வெறும் ரூ.55,000-இல் இந்த வாகனத்தை தராங்கனு சொன்னா நம்பவே முடியல! குட்டி யானை வாங்குற காசுக்கு இதை வாங்கலாம்

மாருதி 800 (Maruti 800), இந்தியாவில் ஒரு காலத்தில் அதிக பேரால் வாங்கப்பட்ட மிக பிரபலமான ஃபேமலி கார். இதற்கு பதிலாக தான் பின்னர் காலத்தில் ஆல்டோ 800 (Alto 800) காரை மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுவந்தது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் மாருதி 800 கார்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான். அவ்வாறு இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் மாருதி 800 கார் ஒன்று பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனமாக, பொருட்களையும் கொண்டு செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை (Modify) செய்யப்பட்ட மாருதி 800 காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் பிக்-அப் டிரக் வாகனங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது மிகவும் குறைவுதான். வெளிநாடுகளில் கார்களுடன் லோடு பகுதியை இணைக்கப்பட்ட தோற்றத்தில் பிக்-அப் டிரக் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, அத்தகைய வாகனத்தினுள் குறைந்தது 4 பேர் பயணிப்பதுடன், பொருட்களை கொண்டு செல்லவும் சிறிய இடம் கொடுக்கப்படுகிறது.

maruti800 converted into pick-up truck

ஆனால், நம்ம ஆட்களுக்கு பயணிகளை காட்டிலும் பொருட்களை கொண்டு செல்லவே அதிக இடவசதி தேவைப்படுகிறது. இதனாலேயே நம் நாட்டில், வாங்கினால் கார் அல்லது குட்டி யானை போன்ற லோடு வாகனத்தை வாங்குகின்றனர். இந்த நிலையில்தான், சிலர் மாருதி 800 காரை பிக்-அப் டிரக் வாகனம் போன்று மாற்றிக் கொண்டுள்ளனர்.

அதாவது, மாருதி 800 காரின் பின்பகுதியை வெட்டி, அந்த இடத்தில் பொருட்களை கொண்டு செல்வதற்கான படுக்கை பகுதியை அமைத்துள்ளனர். காரின் பாதி பின்பகுதி முழுவதுமாக வெட்டப்பட்டுள்ளதால், பின் வரிசை இருக்கைகளும் அகற்றப்பட்டுள்ளன. இதனால், இந்த குறிப்பிட்ட மாருதி 800 பிக்-அப் டிரக் வாகனத்தில் இருவர் மட்டுமே அமர முடியும்.

maruti800 converted into pick-up truck

காரின் பின்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்-அப் பாடி ஆனது மஹிந்திரா கேம்பர் (Mahindra Camper) வாகனத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இவ்வாறு மாற்றப்பட்டதால் மாருதி 800 காரின் சேசிஸ் சேதமடையாமல் இருக்க, பொருட்களை வைக்கும் பகுதிக்கு அடியில் இரும்பினால் ஆன ஃப்ரேம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வேலைப்பாடுகளை மேற்கொண்டுள்ள மெக்கானிக் கடை ஆனது மாருதி 800 மற்றும் ஆல்டோ கார்களை இவ்வாறு பிக்-அப் டிரக் வாகனங்களாக மாற்றுவதில் கைத்தேர்ந்ததாக விளங்குகிறது. இதனாலேயே, இந்த மாருதி 800 பிக்-அப் டிரக் வாகனம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பிக்-அப் டிரக் வாகனமாக மாற்றப்பட்ட வேறொரு மாருதி ஆல்டோ காரையும் காணலாம்.

maruti800 converted into pick-up truck

ஹரியானா மாநிலத்தின் சிர்சா என்கிற பகுதியில் செயல்படும் இந்த மெக்கானிக் கடை ஆனது இவ்வாறு பிக்-அப் டிரக் வாகனங்களை உரிமையாளர்களுக்கு மாற்றி கொடுப்பது மட்டுமின்றி, அவர்கள் விருப்பப்பட்டால் அதனை வேறொருவருக்கு விற்றுக் கொடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த குறிப்பிட்ட மாருதி 800 பிக்-அப் டிரக் வாகனத்திற்கு ரூ.55,000 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனை காட்டிலும் பெரிய பெரிய பிக்-அப் டிரக் வாகனங்கள் எல்லாம் விற்பனையில் உள்ளதால், இதனை மினி பிக்-அப் டிரக் வாகனம் என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், இந்த வாகனத்திற்கு வெறும் ரூ.55 ஆயிரம் மட்டுமே விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2025, 22:55 [IST]
English summary
Old maruti 800 converted into pick up truck in haryana
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X