சொந்த கார் மீது வேணும்னே எரிபொருளை ஊத்திய முதியவர்! காரணம் என்னனு தெரிஞ்சா வயசானவர்னு பாக்காம கோவப்படுவீங்க!

சமூக வலை தளங்கள் அனைத்தும் தற்போது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டன. அங்கு வைரல் ஆக வேண்டும் என்பதற்காக, ஒரு சிலர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டனர். அதாவது விதிமுறைகளை மீறுகின்றனர். அல்லது மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.

அத்தகைய நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் உள்ளனர். ஆனால் இன்னமும் வைரல் ஆக வேண்டும் என்பதற்காக ஏடாகூடமான காரியங்களை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் தற்போது நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Old Man Pours Fuel On His Tata Harrier

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. முதியவர் ஒருவர் காருக்கு எரிபொருள் நிரப்ப முயல்வதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. எரிபொருள் நிரப்புவதில் என்ன தவறு? என நீங்கள் நினைப்பது புரிகிறது. நடந்தது என்ன? என்பதை முழுமையாக தெரிந்து கொண்டால், இப்படி நினைக்க மாட்டீர்கள்.

இந்த வீடியோவில், முதியவர் ஒருவர் எரிபொருள் நிரப்பும் குழாயுடன் நின்று கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். அவருக்கு அருகே டாடா ஹாரியர் (Tata Harrier) கார் நின்று கொண்டுள்ளது. இது அவருடையதுதான். இந்த முதியவர் பெட்ரோல் பங்க் ஊழியர் கிடையாது. அவர் எரிபொருள் டேங்க்கிற்கு உள்ளே எரிபொருளை நிரப்புவதற்கு பதில், காரின் மீது எரிபொருளை ஊற்றுகிறார்.

இந்த வீடியோ பார்த்தாலே நமக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. எரிபொருளை நிரப்புவது அவரது நோக்கம் கிடையாது. மாறாக வேண்டுமென்றே இதுபோன்ற ஒரு விஷயத்தை செய்து, வீடியோ எடுக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம் போல் தெரிகிறது. இது உண்மையிலேயே மிகவும் ஆபத்தான ஒரு விஷயம்.

ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள் எளிதில் தீப்பற்றும் தன்மை உடையவை. அவற்றை இப்படி அலட்சியமாக கையாள்வது, மிகப்பெரிய அசம்பாவிதங்களை ஏற்படுத்தலாம். ஆனால் சமூக வலை தளங்களில் இந்த வீடியோவை பலர் 'லைக்' செய்துள்ளனர். சமூக வலை தளங்களில் உலவி கொண்டிருக்கும் நெட்டிசன்களை போலவே, காவல் துறையின் கவனத்தையும் இந்த வீடியோ ஈர்த்துள்ளது.

இது ஆபத்தான காரியம் என்பதால், சம்பந்தப்பட்ட முதியவர் மீது நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நிகழ்ந்துள்ளது. நொய்டா துணை கமிஷனர்தான் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, இப்படி ஆபத்தான விஷயங்களை யாரும் செய்ய கூடாது. அதுவும் பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு, எரிபொருளை தவறாக கையாள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

Article Published On: Tuesday, August 15, 2023, 20:13 [IST]
English summary
Old man pours fuel on his tata harrier the reason will shock you viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+