ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

எஸ்யூவி கார் ஓட்டுனர்களினால் ஆஃப்-ரோடு கலாச்சாரம் வேகமாக இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. ஏனெனில் எஸ்யூவி கார்களை அட்வென்ச்சர் பயண பிரியர்கள் தைரியமாக ஆஃப்-ரோடிற்கு எடுத்து செல்லுவதை அவ்வப்போது பார்த்து வருகின்றோம்.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

ஆனால் அவ்வாறு செல்பவர்கள் எல்லாருக்குமே அன்றைய நாள் நல்ல நாளாக அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு இவ்வாறான பயணங்களின்போது சில கசப்பான அனுபவங்கள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட வீடியோ ஒன்றினை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

Image Courtesy: Small Town Rider

ஸ்மால் டவுன் ரைடர் என்ற யுடியூப் சேனல் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், சேற்றில் சிக்கி கொண்ட ஜீப் காம்பஸ் கார், பழைய-தலைமுறை மஹிந்திரா தாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பதிவு செய்தவரும், அவரது நண்பர்களும் ஜீப் காம்பஸில் பயணம் செய்து இந்த இயற்கை வளம் மிகுந்த இடத்திற்கு வந்துள்ளனர்.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

ஜீப் காம்பஸ் மட்டுமின்றி சிலர் பழைய மஹிந்திரா தார் வாகனம் ஒன்றினையும் எடுத்து வந்துள்ளனர். ஆற்றுக்கு அருகே கேம்ப் போட்டு தங்கிய அவர்கள், தங்களது வாகனங்களில் ஆற்று படுக்கையில் அங்கும் இங்குமாக மகிழ்ச்சியாக சுற்றி வந்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்குள் ஒரு எல்லையை வைத்து கொண்டனர்.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

அதாவது அதை தாண்டி சென்றால் ஆற்றுப்படுகையானது சேறு சகதியுமாக இருக்கும், ஆதலால் வாகனத்தின் சக்கரங்கள் சிக்கி கொள்ளலாம் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் ஓட்டி வந்த பகுதியிலேயே ஒரு இடத்தில் மணல் சற்று அதிகமாக இருந்துள்ளது.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

இதில் இறங்கிய ஜீப் காம்பஸ் கார் சேற்றில் சிக்கி கொண்டது. ஜீப் காம்பஸ், ஒரு பக்கா 4x4 எஸ்யூவி வாகனம் தான். இருப்பினும் சேற்றில் இருந்து இந்த எஸ்யூவி காரை அதன் ஓட்டுனரால் வெளியே எடுக்க முடியவில்லை. பயணத்திற்கு கூட வந்த அனைவரும் நிச்சயம் முயற்சி செய்து பார்த்திருப்பார்கள்.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

ஆனால் கார் ஒரு அடி கூட நகரவில்லை என கூறப்படுகிறது. வாகனத்தை பின்னோக்கி இயக்க முயற்சி செய்தும் பார்த்தார்கள். சக்கரங்கள் சுழல்கிறதே தவிர வாகனம் பள்ளத்தில் இருந்து மேல் எழும்பவில்லை. ஏகப்பட்ட முயற்சிகளுக்கு பின் மஹிந்திரா தாரின் உதவியுடன் ஜீப் காம்பஸை வெளியே எடுக்க இந்த குழு முடிவு செய்தது.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

காம்பஸ் எஸ்யூவி காரின் பின்பக்கத்தில் கயிறை கட்டியவர்கள், கயிற்றின் மறு முனையை பழைய தார் வாகனத்தின் முன்பக்க எலக்ட்ரிக் வின்ச் பகுதியில் கட்டினர். இருப்பினும் எளிதில் அவர்களால் ஜீப் காம்பஸை சேற்றில் இருந்து மீட்க முடியவில்லை.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

அந்த அளவிற்கு ஈரமான மண் காம்பஸின் சக்கரங்களை பிடித்து கொண்டு இருந்துள்ளது. இவ்வாறு முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்க, நேரம் ஆக ஆக இருள் சூழ ஆரம்பித்தது. இதனால் வேகவேகமாக செயல்பட்ட இந்த குழு மஹிந்திரா தாரின் உதவியுடன் ஒரு வழியாக காம்பஸை மீட்டுள்ளனர்.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

ஜீப் காம்பஸ் சிறந்த எஸ்யூவி வாகனம் தான், இவ்வாறான ஆஃப்-ரோடு பயணங்களை தாரளமாக இந்த வாகனத்தில் மேற்கொள்ளலாம் தான் என்றாலும், அதேநேரம் இவ்வாறான பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பாக சில மாடிஃபை மாற்றங்களை வாகனத்தில் கொண்டுவருவது அவசியமாகும்.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

இந்த குறிப்பிட்ட காம்பஸ் காரில் ஜீப் நிறுவனம் டெலிவிரி கொடுக்கும்போது வழங்கிய டயர்களும், அலாய் சக்கரங்களும் தான் இப்போதுவரையிலும் உள்ளன. இதுவே வாகனம் சேற்றில் சிக்கி கொண்டதற்கு முக்கிய காரணமாகும். ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற சக்கரங்களையும், டயர்களையும் பொருத்தியிருந்திருந்தால் இவ்வளவு சிரமம் ஏற்பட்டிருக்காது.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

ஒருவேளை வாகனம் சேற்றில் சிக்கி கொண்டாலும், எளிதில் மீண்டு வந்திருக்கலாம். ஆற்றுப்படுகையில் காரை ஓட்டுவதற்காக இந்த காம்பஸின் டயரில் உள்ள காற்றை குறைத்தனரா என்பது தெரியவில்லை. இந்த பழைய-தலைமுறை மஹிந்திரா தாரை பற்றி கூற வேண்டுமென்றால், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு என்றே பிரத்யேகமாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.

ஒரே அசிங்கமா போச்சு குமாரு!! சேற்றில் இருந்து விலையுயர்ந்த எஸ்யூவி காரை மீட்ட பழைய மஹிந்திரா தார்!

ஆஃப்-ரோடு டயர்களை கொண்டுள்ள இந்த தார் வாகனம் அதிக க்ரவுண்ட் க்ளியரென்ஸையும், இவ்வாறு சேற்றில் சிக்கி கொள்ளும் வாகனங்களை இழுப்பதற்காக வின்ச்சையும் கொண்டுள்ளது. இவ்வாறான அட்வென்ச்சர் பயணங்களுக்கு குழுவாக செல்வது எந்த அளவிற்கு நல்லது என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணமாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Old-gen Mahindra Thar winches out Jeep Compass stuck in sand.
Story first published: Sunday, August 8, 2021, 23:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X