார்களில் இருக்கின்றன.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

ஆஃப்ரோடு வாகன குழுவினர் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது மொபைல்போன் உள்ளிட்ட எண்களை தெரிவித்து, உதவி தேவைப்படுவோரை தொடர்பு கொண்டு இந்த பணியை செவ்வனே செய்துள்ளனர். இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

இடுப்பளவு வெள்ள நீர் சூழ்ந்த வீடுகள் இருந்த பகுதிகளில் கூட தங்களது ஆஃப்ரோடு வாகனங்களை செலுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக நீர் நிலைகளை கடந்து செல்வதற்காக ஆஃப்ரோடு ரக வாகனங்களில் ஸ்நோர்க்கெல் என்ற மேல்நோக்கிய குழாய் அமைப்பு வாகனத்தின் உயரத்திற்கு இணையாக பொருத்தப்பட்டு இருக்கும்.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

இதன்மூலமாக, எஞ்சினில் எரிபொருள் எரிவதற்கு தேவையான காற்றும், அழுத்தமும் பெறப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ்ராய்ஸ்களே வெள்ள நீரில் மூழ்கி சீந்துவாரின்றி கிடந்த நிலையில், இந்த ஆஃப்ரோடு எஸ்யூவிகள் திக்கு திணறல் இல்லாமல் ஓடியாடி உதவி புரிந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

மேலும், இந்த வகை வாகனங்களில் ஆஃப்ரோடு டயர்கள் மற்றும் அதிக தரை இடைவெளி இருப்பதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. கதவுகளும் சற்று உயரமாக இருக்கும் என்பதால், தண்ணீர் சூழ்ந்த இடங்களிலும் எளிதாக ஏறி, இறங்குவதற்கு இந்த வாகனங்கள் வசதியானவையாக இருக்கின்றன. இந்த வாகனங்களில் உள்ளே தண்ணீர் புகுந்தாலும் வெளியேறிவிடும்.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

ஆஃப்ரோடு வாகனங்கள் பொதுவாக 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருவதால், எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகின்றன. இதனால், சேற்றில் அல்லது மரகட்டைகளில் ஒரு சக்கரம் சிக்கினாலும் கூட பிற சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்பட்டு மீண்டு விடும். மலைப்பாங்கான பகுதிகளிலும் இந்த வாகனத்தை செலுத்துவது எளிது.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

மழை குறைந்து வெள்ளநீர் வடிந்து வரும் இவ்வேளையில், சாலைகள் மோசமாக சிதிலமடைந்துள்ளதால், சாதாரண கார்களை பயன்படுத்த இயலாது. இந்த சூழலில், ஆஃப்ரோடு எஸ்யூவி வாகனங்கள் மூலமாக நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லப்படுகின்றன.

மழை வெள்ளத்தில் முடங்கிய சொகுசு கார்கள்... ஓடியாடி உயிரை காத்த ஜீப்புகள்!!

டிரக்குகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்ல முடியாத சிறிய சாலைகள் மற்றும் மழைப்பாங்கான பகுதிகளிலும் தற்போது மிகச் சிறந்த போக்குவரத்து சாதனமாக இந்த ஆஃப்ரோடு வாகனங்கள் பயன்படுகின்றன. சென்னை பெரு வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மீட்பதற்காக ஒருவர் தனது ஜீப்பில் இடுப்பளவு தண்ணீரில் சென்றது நினைவிருக்கலாம்.

Source: Shibu Varghese / 4x4 India

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Off-Road Vehicles Assist Disaster Relief Efforts In Kerala.
Story first published: Wednesday, August 22, 2018, 17:33 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more