ஒரு நைட்டுக்கு ரூ.5.80 லட்சம் மட்டும்தான்... பேச்சுலர் பார்டிக்கு சரியான இடம்!! எங்கே இருக்கு தெரியுமா?

கைவிடப்பட்ட பிரபலமான போயிங் 737 விமானத்தை இளைஞர் ஒருவர் லக்சரி வீடாக மாற்றி உள்ளார். 'பிரைவேட் ஜெட் வில்லா' என அழைக்கப்படும் இந்த விமான வீடு இந்தோனேஷியாவின் பாலி மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த வித்தியாசமான ஆடம்பர வீடு தொடர்பாக மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தளங்களில் ஆக்டீவ்வாக இருக்கக்கூடிய தொழிலதிபர். குறிப்பாக, எலான் மஸ்க்கை போல் எக்ஸ் தளத்தை பயன்படுத்துவதை ஆனந்த் மஹிந்திரா மிகவும் விரும்பக்கூடியவர். இணையத்தில் தன்னை கவரும் வீடியோக்களை அவ்வப்போது எக்ஸ் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துக் கொள்வதை பார்த்திருக்கிறோம்.

aircraft turned into luxury villa

அந்த வரிசையில் தற்போது புதியதாக ஒரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், லக்சரி வீடாக மாற்றப்பட்ட விமானம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த எக்ஸ் பதிவில், "சிலர் தங்களது கற்பனைகளை யதார்த்தமாக மாற்றும் அளவுக்கு அதிர்ஷ்டசாலிகள். மேலும், இந்த மனிதர் தன் கற்பனைக்கு எந்த கட்டுப்பாடுகளையும் விதிப்பதாக தெரியவில்லை!

நான் எப்போதாவது இங்கு தங்குவதற்கு முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளேன். ஆனால் தங்கிய பிறகு விமான காய்ச்சல் வந்துவிடுமோ என நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன்" என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார். விமான காய்ச்சல் என்பது விமானத்தில் பல்வேறு வெவ்வேறு விதமான நேர நிலைகளில் பயணம் செய்வதால் ஏற்படும் உடல்நல சோர்வு ஆகும். காய்ச்சல் என சொல்வதை விட சோர்வு என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.

aircraft turned into luxury villa

3 நிமிடங்கள் 7 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ள ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துக் கொண்டுள்ள இந்த வீடியோவில் லக்சரி வீடாக மாற்றப்பட்டு இருப்பது, ஓய்வுபெற்ற பழைய போயிங் 737 விமானம் ஆகும். இந்த விமானத்தை இந்தோனேஷியாவை சேர்ந்த வீடு வடிவமைப்பாளரான ஃபெளிக்ஸ் டெமின் என்பவர் 2 படுக்கை அறைகளை கொண்ட லக்சரி வில்லாவாக உருமாற்றி உள்ளார்.

இந்த விமான வீட்டில் ஒரு நீச்சல் குளம் கூட உருவாக்கப்பட்டு உள்ளது. தான் வடிவமைத்த இந்த வித்தியாசமான லக்சரி வீட்டை ஃபெளிக்ஸ் டெமின் சுற்றிக்காட்டும் வகையில் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. வீடியோவின் துவக்கத்தில், வீட்டிற்கு அதாவது விமானத்திற்கு வெளியே இருக்கும் சூழலை டெமின் சுற்றிக்காட்டுகிறார்.

aircraft turned into luxury villa

கொஞ்சம் மேடான பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ஓய்வுபெற்ற விமானத்திற்கு அருகே செல்வதற்காக சில மீட்டர்கள் தூரத்திற்கு படிக்கட்டு போன்ற செட்-அப் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் வீடியோவின் வாயிலாக நம்மை வீட்டிற்குள் அழைத்து செல்லும் ஃபெளிக்ஸ் டெமின், விமானத்தினுள் அமைக்கப்பட்டுள்ள படுக்கையறைகளையும், குளியலறைகளையும் காட்டுகிறார்.

பின், வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லும் டெமின் அங்கிருந்து வியூ எவ்வாறு உள்ளது என்பதை காட்டியுள்ளார். இந்த லக்சரி வில்லா இந்தோனேஷியாவின் பாலி மாகாணத்தில் ந்யாங்-ந்யாங் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளதால், இந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான வியூ கிடைக்கிறது. இந்த வித்தியாசமான சொகுசு வில்லாவில் தங்குவதற்கு கட்டணங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5.80 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

aircraft turned into luxury villa

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு கட்டணம் செலுத்தி தங்குவதற்கு, இன்னும் கொஞ்சம் காசை சேர்த்தால் சொந்தமாகவே வீட்டை வாங்கிவிடுவேனே என நீங்கள் சொல்வது எங்களுக்கு புரிகிறது. இத்தகைய வில்லாகள் கோடிகளில் புரளும் செல்வந்தர்களுக்கே ஆகும். சில லட்சங்கள் செலவானாலும் பரவாயில்லை என இந்தோனேஷியாவுக்கு சுற்றுலா செல்லும் மில்லியனர்கள் இந்த வீட்டை இனி அதிகம் பயன்படுத்த ஆரம்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 19, 2024, 23:55 [IST]
English summary
Old boeing 737 aircraft turned into luxury villa in indonesia features fees all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X