அந்த வெட்கத்திற்கே தமிழ்நாட்டை எழுதி வைக்கலாம் - பைக்கை கண்ட்ரோல் செய்வது கஷ்டமா? தாத்தா மாஸ் பண்ணிட்டாரு!!
ஸ்டைலிஷான விலையுயர்ந்த மோட்டார்சைக்கிளை ஓட்டிப் பார்க்க நம்மில் யாருக்கு தான் ஆசை இல்லாமல் இருக்கும். ஒரு சிலர், ஓட்டினால் கேடிஎம், யமஹா ஆர்15 பைக்கை தான் ஓட்டுவேன் என இருப்பவர்களும் உண்டு. இதனால், வயதானாலும் பலருக்கு பைக் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை போவதில்லை. அதிலிலும், தனது வாழ்க்கை துணையை பின்னால் அமர வைத்து பைக்கில் ஜாலியாக ஒரு ரைடு சென்றுவரவே எந்தவொரு கணவரும் விரும்புவார். ஆனால், இங்கு ஒரு வயதான முதியவர் காஸ்ட்லீயான கேடிஎம் ஆர்சி390 பைக்கில் தனது மனைவியை பின்னால் அமர வைத்து ஓட்டிச் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில், வயதானவர்கள் ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா போன்ற விலை மற்றும் எடை குறைவான பைக்குகளை ஓட்டுவதை பார்த்திருக்கிறோம். அத்தகைய பைக்குகளை ஓட்டுவது எளியது என்பதால் வயதானவர்களின் விருப்பமாக அவை உள்ளன.

ஆனால், கேடிஎம் பைக்கை ஒரு முதியவர் சாலையில் ஓட்டிச் செல்கிறார் என்பதே ஆச்சிரியமான விஷயம். அதிலிலும் இவர், விலையுயர்ந்த மற்றும் பவர்ஃபுல்லான கேடிஎம் ஆர்சி390 பைக்கை வயதான தனது மனைவியை பின்னால் அமர வைத்து ஓட்டி சென்றுள்ளார். இவ்வாறான செயல்களில் வட இந்தியர்கள் ஈடுப்படுவதை அரிதாக பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது அரிதினும் அரிதாக நம் தமிழ்நாட்டில் ஆகும்.
கேடிஎம் ஆர்சி390 பைக்கை ஓட்டும் முதியவர் மற்றும் அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் பாட்டி புத்தாடைகளை உடுத்தி நன்கு மிடுக்காக இருப்பதால், இவ்வாறு வீடியோவை காட்சிப்படுத்துவதற்காக இவர்களை இவ்வாறான செயலில் ஈடுப்படுத்த வைத்திருக்கலாம். அல்லது, அந்த முதியவர் ஆசைப்பட்டு விரும்பி கேட்டிருக்கலாம். ஏனெனில், பைக்கை ஓட்டும்போது அவரது முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி தெரிகிறது.

அதேபோல், இப்படியொரு ஸ்டைலிஷான பைக்கை கணவர் ஓட்ட தான் பின்னால் அமர்ந்து செல்வதை எண்ணி அந்த பாட்டியின் முகத்தில் புன்முறுவல் தவிழ்வதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சம்பவம் எந்த இடத்தில் நடைபெற்றுள்ளது என்பது சரியாக தெரியவில்லை. இந்த வயதான தம்பதியினர் பைக்கை ஓட்ட, அவர்களுக்கு அருகில் காரில் சென்றவர்கள் இந்த வீடியோவை காட்சிப்படுத்தி உள்ளனர்.
கேடிஎம் ஆர்சி390 போன்ற பவர்ஃபுல்லான பைக்குகளை முதல்முறையாக இளைஞர்கள் ஓட்டுவதற்கே சற்று சிரமப்படுவார்கள். ஆனால், இந்த முதியவர் பைக்கை தனது முழு கண்ட்ரோலில் வைத்து ஓட்டி அசத்தியுள்ளார். இந்த அருமையான வீடியோவில் நம்மை உறுத்தும் ஒரே விஷயம் என்னவென்றால், பைக்கில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

வீடியோவிற்காக இவர்கள் ஹெல்மெட்டை அணியாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், மோட்டார் வாகன சட்டத்தின்படி பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் கட்டாயம் ஆகும். இந்தியாவில் கிராமப்புறங்களில் இவ்வாறு ஹெல்மெட் அணியாமல் பைக்குகள் ஓட்டப்படுவதை சர்வ சாதாரணமாக காண முடியும். ஹெல்மெட் மட்டுமின்றி, இவ்வாறான பவர்ஃபுல்லான பைக்கை ஓட்டும்போது ரைடிங் ஜாக்கெட், கை மற்றும் கால் முட்டிகளுக்கான பாதுகாப்பு கவசங்களை அணிந்திருப்பதும் அவசியமாகும்.
ஏற்கனவே கூறியதுபோல், முதியவர்கள் இவ்வாறு ஆற்றல்மிக்க மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவதை நம் இந்தியாவில் அரிதாக பார்க்க முடியும். இன்னும் சொல்லப் போனால், சமீபத்தில் ராஜஸ்தானில் முதியவர் ஒருவர் ராயல் என்ஃபீல்டு பைக்கில் சாகசம் செய்ய முயற்சித்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றது. இந்த சம்பவத்திலும், அந்த முதியவர் அசால்ட்டாக ராயல் என்ஃபீல்டு பைக்கை கண்ட்ரோல் செய்திருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது தமிழ்நாட்டில் நடந்துள்ள இந்த நிகழ்விற்கு நாம் லைக்குகளை வாரி வழங்கினாலும், முதியவர் ஒருவர் பின்னால் ஒருவரை அமர வைத்து கேடிஎம் ஆர்சி390 போன்ற பைக்கை ஓட்டுவது கொஞ்சம் ஆபத்தானதே. வீடியோவில், அந்த முதியவர் ஈஸியாக பைக் ஓட்டுவது போல் தெரிந்தாலும், ஓர் சிறிய தடுமாற்றம் அவரை மொத்தமாக நிலைக்குலைய செய்துவிடும். ஏனெனில், இவ்வாறான பைக்குகள் கொஞ்சம் முறுக்கினாலே அதிக வேகத்தில் பறக்கும்.


Click it and Unblock the Notifications









