முக்கிய முடிவை அறிவித்த ஓலா நிறுவனம்... ப்ளே சேவையை நிறுத்தப்போவதாக அறிவிப்பு!
ஓலா நிறுவனம் தனது வாடிக்கையாள்களுக்கான பிரைம் சேவைகளை வரும் நவம்பர் 15ம் தேதி முதல் நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஓலா நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் கேப் சேவைகளை வழங்கி வரும் முக்கியமான நிறுவனம். லட்சக்கணக்கான மக்கள் தினமும் இந்த சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக ஓலா நிறுவனம் தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு சில பிரிமியம் சேவைகளை வழங்கி வந்தது.

இந்த பிரிமியம் சேவையின் கீழ் கேப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச வைஃபை, கேப் என்டர்டெயின்மெண்ட், ரேடியோ உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் ஆப்ஷன் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தேவைப்பட்டால் இந்த வசதிகளை அவர்களே பயன்படுத்திக்கொள்ள முடியும். ஓலா ப்ளே என்ற கருவியின் மூலமாக இத்தனை சேவைகளையும் ஓலா நிறுவனம் வழங்கி வந்தது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் திடீர் முடிவாக தற்போது இந்தியா முழுவதும் உள்ள இந்த ஓலா ப்ளே சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 15ம் தேதியுடன் ஓலா நிறுவனம் தனது சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதுவரை மட்டுமே பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால் இந்த சேவை மும்பை, டில்லி , பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டும் செயல்பாட்டில் இருக்கும். அதுவும் வழக்கமான பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஓலா ப்ளே சர்வீஸ் இல்லாமல், இந்த ஓலா ப்ளே சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் மாத சந்தா கட்டி இந்த ப்ரைம் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.
ஓலா நிறுவனம் இந்த ஓலா ப்ளே சேவையை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. 6 ஆண்டுகளாகச் செயல்பாட்டிலிருந்த சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது பல ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவையை நிறுத்தியதற்கான காரணத்தை ஓலா நிறுவனம் தெளிவாகச் சொல்லவில்லை.
இதை மிஸ் பண்ணாதீங்க:
மாறாகக் கசிந்த தகவலின் படி இந்த சேவையை மிகச் சொற்பமான நபர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் பயன்படுத்தாமல் தேவையில்லாமல் இருக்கிறது என அந்நிறுவனம் கருதியதால் செலவைக் குறைக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது குறித்த உங்கள் சேவையை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








