கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

வயதானவர்களால் என்ன செய்து விட முடியும்? என்பது போன்ற கேள்விகளை உடைத்து, முதிய தம்பதியினர் செய்திருக்கும் தரமான சம்பவத்தை இந்தியாவே வியந்து பார்க்கிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம்.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

விபத்துக்களில் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ஐதராபாத் நகரை சேர்ந்த தம்பதியினர் கடந்த 11 ஆண்டுகளாக சாலைகளை சீரமைத்து வருகின்றனர். சாலைகளில் இருக்கும் குழிகளை அடைத்து விபத்துக்களை தவிர்ப்பதே அவர்களின் தலையாய நோக்கம். இந்த உயரிய செயல்பாட்டிற்கு அவர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து வருவது குறிப்பிடத்தக்கது!

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

பொதுவாக வாகன விபத்துக்களுக்கு, மோசமான சாலைகளும் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. இந்தியாவில் உள்ள சாலைகளின் நிலையை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் இந்த தம்பதியின் கடின உழைப்பின் மூலம் சாலை விபத்துக்களில் இருந்து பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

கங்காதர் திலக் கட்னம் (73) மற்றும் அவரது மனைவியான வெங்கடேஷ்வரி கட்னம் (64) ஆகியோர்தான் இந்த உன்னத நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கங்காதர் திலக் கட்னமை மக்கள் 'ரோடு டாக்டர்' என்று அன்புடன் அழைக்கின்றனர். எங்கெல்லாம் சாலையில் குழிகளை பார்க்கின்றனரோ, அங்கு காரில் சென்று, சீரமைப்பு பணிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

அந்த காரை 'சாலை சீரமைப்பு ஆம்புலன்ஸ்' என அழைக்கின்றனர். இது தொடர்பாக கங்காதர் திலக் கட்னம் கூறுகையில், ''மோசமான சாலைகள் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களை பார்த்தபிறகு, இந்த பிரச்னையை சரி செய்வதற்கு ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் எனவும், தீர்வு கண்டறிய வேண்டும் எனவும் முடிவு செய்தேன்.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

ஆரம்பத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க முயற்சி செய்தேன். ஆனால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. எனவே சாலைகளை நானே சீரமைத்து விடுவது என முடிவு செய்து விட்டேன்'' என்றார். கங்காதர் திலக் கட்னம் இந்திய ரயில்வே துறையில் வேலை செய்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

அந்த வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐதராபாத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில், சாப்ட்வேர் டிசைன் இன்ஜினியராக கங்காதர் திலக் கட்னம் பணியாற்றினார். அப்போதில் இருந்து ஐதராபாத் நகரில் உள்ள மோசமான சாலைகளை அவர் சீரமைத்து வருகிறார். ஆனால் ஒரு ஆண்டு காலத்திலேயே அவர் சாப்ட்வேர் டிசைன் இன்ஜினியர் பணியில் இருந்து விலகி விட்டார்.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

மோசமான சாலைகளே இருக்க கூடாது என்ற வைராக்கியம்தான் அவரது இந்த முடிவுக்கு காரணம். அதன் பின்பு இந்த பணியில் அவர் முழு நேரமும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். சரி, இந்த பணிகளுக்கு தேவையான பணம் அவருக்கு எங்கிருந்து கிடைக்கிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு தற்போது எழுந்திருக்கும்.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

தன்னுடைய பென்சன் பணத்தில் இருந்துதான் கங்காதர் திலக் கட்னம் இந்த பணிகளை செய்து வருகிறார். இதுகுறித்து கங்காதர் திலக் கட்னம் கூறுகையில், ''இந்த பணிக்கு பயன்படுத்தப்படும் மெட்டீரியல்கள் என்னுடைய பென்சன் பணத்தில் இருந்து வாங்கப்பட்டவை. கடந்த 11 ஆண்டுகளில், தோராயமாக 2,030 குழிகளை நான் அடைத்துள்ளேன். இதற்காக 40 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளேன்'' என்றார்.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

ஒரு கட்டத்தில் கங்காதர் திலக் கட்னமின் பணிகளை பார்த்து விட்டு, அரசு அதிகாரிகளும் அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர். தேவையான மெட்டீரியல்களை வழங்கி, அதிகாரிகள் உதவி செய்துள்ளனர். உண்மையில் கங்காதர் திலக் கட்னமின் பணிகள் போற்றுதலுக்குரியவை. சமூக வலை தளங்களில், இதற்காக தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

நம்முடைய இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர் என்பது வேதனையளிக்க கூடிய உண்மை. அரசு வகுத்துள்ள போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் மீறுவது இதற்கு ஒரு காரணம் என்றாலும், மோசமான சாலைகளும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகவே இருக்கின்றன.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

எனவே சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தற்போது தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவது, போக்குவரத்து விதிமுறை மீறல்களை கண்காணிக்க சாலைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது, வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிப்பது (ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற உபகரணங்கள் தொடர்ச்சியாக கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன) என இதற்கு பல்வேறு உதாரணங்களை கூறலாம்.

கத்தி படத்தை தூக்கி சாப்பிட்ட முதிய தம்பதி... சத்தமே இல்லாமல் செய்த தரமான சம்பவத்தை நாடே வியந்து பாக்குது!

இதில், சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக இந்தியாவில் முன்பை காட்டிலும் தற்போது நெடுஞ்சாலைகள் வேகமாகவும், அதிக தரத்துடனும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் சாலை விபத்துக்களை குறைப்பதில் கங்காதர் திலக் கட்னம் போன்ற தனிநபர்களின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Old Couple Spent Rs 40 Lakh To Fill Potholes In Hyderabad. Read in Tamil
Story first published: Thursday, July 15, 2021, 9:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X