ஒரு முடிவோடதான் இருக்காங்க! பழைய வண்டிகளுக்கு செக் வைத்த அரசு! கார் நிறுவனங்களின் காட்டில் பண மழை கொட்ட போகுது

இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு வாகனங்கள் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. குறிப்பாக பழைய பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்கள்தான் நாம் சுவாசிக்கும் காற்றை மிக கடுமையாக மாசுபடுத்துகின்றன.

எனவே அவற்றுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles), சிஎன்ஜி வாகனங்கள் (CNG Vehicles) மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் (Hybrid Vehicles) பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் பழைய வாகனங்களை அழிப்பதற்கான முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு முடிவோடதான் இருக்காங்க! பழைய வண்டிகளுக்கு செக் வைத்த அரசு! கார் நிறுவனங்களின் காட்டில் பண மழை கொட்ட போகுது

இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலத்தில், பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கைக்கு (Old Vehicle Scrapping Policy) அம்மாநில அமைச்சரவை தற்போது அதிரடியாக ஒப்புதல் வழங்கியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் தயா சங்கர் சிங் இந்த தகவலை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், 15 வருடங்களுக்கு மேலான வாகனங்களை அழிப்பவர்கள், புதிய வாகனங்களை வாங்கும்போது, வரிகளில் இருந்து மாநில அரசு 50 சதவீதம் தள்ளுபடியை வழங்கவுள்ளது. அதே சமயம் 20 வருடங்களுக்கு மேலான வாகனங்களை அழிப்பவர்கள், புதிய வாகனங்களை வாங்கும்போது, வரிகளில் இருந்து 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முடிவோடதான் இருக்காங்க! பழைய வண்டிகளுக்கு செக் வைத்த அரசு! கார் நிறுவனங்களின் காட்டில் பண மழை கொட்ட போகுது

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவே உத்தர பிரதேச மாநில அமைச்சரவை இந்த அதிரடியான திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. பழைய வாகனங்கள் அழிக்கப்படுவதால், அவற்றின் இயக்கம் குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது. இதன் மூலம் புதிய வாகனங்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் இந்த திட்டம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு உதவியாக உத்தர பிரதேச மாநில அரசுக்கு, மத்திய அரசு தரப்பில் இருந்து 300 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதை அரசு விரும்பவில்லை என்பதாலும், அவற்றை இயக்குவதற்கு அதிக செலவு செய்ய வேண்டியிருப்பதாலும், மக்களின் கவனம் தற்போது மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் மீது திரும்பி கொண்டுள்ளது. முன்பெல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களை காண்பது மிகவும் அரிதாக இருந்த நிலையில், தற்போது அவற்றை சர்வ சாதாரணமாக காண முடிகிறது.

அதேபோல் ஏராளமான சிஎன்ஜி கார்களும் இந்தியாவில் தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டுள்ளன. இதுதவிர ஹைப்ரிட் கார்களின் அறிமுக நிகழ்ச்சிகளையும் தற்போது நம்மால் மிகவும் அதிகமாக காண முடிகிறது. எனவே வரும் காலங்களில் இந்திய சாலைகளில் இருந்து பெட்ரோல், டீசல் வாகனங்கள் படிப்படியாக விடைபெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 11, 2023, 16:51 [IST]
English summary
Old vehicle scrapping policy uttar pradesh cabinet tax rebate all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+