ஒடம்பு ஃபுல்லா மச்சம்! ஓலா நிறுவனத்தின் ஊழியராக மாறிய அதிஷ்டக்கார நாய்! ஐடி கார்டுலாம் குடுத்துட்டாங்க!
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சந்தையில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்திருப்பது ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric). ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்கள் இருந்திருந்தாலும் கூட, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது.
இதன் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ந்து, எலெக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes) மற்றும் எலெக்ட்ரிக் கார்களையும் (Electric Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட தொடங்கியுள்ளது. ஓலா எலெக்ட்ரிக்கின் நிறுவனரும் (Founder), தலைமை செயல் அதிகாரியுமான (CEO) பாவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) இந்த தகவல்களை டிவிட்டர் (Twitter) மூலம் பகிர்ந்து வருகிறார்.

இந்தியாவின் தொழில் அதிபர்கள் பலரும் டிவிட்டர் தளத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக உள்ளனர். மஹிந்திரா குழுமத்தின் (Mahindra Group) தலைவர் ஆனந்த் மஹிந்திராவை (Anand Mahindra) இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். அதேபோல் பாவிஷ் அகர்வாலும் டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர்தான்.
இவரது பதிவுகளுக்கு 'லைக்ஸ்' குவிவது வாடிக்கையான ஒரு விஷயம்தான். இந்த வரிசையில் பாவிஷ் அகர்வாலின் ஒரு டிவிட்டர் பதிவு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகவும் அழகான நாய் (Dog) ஒன்றை, ஊழியராக (Employee) நியமனம் செய்திருப்பதுதான் இந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பதற்கான காரணம்.
பாவிஷ் அகர்வால் டிவிட்டரில் தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், ''புதிய சக ஊழியர் தற்போது அதிகாரப்பூர்வமாக'' என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு நாயின் ஐடி கார்டு புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. இது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஐடி கார்டு ஆகும்.
இந்த ஐடி கார்டின் முன் பகுதியில், புதிதாக இணைந்துள்ள நாயின் புகைப்படத்தை நம்மால் காண முடிகிறது. அந்த நாயின் பெயர் பிஜிலி (Bijlee) என குறிப்பிடப்பட்டுள்ளது. பின் பகுதியில் ஊழியர் கோடு 440V எனவும், ரத்த வகை PAW +ve எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 'கான்டாக்ட்' என்ற பிரிவில், I Prefer Slack என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 'நான் ஸ்லாக்கை விரும்புகிறேன்' என அர்த்தம். ஸ்லாக் என்பது மெசேஜிங் பிளாட்பார்ம் ஆகும். எனவே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மனித ஊழியர்கள் விரும்பினால், பிஜிலியை ஸ்லாக் மூலமாக தொடர்பு கொள்ள முடியும். அதே நேரத்தில் 'எமர்ஜென்ஸி கான்டாக்ட்' என்ற இடத்தில் BA's Office என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் BA என்பது Bhavish Aggarwal என்பதன் சுருக்கமாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். பாவிஷ் அகர்வாலின் இந்த வித்தியாசமான பதிவை டிவிட்டரில் சுமார் 1.50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அத்துடன் நெகிழ்ச்சிகரமான மற்றும் நகைச்சுவையான கமெண்ட்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு நிறுவனம் நாய் போன்ற செல்லபிராணிகளை ஊழியர்களாக நியமனம் செய்வது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக ஹூண்டாய் (Hyundai) மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் நாய்களை ஊழியர்களாக நியமனம் செய்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அதிலும் டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் (Elon Musk) நாய்தான் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என அறிவித்து சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். நாய்கள் போன்ற செல்லப்பிராணிகள், முன்னணி நிறுவனங்களில் ஊழியர்களாக இணைந்து வருவது குறித்த உங்கள் கருத்தை, கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








