ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

ஓலா கேப்ஸ் நிறுவனம் வரும் ஓராண்டில் 10,000 எலக்ட்ரிக் கார்களை தனது கேப்ஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

By Balasubramanian

ஓலா கேப்ஸ் நிறுவனம் வரும் ஓராண்டில் 10,000 எலக்ட்ரிக் கார்களை தனது கேப்ஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

மத்திய அரசு எலக்ட்ரிக் கார்களை அதிக அளவில் இந்தியாவில் மக்களை பயன்படுத்த வைக்க திட்டமிட்டு வரும் நிலையில் ஓலா நிறுவனமும் இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

ஏற்கனவே கடந்தாண்டு மே மாதம் நாக்பூரில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் கார் சேவையை துவங்கியது. அதை மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

இதில் எலெக்ட்ரிக் கார்கள், எலெக்ட்ரிக் ஆட்டோக்கள், எலெக்ட்ரிக் பஸ்கள், வாகனத்திற்கு மேல் சோலார் பேனல் அமைத்தல், சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைத்தல் ஆகியன உள்ளடங்கும். சுமார் ஒராண்டாக இந்த சேவை வெற்றிகரமாக நடந்து வருகிறது.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

இந்நிலையில் எலெக்ட்ரிக் கார் சேவையை விரிவு படுத்த முடிவெடுத்த ஓலா நிறுவனம் "மிஷன் எலக்ட்ரிக்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

இதன் படி வரும் 12 மாதங்களுக்கும் 10,000 எலக்ட்ரிக் கார்களை சேவையில் இயக்கவும், வரும் 2021ம் ஆண்டிற்குள் சுமார் 10 லட்சம் எலக்ட்ரிக் கார்களை சேவையில் இறக்கவும் திட்டமிட்டுள்ளது.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

இது குறித்து ஓலா நிறுவனத்தின் சி.இ.ஓ., அகர்வால் கூறுகையில் : "சுமார் ஓராண்டிற்கு முன்பு எலக்ட்ரிக் கார் சேவையை ஓலாவில் அறிமுகம் செய்தோம் சுமார் 40 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்ததில் எலெக்ட்ரிக் கார் எங்களுக்கு நல்ல அனுபவத்தை தந்திருக்கிறது. தற்போது இந்த சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம்." என கூறினார்.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

இதற்கிடையில் எலக்ட்ரிக் கார்களுக்க ஆங்காங்கே சார்ஜ் ஏற்றும் மையங்களையும் நிறுவன ஓலா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களில் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

அதே நிலையில் ஓலா நிறுவனம் வாகனத்திற்கு மேலேயே சோலார் பேனலை வைத்து தானாகா சார்ஜ் ஏறும் வகையில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனையில் தற்போது உள்ளது.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

இது தவற காரில் பயன்படுத்தும் போது குறைவான கரெண்ட் செலவை பராமரிப்பது எப்படி? கரெண்ட் செலவை குறைந்த என்ன என்ன செய்யலாம் என ஓலா நிறுவனம் வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது.

 ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
English summary
Ola To Put 10,000 Electric Vehicles On Road In 12 Months. Read in Tamil
Story first published: Monday, April 16, 2018, 16:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X