ஏலத்திற்கு வந்த வெறும் 90 கிமீ தூரம் ஓடிய 1974ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார்!

Written By:

நல்ல கண்டிஷனில் உள்ள பழையா காரை தேர்வு செய்து வாங்குவது குதிரை கொம்பான விஷயம். பொய், பித்தலாட்டங்களை தாண்டி நல்ல கண்டிஷன் கொண்ட பழைய காரை வாங்குவது அதிர்ஷ்டத்தை பொறுத்ததாகவே அமைகிறது.

இந்த நிலையில், வெறும் 90 கிமீ தூரம் மட்டுமே ஓடிய 1974ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் ஏலத்திற்கு வந்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இத்தாலிய உரிமையாளர்

இத்தாலிய உரிமையாளர்

1974ம் ஆண்டு ஜனவரி 23ந் தேதி இந்த காரை இத்தாலியை சேர்ந்த அல்மன்டோ என்பவர் வாங்கியிருக்கிறார். முதல் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த காரை ஒரு சில முறை பயன்படுத்தியிருக்கிறார்.

பிராண்டு நியூ

பிராண்டு நியூ

1974ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த காரை வாங்கிய உரிமையாளர், அதனை ஓட்டாமலேயே பொக்கிஷம் போல பாதுகாத்து வந்துள்ளார்.

ஓடோமீட்டர்...

ஓடோமீட்டர்...

கடந்த 42 ஆண்டுகளில் இந்த கார் வெறும் 56 மைல்கள், அதாவது 90 கிமீ தூரம் மட்டுமே ஓடியிருக்கிறது. இது நம்ப முடியாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

 நோ டென்ட்

நோ டென்ட்

ஷோரூமிலிருந்து வந்த மூன்றாவது நாளே பல கார்கள் டென்ட், கீறல்களுடன் அலையும் இந்த காலத்தில் இந்த காரில் சிறு கீறல்கள், டென்ட் இல்லை என்பது விசேஷம். அந்தளவு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் ஒரிஜினல்

எல்லாம் ஒரிஜினல்

காரின் டயர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் கார் வாங்கியபோது இருந்த அதே ஒரிஜினல் டயர்கள்தான். உதிரிபாகங்கள் ஒன்றுகூட இதுவரை மாற்றப்பட்டதில்லையாம். மொத்தத்தில் புத்தம் புதிய காராகவே கருதலாம்.

பில்

பில்

ஒரிஜினல் பில் மற்றும் அதனுடன் வழங்கப்பட்ட கையேடு புத்தகம் போன்றவை கூட சிறப்பாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

ஏலம்

ஏலம்

சில்வர்ஸ்டோன் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த கார் ஏலம் விடப்பட உள்ளது.

விலை

விலை

35,000 முதல் 40,000 யூரோ விலையில் இந்த கார் ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
On Sale: 1974 Volkswagen Beetle With Just 90KM On The Clock.
Story first published: Monday, May 23, 2016, 9:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark