கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், ஓலா நிறுவனம் மிகப்பெரிய உதவியை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படும் கோவிட்-19 வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் தற்போது வரை 39,070 பேரின் உயிரை பறித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருவது மக்கள் மத்தியில் கவலையை உண்டாக்கியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 8 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 8,03,772 பேரை கோவிட்-19 வைரஸ் தாக்கியுள்ளது. அதிகாரப்பூர்வமாக மருந்து எதுவுமே கண்டுபிடிக்கப்படாத சூழலில், தற்போது வரை 1,72,435 பேர் கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

இது ஒன்றுதான் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவலால், அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையும், போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

எனவே பஸ், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், ஓலா கேப்ஸ் நிறுவனம் அரசுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. இதன்படி அரசாங்கத்திற்கு 500 வாகனங்களை வழங்க ஓலா கேப்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டாக்டர்களை ஏற்றி செல்வதற்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான மற்ற பணிகளுக்கும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். இந்த தகவலை கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயன் கூறியுள்ளார். டாக்டர்களின் போக்குவரத்திற்கும் மற்றும் இதர கோவிட்-19 வைரஸ் தொடர்பான பணிகளுக்கும் பயன்படுத்துவதற்கு, 500 வாகனங்களை அரசுக்கு தர ஓலா கேப்ஸ் ஒப்பு கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

'கர்நாடகாவில் கோவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு 500 ஓலா வாகனங்களை தர ஓலா கேப்ஸ் சம்மதித்துள்ளது. மருத்துவர்களின் பயணங்களுக்கும் மற்றும் இதர கோவிட்-19 தொடர்புடைய நடவடிக்கைகளுக்கும் இந்த வாகனங்கள் அரசால் பயன்படுத்தப்படும். ஓலா கேப்ஸின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது' என அஸ்வத் நாராயன் ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில், ஆட்டோமொபைல் துறை தொடர்பான நிறுவனங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்க முன்வந்துள்ளது. வெறும் 48 மணி நேரங்களுக்கு உள்ளாக வென்டிலேட்டர் புரோட்டோடைப்பை மஹிந்திரா உருவாக்கியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் நோயாளிகளின் சுவாச மண்டலத்தை தாக்குவதால், வென்டிலேட்டர்கள் தற்போது அதிக அளவில் தேவைப்படுகின்றன. எனவே மஹிந்திரா நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. மஹிந்திரா மட்டுமல்லாது, உலக அளவில் ஃபோர்டு, டெஸ்லா மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ola Cabs Gives 500 Vehicles To Karnataka Government For Covid-19 Related Activities. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X