ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமை படுத்தியவரின் புதிய சொகுசு கார்!! ஆனால் இதெல்லாம் அவருக்கு சாதாரணம்!

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றவரான நீராஜ் சோப்ரா புதியதாக விலைமிக்க சொகுசு காரை வாங்கி உள்ளார். நீரஜ் சோப்ரா அப்படி எந்த பிராண்டின் காரை புதியதாக வாங்கியுள்ளார் என்பதையும், அந்த காரின் சிறப்பம்சங்களை பற்றியும் இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

நீராஜ் சோப்ராவை பற்றி பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஹரியானாவில் காந்த்ரா என்ற கிராமத்தில் பிறந்த நீராஜ் சோப்ரா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் என்ற அசாதாரண சூழலுக்கு மத்தியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜாவெலின் அம்பு எறிதலில் தங்க பதக்கம் வென்று உலக அரங்கில் இந்தியாவை கௌரவப்படுத்தினார்.

neeraj chopra buys range rover velar

இந்த நிலையில், நீராஜ் சோப்ரா புதியதாக ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். ரேஞ்ச் ரோவர் இந்தியாவில் மிக சமீபத்தில் தான் அப்டேட் செய்யப்பட்ட வேலார் ஃபேஸ்லிஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆனால், நீராஜ் சோப்ரா சொந்தமாக்கி இருப்பது பழைய தலைமுறை ரேஞ்ச் ரோவர் வேலார் காரை ஆகும். எப்போதோ முன்பதிவு செய்தவருக்கு இப்போதுதான் கார் டெலிவிரி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நீராஜ் சோப்ரா கருப்பு நிறத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீராஜ் சோப்ரா தங்களது டீலர்ஷிப் மையத்தில் புதியதாக வேலார் எஸ்யூவி காரை வாங்கியுள்ளதாக லேண்ட் ரோவர் மால்வா ஆட்டோமோட்டீவ்ஸ் என்ற டீலர்ஷிப் ஷோரூம் மையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காருடன் ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்றவர் நிற்கும் படத்தை வெளியிட்டுள்ளது.

neeraj chopra buys range rover velar

ரேஞ்ச் ரோவர் பிராண்டில் ஏற்கனவே ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் நீராஜ் சோப்ராவிடம் உள்ளது. இந்த இரு ரேஞ்ச் ரோவர் கார்கள் மட்டுமின்றி, பிரபலமான ஃபோர்டு மஸ்டங் ஜிடி, மஹிந்திரா எக்ஸ்யூவி700, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா தார் வாகனங்களும் உள்ளன. சமீபத்தில் இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள புதிய வேலார் ஃபேஸ்லிஃப்ட் காரை பொறுத்தவரையில், இந்த காரை கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் உலகளவில் ரேஞ்ச் ரோவர் நிறுவனம் வெளியீடு செய்தது.

விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலோ அல்லது ரேஞ்ச் ரோவரின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையத்திலோ புதிய வேலார் ஃபேஸ்லிஃப்ட் காரை முன்பதிவு செய்யலாம். ஆனால் நீராஜ் சோப்ராவை போல் வேலார் காரை உடனடியாக டெலிவிரி பெற முடியாது. ஏனெனில், புதிய வேலார் காரின் டெலிவிரிகளை வருகிற செப்டம்பர் மாதத்தில் துவங்க ரேஞ்ச் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

neeraj chopra buys range rover velar

புதிய ரேஞ்ச் ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட் காரை காராவே மற்றும் அடர் கார்னெட் என்கிற 2 விதமான பெயிண்ட் தேர்வுகளில் வாங்கலாம். அதேபோன்று, இந்த லக்சரி எஸ்யூவி காரை 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 2.0 லிட்டர் இன்கேனியம் டீசல் என்ஜின் உடன் பெறலாம். இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 246 எச்பி மற்றும் 365 என்எம் டார்க் திறன் வரையிலும், டீசல் என்ஜின் 201 எச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.

புதிய வேலார் காரை டைனாமிக் எச்.எஸ்.இ தேர்விலும் வாங்கலாம். நீராஜ் சோப்ரா வாங்கியிருக்கும் பழைய ரேஞ்ச் ரோவர் வேலார் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.89.41 லட்சமாக உள்ளது. ஆனால், புதிய வேலார் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1 கோடி என்ற அளவில் எதிர்பார்க்கிறோம். புதிய வேலார் காரை பற்றிய புதிய விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: புதிய ரேஞ்ச் ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு வந்துள்ள தற்போதைய நேரத்தில், நீராஜ் சோப்ரா பழைய வேலார் காரை வாங்கியுள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், இந்த காரை சில மாதங்களுக்கு முன்னர் அவர் முன்பதிவு செய்திருப்பார், கார் தற்போது தான் டெலிவிரி செய்யப்பட்டிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 21, 2023, 22:14 [IST]
English summary
Olympic medalist neeraj chopra buys range rover velar suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X