ஓலா, ராபிடோ பைக் டாக்ஸிகளுக்கு மீண்டும் அனுமதி! புதுசா சட்டத்தையே கொண்டு வந்துட்டாங்க!

டில்லியில் மீண்டும் ஓலா, ராபிடோ, பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் இயற்றப்படவுள்ளது. ஏற்கனவே இந்த சேவைகளுக்குக் கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அனுமதியை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் கேப் சேவை மற்றும் பைக் டாக்ஸி போன்ற சேவைகளுக்கு அம்மாநில அரசால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அம்மாநில அரசு மோட்டார் வாகன அக்ரீகேட்டர் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் கேப் அக்ரீகேட்டர் மற்றும் டெலிவரி சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களுக்கான விதிகளை வகுத்துள்ளது. இதன்படி இனி டில்லியில் ஆன்லைன் வழியாக கேப் சர்வீஸ் மற்றும் பைக் டாக்ஸி சேவைகளை நடத்த முடியும்.

motor vehicle aggregator scheme 2023

ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. டில்லியில் இனி பைக் டாக்ஸி மற்றும் பைக் மூலம் டெலிவரி சர்வீஸ் வழங்குபவர்கள் இனி எலெக்ட்ரிக் டூவீலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்த விதிமுறை சொல்கிறது. இது டில்லியில் தனி நபர் அல்லது ஒரு நிறுவனம் டூவீலர்களை தங்கள் சேவையாகக் கையாண்டால் அவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டெலிவரி சர்வீஸ், கொரியர் சர்வீஸ், இ-காமர்ஸ் சேவைகள், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றிற்கு டூவீலர்களை பயன்படுத்தினால் அது கட்டாயமாக ஏதாவது ஒரு எலெக்ட்ரிக் டூவீலராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்படும். இது அம்மாநிலத்தின் இவி பாலிசியையும் ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான திட்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

motor vehicle aggregator scheme 2023

இது மட்டுமல்ல இப்படியான அக்ரீகேட்டர் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வாகனங்களில் கட்டாயம் பேனிக் பட்டனைப் பொருத்த வேண்டும். இது டில்லி எம்ர்ஜென்றாி எண்ணான 112 உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என இந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்த சேவையில் குறைபாடு இருந்தாலும் அதைச் சேவையாளர்கள் புகாரளிக்கவும் அந்த புகாருக்கு உடனடியாக பதிலளிக்கும் மெக்கானிசமும் நிச்சயம் இருக்க வேண்டும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது போக வாகனத்தின் ஃபிட்னஸ், மாசு சான்று, பெர்மிட் காலம், ஓட்டுநர்களின் லைசென்ஸ் மற்றும் ஓட்டுத் திறன் ஆகியவற்றை தொடர்ந்து அக்ரீகேட்டர் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் கேப் அக்ரீகேட்டர்கள் பெட்ரோல் வானகங்களை இயக்கினாலும் ஆண்டிற்குப் புதிதாகச் சேர்க்கப்படும் வாகனங்களில் 5 சதவீதமாவது எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்க வேண்டும் என்ற விதிமுறையையும் வகுத்துள்ளது.

motor vehicle aggregator scheme 2023

மேலும் அடுத்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு கேப் சர்வீஸில் பெட்ரோல் வாகனங்களை நிச்சயம் இணைக்கக் கூடாது. எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், 2030ம் ஆண்டு ஏப்1ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வாகனங்கள் கேப் சர்வீஸிலேயே இருக்கக்கூடாது, எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது டில்லி அரசு வெளியிட்டுள்ள இந்த சட்ட திருத்தம் ஆளுநரின் ஒப்புதலுக்குப் போயுள்ளது. அவரின் ஒப்புதலுக்குப் பிறகு இது மக்களிடம் கருத்துக் கேட்க வைக்கப்படும் மக்கள் கருத்துக்களை எடுத்துக்கொண்ட பின்பு இது முழுமையான வடிவம் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேப் அக்ரீகேட்டர் சேவை, பைக் டாக்ஸி, டெலிவரி சர்வீஸ் சேவைகளை அரசு கட்டுப்படுத்துவது வரவேற்கத் தக்க விஷயம் தான். இதற்காக டில்லி அரசு எடுத்த முயற்சி பாராட்ட தக்கது! இதே போல மற்ற மாநிலங்களும் இந்த சேவைகளில் அதிகம் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் ரோடு மேப்பை கொண்டு வர வேண்டும் எனச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 11, 2023, 21:00 [IST]
English summary
Ola rapido bike taxi got motor vehicle aggregator scheme 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X