கார் உள்ளே இருந்தவர் யார்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் இன்னும் பெரிய ஷாக்! கார் உடன் கொத்தா தூக்கிய போலீசார்
மாருதி ஆல்டோ (Maruti Alto) காருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த கார், மாருதி ஆல்டோ ஆகும். குறிப்பாக, மிடில்-கிளாஸ் மக்களின் கார் கனவை நிஜமாக்கிய கார் மாருதி ஆல்டோ ஆகும். ஆரம்பத்தில் மாருதி 800 என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வந்த மாருதி ஆல்டோ கார் ஆனது இப்போதும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 என்கிற பெயரில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும், முன்பு இருந்த அளவிற்கு ஆல்டோ கார்கள் விற்பனை தற்போது இல்லை. சாலையில் மாருதி ஆல்டோ கார்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை வைத்து ஆல்டோ கார்களின் விற்பனை குறைந்து வருவதை அறியலாம். அதுவும், பழைய மாருதி ஆல்டோ கார்களை எல்லாம் சாலையில் காண்பது அரிதாகி விட்டது.

இதனாலேயே மாருதி ஆல்டோ காரை எல்லாம் இப்போது வைத்திருந்தால் உங்கள் ஏரியாவில் நீங்கள் ஸ்பெஷலாக தெரிவீர்கள். அப்படிப்பட்ட, பழைய மாருதி ஆல்டோ காரை வைத்திருக்கும் நபர் ஒருவர் அந்த காரின் அருமை புரியாமல் குடி போதையில் காருடன் தவறான செயலில் ஈடுப்பட்டு உள்ளார். இதுதொடர்பான விபரங்கள் நரேந்திர பிரதாப் என்பவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஜார்கண்ட் மாநில நம்பர் பிளேட் (Number Plate) உடன் இருக்கும் இந்த பழைய மாருதி ஆல்டோ காரை அதன் உரிமையாளர் குடிப்போதையில் இரயில் நிலையத்தின் பிளாட்ஃபாரத்தில் ஓட்டி சென்றுள்ளார். தண்டவாளத்தில் காருடன் விழும் அளவிற்கு இரயில் பிளாட்ஃபாரத்தில் தாறுமாறாக காரை ஓட்டிய இந்த நபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து இரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

ஜார்கண்ட் மாநில நம்பர் பிளேட் உடன் இந்த ஆல்டோ கார் இருந்தாலும், இந்த சம்பவம் நடந்தது உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகர இரயில்வே பிளாட்ஃபாரத்தில் ஆகும். உத்தர பிரதேசத்தில் பரபரப்பாக செயல்படக்கூடிய இரயில் நிலையங்களில் மீரட் இரயில் நிலையமும் ஒன்று என்பதால், இந்த ஆல்டோ கார் டிரைவரின் செயல் கொஞ்ச நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
இதில் கவலையளிக்க கூடிய விஷயம் என்னவென்றால், மது போதையில் இந்த செயலில் ஈடுப்பட்டவர் ஒரு இராணுவ அதிகாரி என கூறப்படுகிறது. இத்தகைய ஒழுக்கமான துறையில் பணியாற்றிவரும் இந்த நபர் அளவுக்கடந்த மது போதையில் மீரட் இரயில் நிலையத்தின் பிளாட்ஃபாரம் ஒன்றின் முழு தூரத்திற்கும் காரை ஓட்டி சென்றுள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் பிளாட்ஃபாரம் முடிந்து விட்டதால், அங்கேயே யு-டர்ன் அடித்து மீண்டும் அதே வழியில் திரும்பி வந்துள்ளார். யு-டர்ன் அடிக்கும்போது சரியாக அந்த நேரம் பார்த்து இரயில் ஒன்று பிளாட்ஃபாரத்திற்கு வந்துள்ளது. இரயிலுக்கு அருகாமையில் காரை ஓட்டியதால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தவிட போகிறது என அங்கிருந்தவர்கள் மிகவும் பயந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய மாருதி ஆல்டோ கார் எல்லாம் இப்போது பொக்கிஷம் ஆகும். அப்படிப்பட்ட காரில் இவ்வாறு எல்லாம் நடந்துக் கொள்வதற்கு எப்படித்தான் மனசு வருகிறதோ... அதுசரி தலைக்கேறிய மது போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்பவருக்கு அவரது பழைய ஆல்டோ காரை பற்றி எல்லாம் கவலை இருக்க போகிறதா என்ன... இந்த நபரை கைது செய்த இரயில்வே போலீசார் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








