இந்தியாவில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

இந்தியாவில் அடுத்த ஆண்டிற்குள் 10,000 எலெட்ரிக் வாகனங்களையும் 2021ம் ஆண்டிற்குள் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாடிற்டிற்கு கொண்டு வர ஓலா நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளது.

By Balasubramanian

இந்தியாவில் அடுத்த ஆண்டிற்குள் 10,000 எலெட்ரிக் வாகனங்களையும் 2021ம் ஆண்டிற்குள் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாடிற்டிற்கு கொண்டு வர ஓலா நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளது.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

இந்தியாவில் டாக்ஸி சேவையில் முக்கிய பங்கு வகிப்பது ஓலா நிறுவனம். இந்நிறுவனம் இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள பெரும்பாலானா நகரங்களில் தங்களின் சேவையை வழங்கி வருகின்றனர்.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

தமிழகத்தை பொருத்தவரை , சென்னை, திருச்சி, கோவை, சேலம், தஞ்சை, திண்டுக்கல், ஒசூர், மதுரை, திருநெல்வேலி, உள்ளிட்ட பல மாவட்டங்களிலச் சேவையை வழங்கி வருகிறது. மேலும் இதை பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சில நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் அந்த வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம்காட்டி வருகின்றனர்.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

அதற்கு முக்கிய காரணம் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் ஏற்றும் மையங்கள் இல்லாத காரணம் தான். ஆங்காங்கே பெட்ரோக் பங்க்குகள் இருக்கும் போது எலெக்டரிக் கார்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன் இல்லாதது பெரும் குறைதான்.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

அதே போல் புதிய ரக வாகனமாக உள்ளது ஏதேனும் குறைகள் உள்ளதால் இதில் பிரச்னை ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்வது போன்ற குழப்பங்களும் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதை சீர் செய்யும் வகையில் இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்க அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் ஒரு முயற்சியாக டாக்ஸி நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. எலெக்ட்ரிக் வாகனங்களை அவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல் குறித்து அறிந்து கொண்டு அதற்கான சிக்கல்களை அரசு தற்போது தீர்த்து வைத்துள்ளது.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

இந்நிலையில் ஓலோ நிறுவனம் நாட்டின் சில பகுதிகளில் மட்டும் எலெக்ட்ரிக் கார்களை கால் டாக்ஸியாக சோதனை முறையில் முயற்சி செய்தனர். அது வெற்றி கரமான செயல்படுவதால் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

இதையடுத்து அடுத்த ஆண்டிற்குள் குறைந்தது 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக ஓலா நிறுவனம் மூலம் கார்களை இயக்கி வருபவர்களிடம் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த 10 ஆயிரம் வாகனமும் மூன்று சக்கர வாகனமாக பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

அது மட்டுமல்லாமல் வரும் 2021ம் ஆண்டிற்குள் அந்நிறுவனம் சார்பில் இந்தியாவில் மொத்தம் 10 லட்சம் எலெக்டரிக் வாகனங்களை இயக்க முடிவு செய்து அதற்கான பணிகளை துவங்கியுள்ளது. டில்லி போன்ற நகரங்களில் ஏற்கனவே எலெக்ட்ரிக் மூன்று சக்கரவாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதனால் அங்கு இத்திட்டத்திற்கு அனுமதி கிடைக்க பெரும் பிரச்சனை இருக்காது என கூறப்படுகிறது.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

இதனால் அது போன்ற நகரங்களில் ஓலா நிறுவனம் இது போன்ற சேவையை முதலில் துவங்கி பின்னர் விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஓலா நிறுவனம் மூலம் 10 லட்சம் டிரைவர்கள் இயங்கி வருகின்றனர். தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் டிரைவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

10,000 எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்குகிறது ஓலா நிறுவனம்

இந்தியாவில் ஆண்டிற்கு விற்பனையாகும் வாகனங்களின் எண்ணிக்கையில் 0.1 சதவீத வாகனம் தான் எலெக்ட்ரிக் வாகனமாக உள்ளது. அதாவது ஆண்டிற்கு 30 லட்சம் வாகனங்கள் மட்டுமே வாங்கப்படுகிறது. ஆனால் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட்டை ஒதுக்கியது. 16-18 வயது உள்ளவர்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்கலாம் என்று அனுமதியை கொண்டு வந்தது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ola To Add 10,000 New Electric Vehicles To Its Fleet.Read in Tamil
Story first published: Monday, May 21, 2018, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X