ஓலா கேப்ல போனா இனி பணம் கொண்டு போகதேவையில்ல! எல்லா டிரைவரும் ஆன்லைன் பேமென்ட் அக்செப்ட் பண்ணுவாங்க!
ஓலா கேப்ஸ் நிறுவனம் தங்கள் கேப்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயண கட்டணத்தை டிரைவர்களுக்கு நேரடியாக பணமாக செலுத்தாமல் யுபிஐ ஆப் மூலம் செலுத்த வசதியை செய்து கொடுத்துள்ளது.இதன் மூலம் டிரைவர்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கும் வழி பிறந்துள்ளது இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஓலா நிறுவனம் கேப் சேவையை துவங்கியது முதல் தற்போது பெருநகரங்களில் பெரும்பாலானோர் கேப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்கு வசதியாகவும் இருக்கும் இடத்திற்கே தேடி வந்து பிக்கப் செய்து செல்ல வேண்டிய இடம் வரை இந்த கேப் வசதி செல்வதால் மக்கள் பலர் இந்த வசதியை தேடி விரும்பி வருகின்றனர். இதனால் பெருநகரங்களில் ஓலா போன்ற கேப்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் இது போன்ற கேப்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதுதான். ஓலா போன்ற நிறுவனங்கள் பிரத்தியேகமாக ஆன்லைன் தளத்தை வைத்திருந்தாலும் அந்த ஆன்லைன் தளத்தில் பயணிகள் பணம் செலுத்தினால் அது ஓலா டிரைவர்களுக்கு செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. ஒரிரு நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
இதனால் பல டிரைவர்கள் ரைடை ஏற்கும் முன்பே ஓலா ஆன்லைன் தளம் மூலம் பணம் செலுத்தினால் அந்த ரைடர் ஏற்க மறுத்து விடுகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிக சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது. சென்னை-பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் தற்போது மக்கள் பலர் பணத்தை நேரடியாக கையில் வைத்துக் கொள்வதில்லை. யுபிஐ மூலமே அதிகம் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

இதை கணக்கிட்ட ஓலா நிறுவனம் தங்கள் ஓலா ஆப்பிலேயே யூபிஐ வசதியை சேர்த்துள்ளது. அதன்படி ஒரு ரைடு முடிந்தவுடன் பயணிகள் தங்கள் ஆப் மூலமே டிரைவருக்கு யுபிஐ வழியாக பணத்தை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் ரைடு முடிந்தவுடன் டிரைவரின் வங்கி கணக்கு நேரடியாக பணம் சென்று விடும். அவர் ஓலா நிறுவனத்தின் பணத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த அறிவிப்பை ஓலாவின் சிஇஓ பவேஷ் அகர்வால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்த வசதி முதற்கட்டமாக டிசம்பர் 10ஆம் தேதிக்குள் பெங்களூரு நகரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் படிப்படியாக இது விரிவுபடுத்தப்பட்டு இந்தியா முழுவதும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓலா நிறுவனம் வரிசையாக தங்கள் ஆப்களில் புதிய சேவைகளை எல்லாம் அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஓஎன்டிசி முறையில் உணவுகளை டெலிவரி செய்யும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் உணவுகள், மருந்துகள், உடைகள், பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை டெலிவரி செய்ய ஓலா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த யுபிஐ வசதி நிச்சயம் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பலர் ஆன்லைன் பேமெண்ட் முறை ஏற்காமல் ரைடை கேன்சல் செய்த சம்பவம் எல்லாம் இனி நடக்காமல் இருக்கும். பயணிகள் உடனுக்குடன் பணத்தை ஓட்டுனரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி விட முடியும். இதனால் ரைடை கேன்சல் செய்யும் வாய்ப்பு குறைந்துவிடும்.
சென்னை-பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் இந்த ரெய்டு கேன்சல் செய்யும் டிரைவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால் மற்ற நகரங்களில் இந்த ஓலா ரைடுகளை ஆன்லைன் பேமெண்ட் முறையில் பணம் செலுத்துவதாக பயணி கூறினால் அதை அதிகமாக கேன்சல் செய்து வருகின்றனர். இதை தடுக்க இது ஒரு நல்ல ஐடியாவாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் தங்கள் ஆப்களில் அவ்வப்போது அப்டேட்டை கொண்டு வருகிறது. பயணிகளின் தேவைக்கு ஏற்பவும் அதே நேரம் ஓலா டிரைவர்களின் தேவைப்படும் பல்வேறு அப்டேட்களை கொண்டு வந்து ஓலா கேப் பயணத்தை சுலபமாகி கொண்டே வருகிறது. இதனால் தொடர்ந்து பயணிகள் ஓலா கேப்களில் பயணம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









