ஓலா ஸ்கூட்டரில் உயிரை பணயம் வைத்த நபர்! இதை பார்த்த பின்னர் ஸ்கூட்டரை வாங்குவதில் தயக்கமே வேண்டாம்!!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுனமாக உருவெடுத்து இருக்கும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். ஆரம்பத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், புகார்களுக்கும் ஆளாகினாலும், அதன்பின் அதில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டுவந்து தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக ஓலா விளங்குகிறது. இந்த நிலையில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தரத்தை வெளிக்காட்டும் வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெங்களூரில் இருந்து பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ஓலா எலக்ட்ரிக் ஆகும். பெங்களூரில் தலைமையகத்தை கொண்டிருப்பினும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிக பெரிய தொழிற்சாலை நம் தமிழ்நாட்டின் ஓசூரில்தான் உள்ளது. ஒன்றல்ல, இரு தொழிற்சாலைகள் ஓலாவுக்கு சொந்தமாக ஓசூரில் செயல்படுகின்றன.

ola electric scooter rider performs

இவற்றின் மூலமாக கஸ்டமர்களிடம் இருந்து தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையை ஓலா எலக்ட்ரிக் நிவர்த்தி செய்து வருகிறது. அதாவது, மாதத்திற்கு மாதம் உற்பத்தி செய்யப்படும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. எந்தவொரு இடத்திலும் வேலை வேகமாக நடக்கிறது என்றாலே அங்கு சிறு, சிறு தவறுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், ஆரம்பத்தில் சில ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அவற்றின் கஸ்டமர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. ஆனால், சமீப காலமாக அந்த புகார்கள் எல்லாம் வெகுவாக குறைந்துவிட்டன. தற்போது உருவாக்கப்படும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரத்தை வெளிக்காட்டும் வகையில், 'வால் ஆஃப் டெத்' (Wall of death) சாகசத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ola electric scooter rider performs

சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு சென்றாலே வால் ஆஃப் டெத் சாகசத்தை பரவலாக அனைத்து இடங்களிலும் காண முடியும். அதாவது, நன்கு அகலமான கிணறு போன்ற இடத்திற்குள் சுவரின் மீது பைக்கை ஓட்டும் சாகசத்திற்கு பெயர் தான், வால் ஆஃப் டெத் ஆகும். ஒரேயொரு பைக் உடன் இல்லாமல், சில சமயங்களில் மிகவும் ஆபத்தான முறையில் 2 அல்லது 3 பைக்குகளை கூட சாகசக்காரர்கள் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.

ஆனால், அத்தகையவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது பைக்குகளே ஆகும்; ஸ்கூட்டர்கள் கிடையாது. அதுவும், அவர்கள் பயன்படுத்தும் பைக்குகள் இதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது போன்று இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு ஒருவர், ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வால் ஆஃப் டெத் சாகசத்தை செய்து, மெய்சிலிர்க்க வைத்துள்ளார். உண்மையில், பைக்கில் இந்த சாகசத்தை செய்வதை காட்டிலும் ஸ்கூட்டரில் செய்வது எளிது.

ola electric scooter rider performs

அதிலிலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இன்னும் எளிது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், பொதுவாக ஸ்கூட்டர்கள் என்றாலே எடை குறைவானவை. அதிலிலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்னும் எடை குறைவானவை. வால் ஆஃப் டெத் சாகசத்தை ஆரம்பத்தில் யமஹா ஆர்.எக்ஸ்100, சுஸுகி மேக்ஸ்100 போன்ற 2-ஸ்ட்ரோக் பைக்கில் செய்துக் கொண்டிருந்தனர். தற்போது ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா போன்ற பைக்குகளுக்கு மாறிவிட்டனர்.

இவ்வாறான சாகசங்களை சிலர் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, பஜாஜ் பல்சர் 150, டிவிஎஸ் அப்பாச்சி போன்ற எடைமிக்க பைக்குகளில் கூட செய்வதை பார்த்திருக்கிறோம். ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை ஆகும். அதுவும் இந்த வீடியோவில், சிலரை தவிர்த்து பார்வையாளர்களை அதிகம் பார்க்க முடியவில்லை. ஆதலால் இது ஒத்திகையாகவே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை போன்ற பெரும் மாநகரங்களில் கூட வால் ஆஃப் டெத் பைக் சாகசத்தை காண்பது அரிதாகிவிட்டது. ஏனெனில், இதற்கான செட்-அப்பை அமைப்பது கொஞ்சம் செலவுமிக்கதாக உள்ளது. தற்போது கிடைத்துள்ள வீடியோவில், ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டுபவர் நன்கு அனுபவமிக்கவர் போன்று தெரிகிறார். ஆதலால், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வைத்திருப்பவர்கள் இவ்வாறான சாகசத்தை எங்கேயும் செய்து பார்க்க வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 4, 2024, 14:01 [IST]
English summary
Ola s1 electric scooter rider performs wall of death stunt check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X