மாருதி 800 காரை இப்படியெல்லாம் கூட மாற்ற முடியுமா? எதற்காகனு தெரிஞ்சா நீங்களே அசந்து போவீங்க!!
பிரபலமான மாருதி 800 காரை பலர் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்துள்ளதை இதற்குமுன் பலமுறை பார்த்துள்ளோம். ஆனால் அவற்றுள் எதுவுமில்லாத, புது மாதிரியாக லிமௌசைன் கார் போன்று நீளமானதாக மாருதி 800 கார் ஒன்று கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் கார் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.
மாருதி சுஸுகி 800 காருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு, நாம் அனைவரும் நம் வாழ்நாளில் ஒருமுறையேனும் மாருதி 800 காரை பார்த்திருப்போம். 800 காரின் அடையாளமே அதன் குறைவான விலையும், அளவில் சிறிய 800சிசி என்ஜினும் ஆகும். தற்சமயம் மாருதி 800 கார் விற்பனையில் இல்லை.

இருப்பினும் மாடிஃபை செய்யப்பட்ட பல்வேறு மாருதி 800 கார்களை பற்றி இதற்குமுன் நமது டிரைவ்ஸ்பார்க் செய்தி தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால் இந்த செய்தியில் நாம் பார்க்கவுள்ள மாடிஃபைடு 800 கார் சற்று வித்தியானது. ஏனெனில் இந்த 800 காரை பாதியாக வெட்டி, இடையில் ஓர் பகுதியை இணைத்து நீளமான லிமௌசைன் காராக கஸ்டமைஸ்ட் செய்துள்ளனர்.
இந்த கஸ்டமைஸ்ட் காரை பார்த்தவுடன், "இதுப்போன்ற வாகனங்களை எல்லாம் ஏன் செய்கிறார்களோ... இவற்றினால் போக்குவரத்துக்கு தான் பிரச்சனை" என ஆரம்பத்தில் கோபம் வரலாம். ஆனால் ஏன் இவ்வாறு ஒரு காரை உருவாக்கியுள்ளனர் என்பது தெரிந்த பின் அந்த கோபம் தணிந்துப் போகும். ஏனென்றால், இந்த மாருதி 800 காரை ஆம்புலன்ஸாக பயன்படுத்த இவ்வாறு கஸ்டமைஸ்ட் செய்துள்ளனர்.

ஜெய்பூர் ஜீப் லவர்ஸ் என்ற மெக்கானிக் குழுவால் மாருதி 800 கார் எவ்வாறு இத்தகைய தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை விவரிக்கும் வீடியோவை செய்தியின் இறுதியில் காணலாம். ஏற்கனவே கூறியதுபோல், மாருதி 800 காரின் நடுவே வெட்டி, இரண்டிற்கும் இடையே கூடுதலாக ஓர் பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காரின் நீளம் 3 மீட்டர்களில் இருந்து 5 மீட்டர்களாக அதிகரித்துள்ளது.
மாருதி 800 காரின் நடுவே புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி ஆனது இரும்பு தகரங்கள் மற்றும் குழாய் ஃப்ரேம்-ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. இரும்பு உலோகங்கள் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் வெல்டிங் செய்யப்பட்டுள்ளன. அதன்பின், புதியதாக இணைக்கப்பட்ட பகுதி தனியாக தெரியக்கூடாது என்பதற்காக மிகவும் நுணுக்கமாக ஸ்க்ராட்ச் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக காருக்கு கண்ணை கவரக்கூடிய நீல நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. காருக்கு உள்ளே முன் இருக்கைகளுக்கு பின்னால் நோயாளிகளை அழைத்து செல்ல ஸ்ட்ரெட்சரும், நோயாளி உடன் வருபவர்கள் அமர்ந்து பயணிப்பதற்காக இரு இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. காரின் இடதுப்பக்க பின்கதவு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரெட்சரை உள்ளே நுழைக்க பின் கதவை பயன்படுத்த வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த கஸ்டமைஸ்ட் கார் பார்ப்பதற்கு எளிமையானதாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக, மாருதி 800 கார் ஒன்றை இவ்வாறு ஆம்புலன்சாக மாற்றுவது அவ்வளவு ஈசியானதாக இருந்திருக்காது. அதிலிலும் குறிப்பாக, காரை இரண்டாக வெட்டி, இடையில் ஒரு பகுதி இணைப்பது என்பது மிகுந்த சவாலான காரியம் ஆகும். ஏனெனில் இந்த விஷயத்தில் காரின் அடிப்பக்க சேசிஸ் நேரடியாக சம்மந்தப்படுகிறது.
Source: MAGNETO 11/YouTube


Click it and Unblock the Notifications









