மாசம் ரூ75,000 டிரைவர் வேலை பார்த்தே சம்பாதிக்கலாமா? எப்படி தெரியுமா?

மக்கள் பலர் வேலை தேடி வரும் நிலையில் பலர் ஓலா - உபேர் மூலம் வாகன ஒட்டிகளாக மாறி வருமானம் சம்பாதித்து வருகின்னர். இந்நிலையில் பலருக்கு ஓலா உபேர் போன்ற டாக்ஸி நிறுவனங்களில் எப்படி வேலைக்கு சேருவது? இதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? எப்படி பணி செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நீங்கள் ஓலா - உபேர் போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர வேண்டுமா? எப்படி சேர வேண்டும் என தெரியவில்லையா? இங்கு அதை பற்றி தான் காணப்போகிறோம். நீங்கள் கேப் டிரைவராக பணியாற்றினால் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். இதில் வேலைக்கு சேர நீங்கள் எந்த ஏஜென்ட் இடமும் செல் வேண்டாம். மாறாக நீங்களே அதற்காக விண்ணப்பிக்க முடியும்.

OLA-UBER Driver

செல்போன் ஆப், வெப்சைட்களில் இந்நிறுவனம் தனக்கான பதிவு முறைகளை வைத்துள்ளது. இதன்படி உபேர் டிரைவராக நீங்கள் விருப்பினால் அதற்கான அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். அங்கு கேட்கப்படும் தகவல்களை வழங்க வேண்டும். உங்களிடம் சொந்தமாக கார் இல்லை என்றாலும் பராவாயில்லை நீங்கள் பதிடு செய்ய முடியும். சில கண்டிஷன்களை நீங்கள் ஏற்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க உங்களிடம் கமர்ஷியல் லைசென்ஸ் இருக்க வேண்டும். சாதாரணமாக வழங்கப்படும் லைசென்ஸ் இதற்கு போதாது நீங்கள் கமர்ஷியல் வாகனங்களை ஓட்ட தகுதியானவர் என்ற லைசென்ஸ் இருகு்க வேண்டும். இதை பேட்ஜ் என அழைப்பார்கள். இத்துடன் நீங்கள் ஆதார் கார்டு, பேன் கார்டு, வங்கி கணக்கு விபரங்கள், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். அதை சரி பார்த்து அந்நிறுவனமே உங்களை அழைத்து உங்களுக்கான வேலை குறித்த தகவல்களை வழங்கும்.

OLA-UBER Driver

நீங்கள் ஓலா நிறுவனத்தில் இப்படியாக வேலைக்கு சேர வேண்டும் என்றால் அதற்காக அந்நிறுவனம் பிரத்தியேகமாக இணையத்தளத்தையே நடத்தி வருகிறது drive.olacabs.com என்ற தளத்திற்கு நீங்கள் செல்லவேண்டும் அங்கு உபேர் நிறுவனத்திற்கு எப்படி பதிவு செய்ய வேண்டும்? என்ன ஆவணங்கள் வழங்க வேண்டும் என மேலே குறிப்பிட்டிருந்தோமோ அதையே தான். இந்த நிறுவனத்திலும் செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்ததும் ஆவணங்களை சரி பார்த்த பிறகு அந்நிறுவனத்தின் அதிகாரி உங்களை தொடர்பு கொண்டு உங்கள் வேலை குறித்த தகவல்களை வழங்குவார்.

பலர் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்றால் சொந்தமாக வாகனம் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் காரே இல்லாதவர்களுக்கு கூட பல நிறுவனங்கள் டிரைவராக வேலை பார்க்கும் வாய்ப்பை வழங்கி வருகிறது. அதன்படி அந்நிறுவனம் வழங்கும் காரை ஓட்டினால் அதற்கு ஏற்ற கமிஷனை நீங்கள் பெற முடியும். சொந்தமாக கார் வைத்திருந்தால் சற்று கூடுதல் லாபம் பார்க்கலாம்.

OLA-UBER Driver

இதற்கு யார் எல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற கேள்வி பலருக்க இருக்கிறது. நீங்கள் குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அப்படி நிரம்பியிருந்தால் தான் உங்களுக்கு கமர்ஷியல் லைசென்ஸ் கிடைக்கும். இது மட்டுமல்ல 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு வேலை கிடைப்பது கடினம். மிக முக்கியமாக உங்கள் மீது கிரிமினல் வழக்குகள் எதுவும் நிலுவையில் இருக்க கூடாது.

இதன் மூலம் ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற கேள்வி பருக்க இருக்கிறது. நீங்கள் பணியாற்றும் நகரத்தை பொருத்து இது மாறுபடும். தோராயமாக சொல்ல வேண்டும் என்றால் மாதம் முழுவதும் சரியான நேரத்தில் சரியான முறையில் வாகனத்தை இயக்கினால் அவர் ரூ30,000 முதல் ரூ75,000 வரை சம்பாதிக்க முடியும். சொந்தமாக கார் வைத்திருந்தால் அதை விட அதிகம் சம்பாதிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பலர் டிரைவிங் தெரிந்தவராக இருக்கிறார்கள் அவர்களுக்கு கேப் டிரைவராகும் ஆசை இருக்கிறது. அவர்களுக்கு எப்படி வேலை பெறுவது என்று நாம் இங்கே சொன்னது பயனுள்ளதாக இருக்க வாய்ப்புள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, August 4, 2025, 23:15 [IST]
English summary
Ola uber driver earn thousands monthly easy apply guide
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X