இந்த தீபாவளிக்கு ஓலாவிற்கு அடித்த பம்பர்... இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்காத மகுடம்...
ஓலா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 20 ஆயிரம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஒரே மாதத்தில் 60 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் சந்தித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

ஓலா நிறுவனம் தற்போது இந்தியாவில் அதிகமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக விற்பனையில் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. முதலில் வெறும் ஓலா எஸ்1 ப்ரோ என்ற ஸ்கூட்டரை மட்டும் விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓலா எஸ்1 என்ற ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்நிலையில் கடந்த தீபாவளியை முன்னிட்டு ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 ஏர் என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஓலா நிறுவனம் அடுத்தடுத்து குறைந்த விலை ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஓலா நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் தீபாவளி என்பதாலும் ஓலா நிறுவனத்தின் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது.

ஓலா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 20 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதாவது இந்நிறுவனம் ஒரே மாதத்தில் 60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த அளவிற்கு எலெக்ட்ரிக் வாகன விற்பனை நடந்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன் முறை, இந்த விற்பனையால் இந்தியாவில் ஒட்டு மொத்த எலெக்டரிக் இரு சக்கர வாகன விற்பனையே 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பண்டிகை காலம் என்பதால் பெரிய அளவில் விற்பனை அதிகமாகியுள்ளது. குறிப்பாக நவராத்திரி காலகட்டத்தில் அந்நிறுவனத்தில் சராசரியாக ஒரு நாளுக்கு விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட 4 மடங்கு அதிகம் விற்பனையானது. அதே போல விஜயதசமி, தசரா நாட்களில் வழக்கமாக விற்பனையாவதை விட 10 மடங்கு அதிகம் விற்பனையாகியுள்ளது.

இதனால் இந்தியாவில் தொடர்ந்து நம்பர் 1 விற்பனை என்ற நிலையை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் பெற்றுள்ளது. இது இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்த பிறகு விற்பனை மேலும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறைந்த விலை ஸ்கூட்டர் என்பதால் பலர் தயங்காமல் அந்த ஸ்கூட்டரை தேர்வு செய்து வாங்குவதார்கள் என கூறப்படுகிறது.

ஓலா நிறுவனம் எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான டெலிவரி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். அந்த ஸ்கூட்டர் 2.47 கிலோவாட்ஹவர் பேட்டரியை கொண்டது. இது முழுவதுமக சார்ஜ் ஏற 4.5 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். இந்த ஸ்கூட்டர் பேட்டரி பேக் உடன் சேர்த்து மொத்தமே 99 கிலோ எடையை கொண்டது தான்.

இந்த ஸ்கூட்டரின் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க்களும், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு வீலர்களிலும் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வீலும் அலாய் வீல் கிடையாது. இந்த ஸ்கூட்டரில் 4.5 கிலோ வாட்ஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை செல்ல அனுமதிக்கும். மேலும் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 4.3 நொடிகளில் பிக்கப் செய்துவிடும்.

ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஃப்ளோர் போர்டில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்நிறுவனம் ஃப்ளோர் போர்டை ஃபிளாட்டாக இருக்க அனுமதித்துள்ளது. இதுவே மற்ற ஸ்கூட்டர்களில் ஃபிளோர் போர்டுகள் கர்வ்டாக இருக்கும்.

இது மட்டுமல்ல ஓலா நிறுவனம் கடந்த தீபாவளியை முன்னிட்டு மூவ் ஓஎஸ் 3யின் பீட்டா வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பலர் இந்த அப்டேட்டை பெற்றுள்ளனர். இதன் இறுதி வெர்சன் டிசம்பர் 2022ல் கிடத்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவ் ஓஎஸ் 3ல் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்கும் இருக்கும் வசதியாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது சாஃப்ட்வேரில் அப்டேட் செய்யப்படும் என சொன்ன வசதிகள் எல்லாம் தற்போது அப்டேட் ஆகியுள்ளன.


Click it and Unblock the Notifications








