ஓலா ஸ்கூட்டர் வாங்கப்போறீங்களா? அதுக்கு முன்னாடி இதை பத்தி நீங்க கட்டாயம் தெரிஞ்சுகிட்டே ஆகனும்!
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி தருவதாக கூறி ரூ80 ஆயிரத்தை ஏமாற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். இவர் ஓலா ஸ்கூட்டரை விற்பதாக சொல்லி போலி புக்கிங் சென்டரை நடத்தி வந்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
மும்பையை அடுத்த தானேவில் டோம்பிவாலி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிவ்ராம் பாண்டா, இவர் ஆன்லைன் மூலம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்வதாக ரூ80,999 பணத்தை ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பணம் ஏமாற்றப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆன்லைனில் கூகுள் விளம்பரம் மூலம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யும் நபர் என விளம்பரம் செய்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட டில்லியைச் சேர்ந்த நபர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைத்துள்ளார். ஓலா நிறுவனம் ஆன்லைனிலேயே புக்கிங்கை பெற்று வரும் நிலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க அவர் ஆன்லைனில் தேடியுள்ளார்.
அப்பொழுது அவருக்கு ராகவ் சர்மா என்ற பெயரில் ஒரு தொடர்பு எண் ஒன்று விளம்பரமாக வந்துள்ளது. அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்ட போது மறு முனையில் பேசியவர் தன்னை ராகவ் சர்மா என அறிமுகப்படுத்திக்கொண்டார். தான் டில்லியில் குறிப்பிட்ட பகுதியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் பிரதிநிதி என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க ரூ499 முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறி ஒரு வங்கி கணக்கை கொடுத்துள்ளார். அந்த தொகையை கொண்டு ஸ்கூட்டருக்கான முன்பதிவு செய்யப்பட்ட பின்னர் முழு தொகையை செலுத்தி ஸ்கூட்டரை வாங்கலாம். எனவும் கூறியுள்ளார். முதலில் ரூ499 பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் பாதிக்கப்பட்ட நபர் போட்டுள்ளார். அடுத்தாக முன்பதிவு செய்துவிட்டதாக சொல்லி ரூ80,999 பணத்தை செலுத்த சொல்லி பாண்டா கேட்டுள்ளார். அதை நம்பி பாதிக்கப்பட்ட நபரும் பணத்தை செலுத்தியுள்ளார்.
செலுத்திய பணத்திற்கு ரசீது கேட்ட போது பாண்டே ஏதேதோ சொல்லி மழுப்பியுள்ளார். ஸ்கூட்டர் ஒரு வாரத்தில் உங்கள் வீடு வந்து சேரும் என சொல்லிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். இதன் பின் சந்தேகப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து டில்லி போலீசில் தகவல் சொல்லியுள்ளார் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் ஏமாற்றப்பட்ட விவகாரம் தெரியவந்துள்ளது.
பின்னர் பாதிக்கப்பட்ட நபர் பணம் ஏமாந்ததை தெரிந்ததும் அவர் பணத்தை செலுத்திய வங்கி கணக்கை போலீசார் ஒப்படைத்துள்ளார். அந்த வங்கி கணக்கு ராஜேந்திர சிவராம் பாண்டா என்பவரின் பெயரில் இருந்துள்ளது. வங்கி கணக்கிலிருந்த முகவரிக்கு சென்று பார்த்த போது குறிப்பிட்ட நபர் அந்த முகவரியை சில மாதங்களுக்கு முன்னரே காலி செய்து சென்றது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை விசாரித்து அவர் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் மீட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபகாலமாக இப்படியாக ஆன்லைன் மோசடிகள் வித விதமாக அதிகமாக நடந்து வருகிறது. மக்கள் இதில் உஷராக இருக்க வேண்டும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறை அதிகமாக பணம் பரிமாறப்படும் இடம் என்பதால் அதிகமாக ஏமாற்று வேலைகள் நடக்கிறது. இதை அரசும் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








