இந்த காலத்து ஜிம் பாடி பசங்களாலகூட இப்படி பண்ண முடியாது.. புல்லட் பைக்கை ஒரு சுத்து சுத்தியெடுத்துட்டாரு!!
அதிக எடைக் கொண்ட மோட்டார்சைக்கிள்களாக ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் காட்சியளிக்கின்றன. எனவேதான் ராயல் என்பீல்டு டூ-வீலர்களில் ஸ்டண்ட் செய்வது என்பது இயலாத ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், அந்த பைக்கிலேயே ஓர் முதியவர் அசால்டாக ஸ்டண்ட் செய்து அசத்தியிருக்கின்றார்.
எட்டுப் போடுவதைப் போல ஓர் வளையத்தை போட்டு அந்த பைக்கை அவர் அசால்டாக திருப்பி இருக்கின்றார். அவருக்கு 60 வயதுக்கும் மேல் இருக்கும். இவ்வளவு வயதானவர் இளைஞர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இத்தகைய செயலைச் செய்திருக்கின்றார். இதனாலேயே அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

கை தேர்ந்த நபர்களால் மட்டுமே இதனைச் செய்ய முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், அந்த முதியவரின் பல ஆண்டு முன் அனுபவமே அவரை இவ்வளவு சுலபமாக செய்ய வைத்திருக்கின்றது என்பதையும் நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அனுபவம் இல்லாதவர்களால் இதை செய்ய முடியாது.
பைக்கை முழுவதுமாக சாய்த்த அந்த முதியவர் காலை உறுதியாக தலையில் ஊன்றி பைக்கை அப்படியே திருப்புகின்றார். இது பார்க்க சுலபமாக தெரிந்தாலும், முன் அனுபவம் இல்லாதவர்களால் அவ்வளவு எளிதில் இதை செய்துவிட முடியாது. முதியவர் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த ஸ்டண்டை செய்வதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

ஆகையால், ஏற்கனவே அவர் இதுபோன்று பலமுறை செய்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது. இதன் விளைவாகவே துளியும் திணறல்கள் ஏதுமின்றி அவரால் இந்த ஸ்டண்டைச் செய்ய முடிந்திருக்கின்றது. அதேவேளையில், இந்த ஸ்டண்டை தயவு செய்து யாரும் முயற்சிக்க வேண்டாம் என்பதே எங்களின் வேண்டுகோள் ஆகும்.
குறிப்பாக, வாகனங்களை இயக்கும்போது உரிய பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும் என்பதையும் இங்கு கூற நாங்கள் கடமைப்பட்டு இருக்கின்றோம். ஸ்டண்ட் செய்யும் போது எளிதில் காயமடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அந்த காயம் லேசானதாகதான் இருக்கும் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை.

அது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் எனவேதான் கட்டாயம் ஸ்டண்ட் கூடவே கூடாது என்கின்றனர். மேலும் பாதுகாப்பு கவசங்களையும் கட்டாயம் அணிந்திருப்பது அவசியமாகப் பார்க்கப்படுகின்றது. இது ஆபத்துகளை பெருமளவில் குறைக்க உதவியாக இருக்கும். ஆனால், வீடியோவில் இடம் பெற்றிருக்கும் முதியவர் ஹெல்மெட் போன்ற எந்த பாதுகாப்பு கவசங்களையும் அணியவில்லை.
இந்த செயலுக்காகவும், அவர் ஆபத்தான நிலையில் வாகனத்தை இயக்கிய காரணமே போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சூழலை உருவாக்கி இருக்கின்றது. என்னதான் அவருடைய யுக்தி பாராட்டக்கூடியதாக இருந்தாலும் அவரின் இந்த செயல் இன்னும் சிலரை செய்ய தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது. எனவேதான் அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் வாகன ஸ்டண்டிற்கு அனுமதியில்லை. குறிப்பாக, பொதுவெளியில் வாகன ஸ்டண்ட் கூடவே கூடாது என காவல்துறை எச்சரித்துக் கொண்டிருக்கின்றது. வாகன ஸ்டண்டில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்கிற காரணத்தினாலேயே வாகன ஸ்டண்ட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுத்து வருகின்றது. இருப்பினும் ஒரு சிலர் வாகன ஸ்டண்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன ஸ்டண்ட் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம், அதை செய்வததற்கு என்றே பிரத்யேக இடங்கள் (டிராக்குகள்) செயல்பட்டு வருகின்றன. அங்கு என்ன மாதிரியான ஸ்டண்டை வேண்டுமானாலும் உங்களால் செய்துக் கொள்ள முடியும். ஆனால், அங்கும் பாதுகாப்பு உபகரணங்களின்றி ஸ்டண்ட் செய்ய முடியாது.
அடிப்படை பாதுகாப்பு கவசங்களை அணிந்தால் மட்டுமே வாகன ஸ்டண்டைச் செய்ய முடியும். மேலும், ஸ்டண்ட் செய்யும் முன்னர் முறையான பயிற்சியை முறையான பயிற்றுவிப்பாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதே நல்லது. அவர்களிடம் இருந்து மட்டுமே சில நுணுக்கங்களை நம்மால் கற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









