முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெற்றிக்கரமான மாடல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மாடர்ன் மஹிந்திரா எஸ்யூவி காரை இப்போது முன்பதிவு செய்தாலும் டெலிவிரி எடுக்க நீண்ட மாதங்களுக்கு காத்திருக்க வேண்டும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.

முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

ஏனெனில் குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் மஹிந்திரா போதிய அளவில் எக்ஸ்யூவி700 கார்களை தயாரிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது. இருப்பினும் சிலர் எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரி பெற்றுள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர் தனது எக்ஸ்யூவி700 காரை ஆஃப்-ரோட்டிற்கு அவசர கோளாறில் எடுத்து சென்றுள்ளார். அதன்பின் என்ன நடந்தது என்பதை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

அருண் பவர் என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் காட்சி தருவது 4x2 ட்ரைவ் சிஸ்டத்தை கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 காராகும். இந்த எக்ஸ்யூவி700 காரை வேளாண் சார்ந்த இடத்திற்கு எடுத்து செல்வதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது. தார் அல்லாத மண் சாலையாக இருப்பினும் ஆரம்பத்தில் பெரியதாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

ஆனால் அதன்பின் தொடர்ந்து அதே பாதையில் காரை இயக்க, சக்கரங்கள் முன்னோக்கி செல்லாமல், ஒரே இடத்தில் வழுக்கி கொண்டு இருந்துள்ளன. இதனால், காரை முன்னோக்கி, பின்னோக்கி இயக்க ஓட்டுனர் முயன்று பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. இந்த சூழலில் இருந்து வெளிவந்தாலே போதும் என்ற முடிவில் டிராக்‌ஷன் கண்ட்ரோலை ஆஃப்/ஆன் செய்து பார்த்தும் எந்த பிரயோஜனும் இல்லை.

முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

கார் அந்த இடத்தில் இருந்து நகர்ந்த பாடில்லை. பளபளப்பான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த குறிப்பிட்ட எக்ஸ்யூவி700 கார் பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டாகும். காரில் க்ளட்ச் பயன்பாடு இருந்திருந்தால், ஒருவேளை இத்தகைய சூழலில் இருந்து மீள உதவியாக இருந்திருக்கும். மிக பெரிய போராட்டத்திற்கு பிறகு, காரின் வழியில் உள்ள மண்ணை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

இதன்படி, காரின் டயர்களுக்கு முன் மற்றும் பின்பக்கத்தில் இருந்த மண்ணை அகற்றிய பிறகு, காரை முன்பக்கத்தில் இருந்து தள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் கார் ரிவர்ஸில் செல்ல, ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. இத்தகைய ஆஃப்-ரோடு பயணங்களுக்கு 4x2 ட்ரைவ் சிஸ்டத்தை கொண்ட கார்கள் சரிப்பட்டு வராது என்பது ஒருபக்கம், முதலில் இந்த எக்ஸ்யூவி700 காரில் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற டயர்கள் இல்லை.

முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

சாதாரண சாலை டயர்கள் இவ்வாறான வழுக்கும் பாதைகளில் பெரியதாக எந்தவொரு பிடிமானத்தையும் வழங்குவதில்லை. இவை எல்லாமும் சேர்ந்துதான் இந்த எக்ஸ்யூவி700 காரை ஈரமான மண்ணில் இருந்து வெளியே வர விடாமல் செய்துள்ளன. 4x2 ட்ரைவ் சிஸ்டத்தை கொண்ட காராக இருப்பினும், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற டயர்களை கொண்டிருந்தால், இத்தகைய சூழலை சமாளிக்கலாம் என்கின்றனர், கார் ஆர்வலர்கள்.

முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

மஹிந்திரா நிறுவனம் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்துடனும் எக்ஸ்யூவி700 காரை விற்பனை செய்து வருகிறது. இது குறை-விகித டிரான்ஸ்ஃபர் கேஸ் உடனான முழுமையான 4x4 சிஸ்டம் கிடையாது என்றாலும், இது முந்தைய எக்ஸ்யூவி500 மாடலின் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்திற்கு இணையானது ஆகும். வாகனத்தின் முன் & பின் சக்கரங்களுக்கு என்ஜினின் ஆற்றலை வழங்கும் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டமானது இத்தகைய ஆஃப்-ரோடு பயணங்களில் போதுமான பிடிமானத்தை வழங்கக்கூடியது.

முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

நிச்சயமாக, 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்தை கொண்ட காரில் 4x2 வாகனங்களில் கிடைப்பதை காட்டிலும் சிறப்பான பிடிமானத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பை கொண்ட காராக இருப்பினும் சரியான டயர்கள் பொருத்தப்பட்டிருப்பது அவசியமாகும். முற்றிலும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் பெட்ரோல் என்கிற இரு விதமான என்ஜின் தேர்வுகள் பொருத்தப்படுகின்றன.

முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 200 பிஎஸ் மற்றும் 380 என்எம் டார்க் திறனையும், டீசல் எம்ஹாவ்க் என்ஜின் அதிகப்பட்சமாக 155 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடன் என்ஜின் தேர்வை பொறுத்து மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த எஸ்யூவி காரில் 0-வில் இருந்து 60kmph வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடலாம்.

முன்-சக்கர-ட்ரைவ் கார்களை ஆஃப்-ரோடுகளுக்கு எடுத்த செல்லக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!! வீடியோ

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரில் மூன்று டிரைவிங் மோட்களை வழங்குகிறது. இவை என்ஜின் வழங்கும் ஆற்றலை கட்டுப்படுத்தி, காரின் பண்பை மாற்றும். தற்சமயம் ரூ.12.49 லட்சத்தில் இருந்து ரூ.22.99 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு ஜீப் காம்பஸ், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஹூண்டாய் அல்கஸார் முக்கியமான போட்டி மாடல்களாக விளங்குகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Offroading in a front wheel drive mahindra xuv700 is worst idea
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X