ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

ஓலா, உபேர், ரேப்பிடோ போன்ற நிறுவனங்களின் ஆப்கள் மூலம் இனி ரைடுகளை புக் செய்தால் அந்த ஆப்பின் மூலமே பேமெண்ட் செய்யும் ஆப்ஷனை நிறுவனங்கள் நீக்க திட்டமிட்டுள்ளன. மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாகவும் ஓட்டுனர்கள் தங்கள் ஆப்பில் இருந்து வெளியேறி போகக்கூடாது என்ற காரணத்திற்காகவும் வரி விதிப்பில் இருந்து தப்பிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை நிறுவனங்கள் எடுத்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று சென்னை-பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் ஆப் மூலம் ஆட்டோ, கார் உள்ளிட்ட ரயில்களை புக் செய்து பயணிப்பது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. பலர் இன்றும் இப்படியான சேவைகளையே விரும்பி வருகிறார்கள். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான ரைடுகள் ஆன்லைன் மூலம் புக் செய்யப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் கார் ஓட்டுநர்கள் பலர் இதையே வாழ்வாதாரமாக நம்பி பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

ola uber remove in-app payment

இந்நிலையில் இந்த ஓலா,உபேர், ரேப்பிடோ போன்ற ஆப்புகளை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் பெரும்பாலும் குறையாக சொல்லும் விஷயம் ஆன்லைன் பேமென்ட் முறை தான். ஆன்லைன் பேமெண்ட் முறையால் அவர்களுக்கு பணம் கிடைப்பது தாமதமாகிறது. இதனால் சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஆன்லைன் பேமெண்ட் மூலம் பணம் வர்த்தகம் செய்யும் வாடிக்கையாளர்களை வேண்டாம் என கேன்சல் செய்யும் நிலைக்கு கூட செல்கிறார்கள்.

நீண்ட நாட்களாக இந்த வாகன ஓட்டிகள் நேரடியாக பண வசூல் செய்யும் முறையை மட்டும் அமலில் வைத்திருக்கும் படியும் ஆன்லைன் பேமெண்ட் முறையை ரத்து செய்யும்படியும் இந்த நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆனால் நிறுவனங்கள் இதற்கு செவி சாய்க்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் நம்ம யாத்திரி என்ற ஆப் பிரபலமாகி வருகிறது. இந்த ஆப் மூலம் வாகனங்களை புக் செய்தால் குறைந்த விலையில் கைடு செய்ய முடியும்.

ola uber remove in-app payment

மேலும் வாகன ஓட்டிகளுக்கும் உடனுக்குடன் பணம் கிடைக்கும் என்பதால் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் மெல்ல மெல்ல நம்ம யாத்திரி போன்ற பிற நிறுவனங்களுக்கு மாறத் துவங்கி விட்டார்கள். இந்நிலையில் ஓலா,உபேர்,ரேபிடோ போன்ற நிறுவனங்கள் இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதன்படி தங்கள் ஆப்பின் மூலம் வாலட் பேமெண்ட் செய்வதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் இனி ஓலா,உபேர், ரேபிடோ போன்ற ஆப் மூலம் ரெய்டு புக் செய்தால் நேரடியாக ஓட்டுனருக்கு பணமாகவோ அல்லது யுபிஐ மூலமோ பண பரிவர்த்தனை செய்ய வேண்டும். நேரடியாக நிறுவனத்தின் வாலட்டிற்கு பணம் அனுப்ப முடியாது என்ற சூழ்நிலை வரப்போகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

ola uber remove in-app payment

இப்படி அமலுக்கு வந்தால் ஒவ்வொரு ரைடிற்க்கும் குறிப்பிட்ட அளவு பணத்தை கமிஷனாக ஆப் செய்து வழங்கும் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளுமே அந்த பணத்தை எப்படி பெற போகிறது என்ற கேள்வி நமக்கு எழும். இதிலும் சில மாற்றங்களை கொண்டு வரப்போகிறது இனி வாகன ஓட்டிகளிடமிருந்து அந்நிறுவனங்கள் ஒவ்வொரு ரைடிற்க்கும் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெரும் முறையை நிறுத்துகிறது.

அதற்கு பதிலாக சப்ஸ்கிரிப்ஷன் முறையில் ஒவ்வொரு வாகன ஓட்டியும் மாதம் குறிப்பிட்ட தொகையை அந்த ஆப் நிறுவனத்திற்கு செலுத்தினால் மட்டுமே அவர்களுக்கு ரைட் கிடைக்கும் வகையில் புதிய முறையை அமலுக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. இது எப்பொழுது அமலுக்கு வருகிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இது அமலுக்கு வர உள்ளது.

சில நிறுவனங்கள் இதை ஏற்கனவே அமலுக்கு கொண்டு வந்து விட்டன. உபேர் நிறுவனங்களில் இப்படியாக நேரடியாக வாகன ஓட்டுனர்களிடம் பணம் செலுத்தும் முறையை தனது ஆப்புகளில் அறிமுகப்படுத்தி விட்டது. இந்த முறையில் பணம் செலுத்தும் ஆப்ஷனை பெற வேண்டும் என்றால் அவர்கள் சப்ஸ்கிரைப் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை இருக்கிறது. விரைவில் அனைத்து நிறுவனங்களும் இப்படியான முறைக்கு தங்களை மாற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நடவடிக்கைக்கு பின்னால் தொழிற்போட்டி என்ற விஷயம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் வரியில் இருந்து விலக்கு பெறுவதற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது. அனைத்து பணத்தையும் ஒரே நிறுவனமே வாங்கி ஓட்டுனர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் போது அரசுக்கு கட்டாயம் வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் நேரடியாக ஓட்டுநர்களே இந்த பணத்தை பெற்றால் தனி நபருக்கான வருமானத்தில் குறிப்பிட்ட அளவு விலக்கு அளிக்கப்படுவதால் வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2024, 17:38 [IST]
English summary
Ola uber rapido remove in app payment soon know reason
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X