சென்னை தான் இவங்களுக்கு ஊரா தெரியுதா? பழைய பஸ்களை மற்ற மாவட்டங்களுக்கு தள்ளிவிட முடிவு!

தமிழகத்தில் விரைவு போக்குவரத்து கழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் 229 பஸ்களை மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 முதல் 9 ஆண்டுகள் வரை வயதான பஸ்கள் எல்லாம் பிற போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகத்தில் தற்போது 7,682 புதிய பஸ்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆர்டர் வழங்கியுள்ள நிலையில் இந்த பஸ்கள் எல்லாம் படிப்படியாக பயன்பாட்டிற்கு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தலைமைச் செயலாளர் தலைமையில் போக்குவரத்து கழகங்கள் குறித்த ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது.

old buses to other district

இந்த கூட்டத்தில் விரைவு போக்குவரத்து கழகத்தில் இருக்கும் 8 முதல் 9 ஆண்டுகள் வரை வயதான பஸ்களை பிற போக்குவரத்து கழகங்களுக்கும் தேவைக்கு ஏற்ப வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள சேலம் போக்குவரத்துக்கு கழகத்தை தவிர மற்ற அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் இந்த பஸ்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதை பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி விழுப்புரம் கோட்டத்திற்கு 63 பஸ்களும், கோவை கோட்டத்திற்கு 35 பஸ்களும், கும்பகோணம் கோட்டத்திற்கு 66 பஸ்களும், மதுரை கோட்டத்திற்கு 45 பஸ்களும், நெல்லை கோட்டத்திற்கு 20 பஸ்களும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. புதிய பஸ்கள் எல்லாம் வந்தவுடன் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பழைய பஸ்கள் பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

old buses to other district

தமிழகம் முழுவதும் இப்படியாக ஒரு போக்குவரத்து கழகத்தில் பயன்படுத்தப்பட்ட பஸ்கள் மறு போக்குவரத்து கழகத்திற்கு விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இப்படியாகத்தான் இந்த பஸ் வரும் விற்பனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படியாக பஸ்களை ஒரு போக்குவரத்து கழகத்தில் இருந்து மற்றொரு போக்குவரத்துக்கு கழகத்திற்கு வழங்கும்போது தற்போது உள்ள விலைக்கு அதை வழங்க வேண்டும் என போக்குவரத்து துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக ஒரு பஸ்களுக்கு குறிப்பிட்ட காலம் தான் அதன் வயது இருக்கும். ஆனால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் அந்த வயதையும் மீறி அதிக காலம் அந்த வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தான் தமிழகத்தில் அதிக அளவிலான படாதி பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிக மோசமான நிலையில் இயங்கும் பஸ்கள் பயன்பாட்டில் இருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த பஸ்கள் எல்லாம் கலந்து பயன்பாட்டில் இருப்பது ஒரு போக்குவரத்து கழகத்திலிருந்து பஸ்கள் மாற்றப்படும் போது, பழைய பஸ் எல்லாம் வேறு போக்குவரத்து கழகத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றன. இப்படியாக அந்த பஸ்கள் எல்லாம் தனது வயதையும் தாண்டி பயன்பாட்டில் இருக்கிறது.

இப்படியான பஸ்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால் அது பஸ்கள் விபத்தில் எழுச்சிக்குவதற்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் அது மட்டுமல்லாமல் நடுவலிலேயே பஸ்கள் நின்று போவதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்தி கொடுக்கும். இதனால் காலாவதியான பஸ்கள் எல்லாம் மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்காமல் அதை மறுசுழற்சி முறைக்கு அனுப்பி புதிய பஸ் விலை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதே மக்களின் நலனை பாதுகாக்கும்.

தமிழக அரசு பஸ்களை விட மக்கள் தனியார் பஸ் நிலையம் அதிகம் விரும்புவதற்கும் இது முக்கியமான காரணமாக இருக்கிறது. அரசு பஸ்கள் பெரிய அளவில் பராமரிப்பு இல்லாதது தான் காரணமாக இருக்கிறது. அரசு பஸ் கலை விட தனியார் பஸ்கள் அதிக பராமரிப்பு வழங்குகிறது. அதேநேரம் சிறப்பான பயன் அனுபவத்தையும் வழங்குவதால் தனியார் பஸ்களில் பயணம் செய்யவே மக்கள் விரும்புகிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு போக்குவரத்து கழகத்தில் நீண்ட ஆண்டுகள் ஓடி பழைய பஸ்கள் எல்லாம் மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு வழங்குவது என்பது ஒருவகை அநிதியாக தான் பார்க்கப்படுகிறது. இது மக்களை பிரித்துப் பார்த்து அவர்கள் வசிக்கும் ஊருக்கு தகுந்தார் போல் அவர்களுக்கு வசதி வழங்குவது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இதனால் மக்கள் அரசு பஸ்களை அதிகம் விரும்ப மாட்டார்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 16, 2024, 12:19 [IST]
English summary
Old buses to other district distribution of 229 express buses
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+