டாடா சுமோ ஞாபகம் இருக்கா! படுக்கையுடன் கூடிய கேரவனா மாறியிருக்கு.. பெரிய வண்டிங்கள வாங்கி காச வீணாக்காதீங்க!!

வழக்கமான வாகனங்களைப் போலவே கேரவன் (Caravan) வாகனங்களுக்கு செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக நடிகர்களே மிக பெரிய கேரவன் வாகன பிரியர்களாகக் காட்சியளிக்கின்றனர். வீடுகளில் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வை வழங்கக் கூடிய வாகனங்களே கேரவன்கள் ஆகும். இதுமட்டுமல்ல, இருக்கும் அந்த இடத்தையே தங்கும் இடமாக கேரவன் வாகனங்கள் இருந்தால் மாற்றிக் கொள்ள முடியும். இதனால்தான் முன்னணி நட்சத்திரங்கள் தங்களுக்கு சொந்தமாக கேரவன் வாகனங்களை வைத்திருக்கின்றனர். இத்தகைய ஓர் வாகனமாகவே டாடா சுமோ (Tata Sumo) மாற்றப்பட்டு இருக்கின்றது.

ஒரு காலத்தில் படுஜோராக விற்பனையாகிக் கொண்டிருந்த கார் மாடல்களில் டாடா சுமோவும் ஒன்றாகும். ஆனால், இந்த கார் இப்போது விற்பனையில் இல்லை. இது விற்பனையில் இல்லாதது இந்தியர்கள் பலருக்கு சோகமளிக்கக் கூடியாக ஒன்றாக இருக்கின்றது. இத்தகைய வாகனத்தையே ஆடம்ர வசதிகள் நிறைந்த கேரவன்-ஆக ஓர் நபர் மாற்றியிருக்கின்றார்.

Tata sumo transformed into caravan

இந்த வாகனத்தில் கேம்ப் செய்யும் வசதி மட்டுமல்லாமல் 4X4 தொழில்நுட்பத்தையும் அவர் சேர்த்திருக்கின்றார். இதுதவிர, காரின் வெளிப்புற லுக்கையே மொத்தமாக மாற்றி இருக்கின்றார். இது டாடா சுமோ-தானா என கேட்கும் அளவிற்கு அதன் தோற்றத்தை மாற்றி இருக்கின்றனர். இந்தியாவின் கடுமையான நிலபரப்புகளைச் சமாளிக்கும் பொருட்டே இந்த வாகனத்திற்கு முரட்டுத் தனமான தோற்றண் மற்றும் 4X4 வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, இந்தியாவின் மிக மோசமான மலைப் பகுதிகளுக்கும் பயணிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே அவர் இந்த அம்சங்களை சுமோவிற்கு வழங்கி இருக்கின்றார். இதுபோன்று இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் சுமோவில் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதை வெளிக்காட்டக் கூடிய வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது.

முன்னணி கேம்பர் வாகனங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சுமோ மாற்றப்பட்டு இருக்கின்றது. சகல வசதிகளைக் கொண்ட வாகனமாக அதனை தயார் செய்திருக்கின்றனர். முக்கியமாக, மெத்தையுடன் கூடிய படுக்கை வசதி, படுக்கைக்கு அடியில் முக்கிய பொருட்களை வைத்துக் கொள்ள ஏதுவாக ஸ்டோரேஜ் வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இரண்டு அறைகளாக அந்த ஸ்டோரேஜ் அறைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒன்றில் அடுப்பு மற்றும் பாத்திரப் பொருட்களையும், மற்றொன்றில் பிற முக்கிய உபகரணங்களையும் அவர் வைத்திருக்கின்றார். தொடர்ந்து, காருக்குள் இருக்கும் போது வீட்டுக்குள் இருக்கும் உணர்வை வழங்க வேண்டும் என்பதற்காக உட்பக்கம் முழுக்க மர பேனல்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

Tata sumo caravan interior

உள்பக்க மேற்கூரை மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் அந்த மர பேனல்களை நம்மால் காண முடிகின்றது. ஆகையால் சொகுசு வீட்டிற்கு இணையானதாக சுமோவின் கேபின் தற்போது மாறியிருக்கின்றது. தொடர்ந்து, கேம்ப் செய்யும்போது வெளியில் தங்குவதற்கு ஏதுவாக திரைகள், ஸ்டாண்டுகள் உள்ளிட்ட பிற முக்கிய பொருட்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆகையால், செல்லும் இடத்தில் தங்குவதற்கான எந்தவொரு வசதியும் இல்லை என்றாலும் இந்த வாகனத்தின் வாயிலாக தங்கிக் கொள்வதற்கு ஏதுவான அனைத்து சூழல்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். காரின் மேலேயும் தங்குவதற்கு ஏதுவாக கூடாரம் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், காரின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பிரத்யேக மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அடர் இருட்டான சூழலில் பயணிக்க இந்த லைட்டுகள் பெரும் உதவியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதே கேரவன் மற்றும் கேம்ப்பிங் செய்யக் கூடிய வாகனங்களுக்கு மவுசு அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஆனால், இந்த வகை வாகனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவில்லை. அதேவேளையில், சில தனியார் நிறுவனங்கள் வழக்கமான பேருந்து மற்றும் மினி வேன்களை கேரவன்களாக மாற்றி வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் மாற்றப்பட்ட ஓர் வாகனமே இந்த சுமோ ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2024, 5:00 [IST]
English summary
Old tata sumo transformed into stunning caravan here is more details
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+