முழு நேர சாலையோர விற்பனையாளராக மாறிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. என்னமா கூவி கூவி விக்குறான்யா! வீடியோ!
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று முழு நேர சாலையோர வியாபாரியாக மாறி இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சுவாரஷ்யமான நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்த நிகழ்வு அரங்கேறியது? அது என்ன வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றது என்பது பற்றிய தகவலைப் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
முன்னாடி எல்லாம் நம்ம கோயம்பத்தூர் காரர்களை அதிகம் குசும்பு பிடித்தவர்கள் என கூற நாம் பார்த்திருப்போம். ஆனால், இப்போது இந்த டிரெண்ட் மாற தொடங்கி இருக்கின்றது. இந்த பட்டத்தை இனி வரும் நாட்களில் கேரளத்தவர்களுக்கு கொடுக்கலாம் என தெரிகின்றது. இதற்கு சான்றாக அந்த மாநிலத்தில் பல்வேறு குசும்பு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

மேலும், தொடர்ச்சியாக இப்போதும் சில புதிய சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டும் இருக்கின்றன. அந்தவகையில், கேரளவாசி ஒருவர் கீரையை விற்க விலை உயர்ந்த ஆடி காரில் வந்திறங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி சமீபத்தில் டிரெண்டாகியது. அவரும் சாலையோரத்திலேயே தன்னுடைய கீரை வகைகளை விற்கவே அந்த ஆடம்பர காரில் வந்திரங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோல், மற்றுமொரு நபர் தன்னுடைய விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சாலையோர வியாபாரத்திற்காக பயன்படுத்தும் புதிய வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த நபர் தன்னுடைய இ-ஸ்கூட்டரையே ஓர் வியாபாரி மாற்றியிருக்கின்றார் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. ஆமாங்க, அவருக்கு பதிலாக அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே கூவி கூவி வியாபாரத்தை மேற்கொள்கின்றது.

இதுகுறித்த வீடியோவே தற்போது இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. கூவி கூவி வியாபாரம் செய்யும் அந்த வாகனம் இந்தியர்களின் பிரபல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஓலா எஸ்1 ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 'பார்டி மோட்' எனும் பிரத்யேக வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதன் வாயிலாக நமக்கு பிடித்த இசையை ஒலிக்கச் செய்துக் கொள்ள முடியும். மேலும், இந்த மோடில் லைட்டுகள் அனைத்தும் மின்மினுக்க செய்யும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இசைக்கு ஏற்ப ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கும் லைட்டுகள் அனைத்தும் பார்ட்டி மோடில் ஒளிரச் செய்யும்.
இத்தகைய வசதியையே ஓர் நபர் தன்னுடைய தயாரிப்பை சாலையோரத்தில் விற்பனைச் செய்ய பயன்படுத்தி இருக்கின்றார். ஆயுர்வேதிக் ஆயிலை விற்பனைச் செய்யவே இந்த அம்சத்தை அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இந்த சம்பவமும் கேரளாவிலேயே அரங்கேறி இருக்கின்றது. ஆனால், எந்த பகுதி என்பது பற்றிய துள்ளியமான தகவல் வெளியாகவில்லை.
ஸ்கூட்டர் மட்டும் தனியாக நின்று வியாபரத்திற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. மேலும், அதன் சத்தம் ஓர் மிகப் பெரிய ஸ்பீக்கரில் இருந்து வெளி வருவதைப் போலவும் தெரிகின்றது. ஆனால், ஸ்கூட்டரிலேயே பார்டி மோடிற்காக வழங்கப்பட்டு இருக்கும் ஸ்பீக்கரில் இருந்தே அவ்வளவு சத்தமும் வந்திருக்கின்றது.
பலர் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருக்கின்ற சூழலில், கேரளாவைச் சேர்ந்தவர் சற்று வித்தியாசமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே வியாபாரியாக மாற்றி இருக்கின்றார். இதுபோன்று இன்னும் பல விநோதமான சிறப்பம்சங்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓலா வழங்கி இருக்கின்றது. இதனால்தான் இந்தியர்கள் மத்தியில் ஓலா எஸ்1 ப்ரோவிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எஸ்1 ப்ரோ ரூ. 1.40 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 200 கிமீ வரை ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்ற ஏகப்பட்ட அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்கி இருக்கின்றது. என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications