இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!

இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா மற்றும் ஓலா அறக்கட்டளை இணைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!

பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, ஓலா அறக்கட்டளை எனும் பெயரில் குறிப்பிட்ட சில நாடுகளில் தனது தொண்டு சேவைகளை செய்து வருகின்றது. இந்த நிலையில், ஓலா அறக்கட்டளையும், கிவ் இந்தியா தொண்டு நிறுவனமும் கூட்டணி அமைத்திருக்கின்றன.

இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!

இந்த கூட்டணியின் வாயிலாக இலவச ஆக்சிஜன் சேவையை வழங்க இருப்பதாக ஓலா அறிவித்திருக்கின்றது. இதனை தனது ஓலா கால் டாக்சி புக்கிங் ஆப்பின் வாயிலாக வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!

முதல் கட்டடமாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 500 ஆகிசிஜன் சிலிண்டர்கள் அடங்கிய வாகனத்தை நிறுவனம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றது. இந்த சேவையை நாடு முழுவதும் விரிவாக்கும் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!

குறிப்பாக, கொரோனா தொற்றால் அதிகம் சிக்கி தவித்து வரும் மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு முன்னுரிமை அளித்து இச்சேவையை தொடங்கி வருகின்றது ஓலா. ஆக்சிஜன் டேக்ஸி தேவைப்படுவோர் இதற்கான கோரிக்கையை ஓலா ஆப் வாயிலாக மட்டுமே கொடுக்க முடியும்.

இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!

இதன் பின்னரே ஆக்சிஜன் அடங்கிய வாகனம் நோயாளியின் வீட்டுக்கே சென்று உரிய சேவையை வழங்க அனுப்பி வைக்கப்படும். நோயாளியின் உடல்நிலை தேர்ச்சி அடைந்த பின்னரே சிலிண்டர்கள் மீண்டும் ஓலா எடுத்து செல்லும் அதுவரை அதனை நோயாளி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!

இந்த பிக்-அப் மற்றும் டெலிவரி சேவையை முழுக்க முழுக்க இலவசமாக செய்து வருகின்றது ஓலா. இதற்காகவே கிவ்இந்தியா தொண்டு நிறுவனத்துடன் ஓலா தனது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. O2ஃபார் இந்தியா எனும் திட்டத்தின்கீழ் இரு நிறுவனங்களும் இச்சேவையை தொடங்கியிருக்கின்றன.

இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!

இந்தியாவின் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் சில தங்களின் உதவி கரங்களை நீட்டி வருகின்றன. சமீபத்தில், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் கொரோனா நிவாரண சேவையை அறிவித்தன.

இலவச ஆக்சிஜன் சேவைக்காக கிவ்இந்தியா உடன் இணைந்த ஓலா... வீட்டுக்கே வந்து தருவாங்க!!

இந்த நிலையிலேயே ஓலா அறக்கட்டளை-கிவ்இந்தியா கூட்டணி இலவச ஆக்சிஜன் சேவையை நாட்டில் தொடங்கியிருக்கின்றன. இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. குறிப்பாக, தங்களின் ஊழியர்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்றும் வகையில் தடுப்பூசிகளை பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ola Foundation And GiveIndia Jions To Provide Free Oxygen By O2 For India Initiative. Read In Tamil.
Story first published: Monday, May 10, 2021, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X