யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம்...

பெட்ரோல் டீசல்களை விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஏப்-ஜூன் வரையிலான ரிப்போர்ட்டில் ரூ18 ஆயிரம் கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

இந்தியாவில் தற்போது பெட்ரோல் டீசல் விலையெல்லாம் உச்சத்தில் இருக்கிறது. சராசரியாக நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ100ஐ தாண்டியும், டீசல் ரூ90 ஐ தாண்டியும் விற்பனையாகி வருகிறது. இந்த அதிகமான விலையால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த விஷயம் எல்லாம் நமக்குத் தெரியும் ஆனால் இவ்வளவு விலையில் விற்பனையாகியும் பெட்ரோல் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது எனச் சொன்னால் நம்புவீர்களா?

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

ஆம் உண்மையில் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பு நாம் பெட்ரோல் டீசல் எப்படி நமக்குக் கிடைக்கிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் கச்சா எண்ணெய்யை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து இங்கு வைத்து அதைப் பிரித்தெடுத்து விற்பனை செய்கின்றனர்.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

இப்படியாகப் பிரித்தெடுக்கப்படும் பெட்ரோல் டீசல்கள் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இப்படியாக பெட்ரோல் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யாக எடுக்கப்பட்டது முதல் சில்லறை விநியோகத்திற்குப் பங்கிற்கு வரும் வரை அதன் விலை இதை விடப் பாதி தான் இருக்கும்.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

இந்த இடத்தில் தான் மத்திய மாநில அரசுகள் வரிகளை விதிக்கின்றன. இதனால் விலை இரண்டு மடங்கிற்கும் அதிகமாகிறது. இந்தியாவைப் பொருத்தவரை பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் தான் அதிகமாக பெட்ரோல்களை விற்பனை செய்து வருகின்றன.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

இதுபோக தனியார் பிளேயர்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் ஆகிய நிறுவனங்களும் பெட்ரோல் விநியோகத்தில் இருக்கின்றன. பெட்ரோல் விலையைப் பொருத்தவரை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பே விலையை முடிவு செய்கின்றன. அவர்கள் நிர்ணயம் செய்யும் விலையில் தான் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல்கள் விற்பனையாகிறது.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதிக்குப் பிறகு நீண்ட நாட்களுக்கு அதாவது 137 நாட்கள் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இது உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் காரணம் எனச் சொல்லப்பட்டது. அதன்பின்பு 2022 மார்ச் 22ம் தேதிக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலையில் பயங்கரமான மாற்றம் ஏற்பட்டது. இரண்டே வாரங்களில் லிட்டருக்கு ரூ10 வரை விலையேறியது.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

இதனால் மக்கள் எல்லோரும் திண்டாடினர். இதையடுத்து இதிலிருந்து மீண்டு வர மத்திய அரசு வரிகளைக் குறைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறியிருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது நஷ்டம் என்று தான் ரிப்போர்ட் வந்துள்ளது.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் கடந்த ஏப்-ஜூன் மாதம் வரையிலான அறிக்கையைப் பார்க்கும் போது ஒட்டு மொத்தமாக ரூ18,480 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நஷ்டம் பெட்ரோல், டீசலிருந்து மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அந்நிறுவனம் தயாரிக்கும் எல்லா தரப்பு தயாரிப்புகளிலிருந்தும் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், எல்பிடி ஆகிய 3 தயாரிப்புகளையும் தயாரிக்கின்றனர்.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

இது குறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சேர்மன் அருண்குமார் சிங் கூறும் போது : " சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்தை எண்ணெய் நிறுவனங்களே தாங்கி வருகின்றனர். நாங்கள் ஒவ்வொரு நாளும் விலை அதிக அளவு ஏற்றி இறக்குவதில்லை, சில நாட்கள் நஷ்டத்தில் விற்பனை செய்கிறோம், சில நாட்கள் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட லாபத்தில் விற்பனை செய்கிறோம்.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

கடந்த 3 மாதங்களாக நஷ்டம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்யும் பணியில் தற்போது இறங்கியுள்ளோம் அடுத்த மாதம் முதல் எல்பிஜி நஷ்டத்திலிருந்து மீண்டெழும். இதுவரை ஏற்பட்டு வந்த பெட்ரோல் நஷ்டம் தற்போது குறைந்துள்ளது. இந்த 3 மாத நஷ்டம் தற்காலிகமானது தான். விரைவில் மீண்டெழுவோம். தொடர்ந்து நஷ்டத்தில் குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்ய முடியாது" எனக் கூறியுள்ளார்.

யானை விலை குதிரை விலை விற்றாலும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறதாம் . . .

கடந்த 3 மாதத்தில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ20-25 வரையிலும், டீசல் விலை ரூ14-18 வரையிலும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இவ்வளவு அதிகமான விலையில் பெட்ரோல் டீசல்கள் விற்பனையாகியும் இன்னும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகக் கூறுவது விரைவில் பெட்ரோல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிதான். எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, August 30, 2022, 11:06 [IST]
English summary
Oil companies are making a loss on petrol diesel know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+