இந்தியாவில் விரைவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

Written By:

ஓலா கால் டாக்ஸி நிறுவனம் விரைவில் இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் கார் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தாண்டில் சிறியளவில் அதற்கான தொழில்நுட்பம் பெற்ற கார்களை நாட்டின் சில பகுதிகளில் கொண்டுவரவும் அந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. 

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

இந்தியப் போக்குவரத்து துறையில் ஓலாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஓலாவின் இந்த அபார வளர்ச்சி மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களின் பேருந்து கட்டணங்களை குறைக்கும் அளவிற்கு சென்று விட்டது.

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

இந்தியாவில் ஓலா கால் டாக்ஸி சேவைக்கு பெருகி வரும் ஆதரவை பார்த்த அந்நிறுவனம், தற்போது மின்சாரத்தில் மூலம் இயங்கும் கார் சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது. இதனை சோதனை முயற்சியாக செய்து பார்க்க இந்தியாவின் சில முக்கிய நகரங்களையும் ஓலா தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

இந்திய சந்தையில் கால் டாக்ஸி சேவையை வழங்கும் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரிக்கு நிலை உள்ளது. இதை தக்கவைத்துக்கொள்ளவே ஓலா தற்போது மின்சாரத்தால் இயங்கும் கார் சேவையை வழங்கவுள்ளது.

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

மின்சார பயன்பாடு கொண்ட வாகனங்கள் இந்தியாவில் வளர்ச்சியடையும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதில் தற்போது பயணிக்கவேண்டுமானால் சந்தை நிலவரத்தை புரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல வழிமுறைகளை திட்டமிடவேண்டும். அதைத் தான் தற்போது ஓலா நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

பெட்ரோலிற்கான விலையை விட, மின்சாரத்தால் இயங்கும் கார்களுக்கான பராமரிப்பு செலவு சிறிது அதிகம் தான். மேலும் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் குறைவே. இதனால் தான் தற்போது பெரும்பாலான மக்கள் மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள்.

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

மேலும், பெட்ரோலிற்கு ஆகும் செலவை விட மின்சார கார்களுக்கான பேட்டரிகளின் பராமரிப்பும் அதிகம் தான். ரீசார்ஜ் செய்யவும், அதற்கு ஏற்றார் போன்ற வசதிகளை அமைத்துக்கொள்ளவும் இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பெரும் கவலை.

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

அதுவும் பேட்டரிக்கான செலவு மட்டுமே அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் வரவேற்பு பெறும் பட்சத்தில் பேட்டரிக்கான விலையும் மலிவாகும் என்பது ஓலாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியாவில் மின்சார பயன்பாட்டில் இயங்கும் வாகனங்களுக்கான சூழ்நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் சில பகுதிகள், ஆந்திர பிரதேசம் மற்றும் நாக்ப்பூர் என இந்தியாவில் சில மாநிலங்கள் மின்சார வாகனங்களுக்கான பயன்பாடுகளை ஊக்குவிக்க தொடங்கியுள்ளன.

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

குறிப்பாக ஆந்திர பிரதேச மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு மின்சார வாகன பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலை அனைத்து மாநிலங்களில் வரும் காலங்களில் நிச்சயம் உருவாக வாய்புள்ளது என்பது ஆட்டோமொபைல் வல்லுநர்களின் கணிப்பு.

இந்தியாவில் மின்சார கால் டாக்ஸி சேவை: ஓலா அறிவிப்பு

மின்சார வாகனங்களுக்கான சந்தையை ஓலா கால்டாக்ஸி நிறுவனம் உருவாக்கினால், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் சேர்த்தே உருவாக்கும். இதனால் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான உற்பத்தி திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 2016-17ம் நிதியாண்டில் தேசியளவில் 22,000 எண்ணிக்கையிலான மின்சார கார்கள் விற்கப்பட்டுள்ளன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
App-based ride hailing company Ola is geared up to introduce electric taxis in the country. Read now to know more about the electric vehicles to be introduced by Ola.
Story first published: Saturday, April 8, 2017, 15:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark