பழைய மூக்கு வச்ச லாரிக்கும் புது ஃபிளாட்டான லாரிக்கும் என்ன வித்தியாசம்? இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
சில ஆண்டுகளுக்கு முன்னர் லாரிகளில் முன்பக்கம் மிகப்பெரிய இன்ஜின் அமைப்பு இருக்கும். அதற்கு பின்னால் உள்ள கேப் பகுதியில் தான் டிரைவர் அமர்ந்து லாரியை ஓட்டிக் கொண்டிருப்பார். இன்று அது போன்ற லாரியை எங்கும் காண முடியவில்லை. இந்த லாரிகள் ஏன் தயாரிப்பில் இருந்து நிறுத்தப்பட்டன? இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என விரிவாக காணலாம் வாருங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லாரிகள் என்றாலே மிகப்பெரிய ஒரு பிரம்மாண்ட தோற்றம் கொண்ட உருவமாக இருக்கும். லாரியின் முன்பக்கம் மிகப்பெரிய பயணங்கள் வழங்கப்பட்டிருக்கும். அதன் பின்னே டிரைவர் மற்றும் கிளீனர் அமர்வதற்கான கேபின் இருக்கும். இந்த லாரியின் வடிவமைப்பை பார்க்கும் போது ஏதோ மிகப்பெரிய அரக்கன் வருவது போன்ற ஒரு தோற்றத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்.

இப்படியான லாரிகளை நாம் குழந்தைகளாக இருக்கும்போது பார்த்திருப்போம். சிட்டி பகுதியிலும் சரி கிராமங்களிலும் சரி, இந்த லாரிகள் அதிகம் பயன்பாட்டில் இருந்து வந்தன. ஆனால் இன்று இப்படியான லாரிகள் எதையுமே நம்மால் பார்க்க முடியவில்லை. முன்பக்கம் இன்ஜின் இல்லாத ஃபிளாட்டான வடிவமைப்பு கொண்ட லாரிகள் தான் தற்போது வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பஸ்கள் எப்படி இருக்கிறதோ அதுபோலவே லாரிகளின் முகப்பு பக்கமும் வடிவமைக்கப்படுகிறது.
இப்படியாக முன் பக்கம் இன்ஜின் கொண்டு வடிவமைக்கப்பட்ட லாரிகள் தற்போது ஏன் வடிவமைக்கப்படவில்லை என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணங்கள் இருக்கிறது. அதைப்பற்றி தான் நாம் இங்கே விரிவாக காணப்போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைப் பருவத்தில் இப்படியான லாரிகளை பார்த்திருந்தால் அதன் அனுபவத்தை நிச்சயம் உணர முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தயாரிக்கப்பட்ட முன்கூறம் இன்ஜின் கொண்ட லாரிகளில் அதற்கு மேலேயே கேபினை அமைக்காமல் அதற்கு பின்னால் கேபினை அமைக்க முக்கியமான காரணம் இன்ஜினில் இருந்து வெளியேறும் வெப்பம் தான். அந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட இன்ஜினில் இருந்து ஏகப்பட்ட வெப்பம் வெளியேறும், அதனால் இன்ஜின் மேலே கேபின் அமைக்கப்பட்டால் டிரைவர்களுக்கு கேபின் உள்ளே அமர முடியாத அளவுக்கு அசௌகரியம் ஏற்படும். அதன் காரணமாகவே பின்பக்கம் கேபினை அமைத்தார்கள்.
ஆனால் இன்று உள்ள நவீன தொழில்நுட்பத்தில் இன்ஜினியிலிருந்து வெளியேறும் வெப்பத்தை கேபின் உள்ளே வரவிடாமல் நேரடியாக வெளியேற்றுவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இதனால் இன்ஜின் மேலேயே கேபினை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் இருப்பதால் இந்த முறையை பின்பற்றுகிறார்கள்.
இப்படியாக வடிவமைப்பை மாற்றியதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிந்தது. முன்பக்கம் இன்ஜின் கொண்டு பின்னால் கேபின் இருக்கும் போது அந்த லாரியை ஓட்டும் ஓட்டுநருக்கு லாரியின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. தற்போது இன்ஜின் மேலே கேபிள் அமைக்கப்படும் போது லாரி முன்பக்கம் கீழ்ப்பகுதியில் இருக்கும் வாகனங்களை எளிதாக பார்க்க முடியும்.
இதனால் விபத்துக்கள் பெருமளவு குறைகிறது. இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இன்ஜின் முன்பக்கமும் பின்பக்கம் கேபின் இருந்தால் லாரியின் நீளம் அதிகமாக இருக்கும். இதனால் குறுகிய பாதை வழியாக லாரிகளை இயக்குவது என்பது சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது உள்ள வடிவமைப்பில் லாரிகளை குறுகிய பாதை வழியாகவும் இயக்குவது எளிதாக இருக்கிறது.
மேலும் மத்திய அரசு வாகனங்களின் நீளம் குறித்த சில விதிமுறைகளை வைத்துள்ளது. இதனால் முன்பக்கம் இன்ஜினிற்கு என தனி இடமும் கேபினுக்கு என தனி இடமும் ஒதுக்கி விட்டால் வாகனத்தின் சரக்கு கொள்ளளவு என்பது குறைந்து விடும். இன்ஜின் மேலேயே கேபினை அமைப்பதன் மூலம் அதிகமான சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும் படி பின்னால் உள்ள டிரக்குகளை வடிவமைக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக பழைய மாடல் லாரிகளை பயன்படுத்துவதால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதை உணர்ந்த லாரி தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது பழைய மாடல் லாரிகளை கைவிட்டு விட்டு பஸ் போன்ற பிளாட்டான முகப்பு கொண்ட லாரிகளை தான் தற்போது தயாரித்து வருகிறார்கள். இதுதான் லாரி உரிமையாளர்களுக்கு அதிக லாபத்தையும் பாதுகாப்பையும் தருகிறது.


Click it and Unblock the Notifications








