பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

பெங்களூருவைச் சேர்ந்த பைக்கர் ஜோடி எனப்படும் சுற்றுலாவை அதிகம் விரும்பும் தம்பதிகளை கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் வாரி சுருட்டி எடுத்து சென்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

நமது இந்திய இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனத்தில் ஊரை சுற்றுவதை அதிகம் விரும்புகின்றனர். அந்தவகையில், இரு சக்கர வாகனத்தில் நமது இந்தியாவை வலம் வந்தவர்கள் நிச்சயம் இந்த தம்பதிகளை அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு சற்று ஃபேமஸான ஜோடிகள் இவர்கள்.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

குறிப்பாக, ராயல் என்பீல்டு நிறுவனம் முன்னெடுத்து நடத்திய சில ரைடு நிகழ்வுகளில் இவர்கள் பங்கு பெற்றிருக்கின்றார்கள். மிக சமீபத்தில் நடைபெற்ற ராயல் என்பீல்டின் வருடாந்திர ரைடர் மேனியா நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

அத்தகைய பிரபலமான ஜோடிக்களையே கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் வாரி சுருட்டி எடுத்து சென்றிருக்கின்றது. இருவரில் ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அவர்களின் உயிரை கொடிய வைரஸ் பறித்திருக்கின்றது.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

ஆமாங்க, நாம் பேசிக் கொண்டிருப்பது பெங்களூரு ஜெயாநகர் பகுதியில் வசித்து வந்த ஓம்பிரகாஷ் சித்தனஞ்சப்பா (71) மற்றும் அவரது மனைவி சாவித்ரி ஓம்பிரகாஷ் (66) இவர்களை பற்றிதான். இந்த தம்பதியினரே கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலில் தங்களின் உயிரை இழந்திருக்கின்றனர்.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

முதல் அலை பரவலின்போது நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், இவர்கள் தங்களின் ரைடுக்கு முற்று புள்ளி வைத்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து, தங்களின் பயணங்களை அவர்கள் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

இந்த நிலையிலேயே இரண்டாம் அலை வைரஸ் பரவலில் இருவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கான தீவிர சிகிச்சையை இருவரும் பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி ஓம்பிரகாஷ் மறைந்தார். இவரைத் தொடர்ந்து தற்போது சாவித்திரியும் இறந்திருக்கின்றார்.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

இவர் கடந்த வெள்ளிக்கிழமை இறந்ததாகக் கூறப்படுகின்றது. இத்தகவலை சக பைக்கர் நண்பரான மைசூருவைச் சேர்ந்த சன்னி வெளியிட்டிருக்கின்றார். இருசக்கர வாகனத்தில் இந்தியாவை உலா வந்த இந்த தம்பதிகளின் இழப்பு அவர்களின் உறவினர்களுக்கு மட்டுமின்றி பைக்கர் குழுவினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

பெங்களூரு ராயல் என்பீல்டு பைக்கர் குழு இவர்களின் இழப்பால் பெரும் சோகத்தை எதிர் கொண்டிருக்கின்றனர். ஓம் பிரகாஷ் தனது 16ம் வயதிலிருந்தே பயணங்களை தனியாக மேற்கொள்ள தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆர்வமே இவரை கொரோனா பரவலுக்கு இடையிலும் வெளியில் சுற்ற ஈர்த்திருக்கின்றது.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

ஓம் பிரகாஷ் ஓர் ஓய்வு பெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவைகளின் துணை கணக்காளர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பயணங்களே இவருடைய முதல் காதல் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே சாவித்ரி அம்மையாருடன் இவருக்கு ஏற்பட்டது. இருவரும் தற்போது சொற்ப நாட்கள் இடைவெளியிலேயே உலகை பிரிந்திருக்கின்றனர்.

பைக்கர் ஜோடியை சுருட்டி எடுத்து சென்ற கொரோனா... சோகத்தில் மூழ்கிய பெங்களூரு பைக்கர் உலகம்... யார் இவர்கள்?

Source: TOI

இந்த ஜோடிகள் தங்களின் பெரும்பாலான பயணங்களுக்கு ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கையே அதிகம் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. சுற்றுலாவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் (கூடாரம் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள்) இந்த வாகனத்திலேயே எடுத்துச் செல்லப்பட்டன என்பது கவனித்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Omprakash And His Wife Savitri Passed Away Due To Covid 19. Read In Tamil.
Story first published: Tuesday, May 11, 2021, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X