கிழவி மாதிரியான காரை குமரியாக்கியும் பலனில்ல.. பாத்த இடத்துலேயே போலீஸ் தூக்கிட்டு போயிட்டாங்க!
பழைய வாகனங்களை புதிது போல் மாற்றுவது எல்லாம் ஒரு சிலருக்கு கை வந்த கலை ஆகும். அதேபோல், பழைய வாகனங்களைப் புதிதுபோல் மாற்றுவதற்கான வழிகளும் பல தற்போது நாட்டில் உள்ளன. குறிப்பாக, பழைய தலைமுறை வாகனங்களை புதிய தலைமுறை வாகனங்களாக மாற்றுவதற்கான கன்வெர்சன் கிட் (Convertion Kit)-கள் மிக தாராளமாகவும், குறைவான விலையிலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. எனவே, பலர் இந்த அலங்கார பாடி கிட்-களின் வாயிலாக தங்களின் பொலிவிழந்த பழைய வாகனங்களை புதிதுபோல் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது, கிழவியை மேக்-அப் வாயிலாக அலங்கரித்து குமரிகளைப் போல மாற்றுவதைப் போல மிகவும் பழைய வாகனங்களை புதிதுபோல் பலர் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், 10 ஆண்டுகள் பழைய டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரே தற்போது புதிதாக ஷோரூமில் இருந்து இறக்கியதைப் போல் அதன் உரிமையாளர் ஒருவர் மாற்றி இருக்கின்றார்.

ஆனால், இப்போது அவருடைய பயன்பாட்டில் இல்லை. போலீஸார் அக்காரை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் அந்த கார் டீசல் எஞ்சின் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் 10 ஆண்டுகள் பழைய டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த விதி தலை நகர் டெல்லியில் மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே 10 ஆண்டுகள் பழைய டீசல் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் போல் மாற்றி பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் மாடலையே அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
அதேவேளையில், தற்போது டெல்லி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் இந்த கார் முதல் தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் தானா என்கிற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கின்றது. அந்த அளவிற்கு அக்காரை அதன் உரிமையாளர் பராமரித்து பாதுகாத்து வந்திருக்கின்றனர். இருப்பினும், அதை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த டீசல் கார் 12 ஆண்டுகள் 10 மாதங்கள் பழைய வாகனம் ஆகும். இத்தகைய பழைய டீசல் வாகனங்கள் மிக அதிகளவில் காற்றை மாசுப்படுத்தும் என்கிற காரணத்தினாலேயே அவற்றின் இயக்கத்திற்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் ஃபார்ச்சூனர் பழையதுதான் என்பது அதன் பதிவெண் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
அத்துடன், அலாய் வீல்களும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வகை அலாய் வீல்கள் இப்போது விற்பனையில் இருக்கும் ஃபார்ச்சூனரில் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக, மல்டி ஸ்போக் அலாய் வீல்களே இப்போது பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரில் டைமண்ட் கட் அலாய் வீல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
பாடி பேனல்களை மாற்றிய ஃபார்ச்சூனர் காரின் உரிமையாளர் இந்த அம்சங்களை மாற்ற தவறிவிட்டார். இந்த நிலையிலேயே அவரின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதேவேளையில், இந்தியாவில் இதுபோன்று வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆர்டிஓ-வின் உரிய அனுமதியின்றி இதுமாதிரியான மாற்றங்கள் வாகனங்களில் மேற்கொள்ளப்படும் என்றாலும் அவை பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இருப்பினும், ஒரு சில வாகன உரிமையாளர்கள் எந்தவொரு அனுமதியும் இன்றி தங்களின் வாகனங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர். அந்த மாதிரியான வாகனங்களுக்கு தற்போது ஃபார்ச்சூனர் காருக்கு ஏற்பட்டு இருக்கும் நிலைமையே ஏற்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் வாகன மாடிஃபிகேஷன் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையை உறுதிப்படுத்தும் விதமாக டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு அரங்கேறி இருக்கும் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அதேவேளையில், இதுதான் முதல் பழைய வாகன பறிமுதல் என நினைத்துக் கொள்ள வேண்டாம். இதற்கு முன்னதாகவும் பல்வேறு இதுமாதிரியான கெடுபிடிகள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








