படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

ஆங்கிலியன் ஒமேகா க்ரூப்பின் ஒரு அங்கமாக இருக்கும் ஒமேகா சீக்கி மொபைலிட்டி நிறுவனம் ஹரியானா அரசாங்கத்துடன் இணைந்து ஃபரிதாபாத்தில் புதியதாக கொரோனா நோயாளிக்களுக்கான இலவச மருத்துவமனையை திறந்துள்ளது.

படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

இதற்காக ஒமேகா சீக்கி மொபைலிட்டி நிறுவனம் ஆக்ஸிஜன் நெறிவூட்டிகளை தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த ஆக்ஸிஜன் மருத்துவமனையில் 30 நோயாளிகள் சிகிச்சை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

மேலும் ஃபரிதாபாத்தில் புதியதாக ஆக்ஸிஜன் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவ உள்ளதாக ஒமேகா சீக்கி மொபைலிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இலவச கோவிட்-19 மருத்துவமனை மருத்துவர்.ரந்தீப் சிங் புனியா என்பவரால் நிர்வகிக்கப்பட உள்ளது.

படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

ஃபரிதாபாத் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொரோனா இரண்டாவது அலையினால் ஆக்ஸிஜன் படுக்கைகளின் தேவை அதிகரித்துள்ளதால் இந்த மருத்துவமனை அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

சில நோயாளிகளின் நிலைமை மிகவும் மோசமடைந்தால் உடனடியாக அவர்களை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற எங்களிடம் ஆம்புலன்ஸ் தயாராக உள்ளது என்றார். ஒமேகா சீக்கி மொபைலிட்டியின் தலைவர் உதய் நரங் கருத்து தெரிவிக்கையில், இந்த தொற்று காலத்தில் மருத்துவமனைகளுக்கு மிக பெரிய தேவை எழுந்துள்ளதால், ஃபரிதாபாத் நகரத்தை சேர்ந்த மக்கள் உதவிக்காக எங்களை அணுகினர்.

படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

அதனை தொடர்ந்து மருத்துவரின் வழிக்காட்டுதலின் கீழ் தாமதமின்றி அதை தீர்க்க நாங்கள் பணியாற்ற தொடங்கியுள்ளோம். தற்போது எங்களிடம் 4 மருத்துவர்கள் மற்றும் 20 மருத்துவ ஊழியர்கள் உள்ளனர்.

படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

எதிர்காலத்தில் படுக்கை வசதிகளை 250 ஆக அதிகரிக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. முன்னெப்போதையும் காட்டிலும் தற்போதுள்ள மோசமான சூழ்நிலையில் இந்த வசதிகள் ஏழை, எளியோரை அடைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

சுகாதாரத்துறையில் 100 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள எங்களது ஒமேகா சீக்கி மொபைலிட்டி, எதிர்காலத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் ஆலை மற்றும் கோவிட் சோதனை வசதியையும் அமைக்கவுள்ளது என தெரிவித்தார்.

படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

இந்த இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை மட்டுமின்றி ஒமேகா சீக்கி நிறுவனம் அதன் ராஜ்+ எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களில் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களுக்காக நகரும் ஆக்ஸிஜன் முகாம்களையும் அமைத்து வருகிறது. இதற்காக இந்த வாகனங்களில் ஒரே நேரத்தில் 25ல் இருந்து 30 பேருக்கு ஆக்ஸிஜன் வழங்க உதவியாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

படுக்கை வசதியுடன் இலவச ஆக்ஸிஜன் மருத்துவமனை... இதேபோல் எல்லா சிறு நிறுவனங்களும் இருந்தா நல்லா இருக்குமே!!

இவற்றுடன் கொரோனா சோதனைகளுக்காக மூலக்கூறு ஆய்வகங்களையும் ஜெனிக்ஸ் சத்யா ஆய்வகங்களுடன் இணைந்து திறக்க ஒமேகா சீக்கி மொபைலிட்டி தயாராகி வருகிறது. இத்தகைய பெரிய பெரிய விஷயங்களுடன் தனது எலக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், தேவைப்படுவோருக்கு உணவுகளையும் இந்த நிறுவனம் டெலிவிரி செய்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Omega Seiki Mobiliy Opens Free-of-Cost COVID-19 Hospital In Faridabad
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X