இதுதான் ஏழை முதியவர்களுக்கும், பணக்கார முதியவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.. இந்த வயசுல இப்படியா!!
தங்களிடம் இருக்கும் பணத்தை எப்படி மிச்சப்படுத்தி கடைசிக் காலத்தை கழிக்கலாம் என்று நினைப்பவர்களே ஏழை முதியவர்கள். ஆனால், பணம் கொழுத்த முதியவர்கள் அப்படி அல்ல. தங்களுடைய கடைசி காலத்தை வெளிநாடுகளில் கழிக்கலாமா அல்லது பண்ணை வீடுகளில் கழிக்கலாமா என நினைப்பவர்களே அதிகம்.
ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த பணக்கார முதியவர் சற்று மாறுபட்டவர் ஆவார். இவர் கார்களை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார். ஏற்கனவே அவரிடத்தில் பத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஆடம்பர வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றநிலையில், தற்போது மேலும் ஓர் காரை அவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரையே காரே வாங்கி இருக்கின்றார். கேராளவைச் சேர்ந்த பயன்படுத்திய (யூஸ்டு) கார்களை விற்பனைச் செய்யும் விற்பனையாளர் மோட்டார்வேகன் எனும் நிறுவனத்தின் வாயிலாகவே அந்த கோடீஸ்வர முதியவர் தனக்கான ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருக்கின்றார்.
இது அவருடைய 20வது கார் டெலிவரி நிகழ்வு என கூறப்படுகின்றது. நோஷ் மூடி மற்றும் நோஷைர் டாரா மூடி ஆகிய பெயர்களில் அறியப்படும் முதியவரே ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இருக்கின்றார். இந்த முதியவரிடத்தில் ஏற்கனவே 7 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே 8வது ரோல்ஸ் ராய்ஸ் காரையும் அவர் வாங்கி இருக்கின்றார். இந்த முதியவரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மட்டுமல்ல போர்ஷே (Porsche) நிறுவனத்தின் சூப்பர் கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், அவரிடம் இருக்கும் போர்ஷே 911 கர்ரேரா (Porsche 911 Carrera) காரை சமீபத்தில் அந்த முதியவர் ஆக்சலரேட் செய்யும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகியது.
ஆகையால், இணையத்தின் ஃபேமஸான நப(முதியவ)ராகவும் அவர் மாறினார். இந்த நிலையிலேயே இன்னும் மிகப் பெரிய ரீச்சை இணையவாசிகள் மத்தியில் அடையும் வகையில் எட்டாவது ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் வாங்கி இருக்கின்றார். உலக செல்வந்தர்களின் பிரியமான ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடலான கோஸ்ட் (Rolls Royce Ghost)-டையே அவர் வாங்கி இருக்கின்றார்.

இந்த கார் மாடலின் புதிய ஒன்றின் விலை ரூ. 6.95 கோடிக்கும் அதிகம் ஆகும். யூஸ்டு கார் மார்க்கெட்டில் இதைவிட ஒரு சில கோடி ரூபாய் குறைவான விலையிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால், முதியவர் துள்ளியமாக என்ன தொகையைக் கொடுத்து இந்த காரை வாங்கி இருக்கின்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அவர் வாங்கியிருப்பது பழைய தலைமுறை என்பதால் பலமடங்கு குறைவான விலையில் அதை வாங்கியிருக்கலாம் என்றே யூகிக்கப்படுகின்றது. இது பழைய தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்றாலும் பார்க்கும்போது புத்தம் புதியது போல் தெரிகின்றது. அந்த அளவிற்கு அதன் முந்தைய உரிமையாளர் மிக சிறப்பாக பராமரித்திருக்கின்றார்.
இதன் விளைவாகவே ஷோரூமில் இருந்து சமீபத்தில் இறக்கப்பட்டதைப் போல அந்த கார் காட்சியளிக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரில் 6.6 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 560 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய அதிக திறனை வெளியேற்றக் கூடிய கார் மாடலையே மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கி வீட்டிற்கு எடுத்து வந்திருக்கின்றார், அந்த பணக்கார முதியவர். வரும் நாட்களில் இதுபோன்று இன்னும் பல சொகுசு கார்களை அவர் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுகுறித்த வீடியோவும் இணையத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









