இனி ஆம்னி பஸ்களை புக் பண்ணும் போது இதை செக் பண்ணுங்க! இல்லேன்ன உங்களுக்கு தான் நஷ்டம்!
வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களை வரும் 14ம் தேதிக்கு பிறகு தமிழகத்திற்குள் முறையான அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதனால் தற்போது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த பிரச்சனை மிகப்பெரியதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ் சேவை என்பது அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆம்னி பஸ் சேவையை நடத்தி வருகிறார்கள். இப்படியாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பஸ்களில் பெரும்பாலான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ஒரு சில ஆம்னி பஸ் மாநிலத்தில் பதிவு செய்து அதை தமிழகத்தில் இயக்கி வருவதையும் நம்மால் காண முடியும்.

குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு பஸ்கள் தமிழகத்திற்குள் இயங்கி வருகிறது. இது முறையான அனுமதியின்றி இயக்கப்படும் சேவையாக கருதப்படுகிறது. இப்படியாக இயக்கப்படும் பஸ்கள் விபத்தில் சிக்கும் போது பஸ்ஸில் உள்ள பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் இன்சூரன்ஸ் பணத்தை க்ளைம் செய்வதில் மிகப்பெரிய சிக்கல்களும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசு கடந்து சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு ஒன்றை செய்திருந்தது. அதன்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பஸ்களை தமிழக பகுதியில் இயக்க வேண்டும் என்றால் வெளி மாநிலத்தில் உள்ள பதிவை ரத்து செய்துவிட்டு தமிழகத்தில் அந்த வாகனத்தை பதிவு செய்து இயக்க வேண்டும் என்ற அறிவுத்தலையும் கொடுத்திருந்தது.
இதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக அரசு வரும் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பஸ்கள் எல்லாம் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட பஸ்களாக இருக்க வேண்டும் அல்லது முறையான அனுமதியுடன் இயங்கும் பஸ்களாக இருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பஸ்களை வைத்து தமிழகத்திற்குள் ஆம்னி பஸ் சேவையை நடத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
இதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சேவை நடத்தி வரும் நிறுவனங்கள் எந்த மாநிலத்திற்கு சேவை நடத்தி வருகிறதோ அந்த மாநில பதிவையும் கொண்ட வாகனங்களை பயன்படுத்த முடியும். உதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஒரு ஆம்னி பஸ் இயக்கப்பட்டால் அந்த வாகனம் பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வாகனமாக இருக்கலாம் அதில் தவறு கிடையாது.
அதே நேரம் வெளி மாநிலத்தில் பதிவு செய்து தமிழகத்திற்கு மட்டும் சேவை நடத்தி வரும் வசைவை நிறுவனங்கள் அந்த வாகனத்தை கட்டாயம் தமிழகத்தில் பதிவு செய்ய வாகனங்களாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இதை பின்பற்றி பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை தமிழக பதிவில் கொண்ட வாகனங்களாக மாற்றி விட்டன.
இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தொடர்ந்து இதே மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை தமிழகத்தில் பயன்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இனி ஆம்னி பஸ்களை புக் செய்யும்போது அது முறையான பதிவு செய்யப்பட்டதா என்பதை தெரிந்து கொண்டு புக் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இப்படியாக வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பஸ்களில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும்.
அதே நேரத்தில் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பஸ்களை தமிழகத்திற்குள் டூர் சேவைக்காக பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு பஸ்ஸையும் ஒரே நபரை புக் செய்து டூர் பயன்பாட்டிற்காக பயன்படுத்தினால் இந்த ரக பஸ்களை நிச்சயம் பயன்படுத்தலாம். இதில் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. அதுவே ஸ்டேஜ் பை ஸ்டேஜாக டிக்கெட் மூலம் பணம் வசூலித்து சேவை நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், இனி ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது குறிப்பிட்ட பஸ் முறையான சட்டப்படி இயக்கும் பஸ்கள் இல்லை. சட்டவிரோதமாக இயக்கம் பஸ்களாக என தெரிந்து கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக இயக்கம் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாம். சட்டப்படி இயங்கும் பஸ்களில் மட்டுமே டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும் என்பதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








