1 கோடி ஏழை மக்களை விமானத்தில் பறக்க வைத்த மோடி அரசு, யாருக்குமே தெரியாமல் சைலெண்டாக நடந்த சாதனை...
மத்திய அரசு உதான் திட்டம் மூலம் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மக்களைக் குறைந்த விலையில் விமானத்தில் பறக்க வைத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

மத்திய அரசின் திட்டத்தால் இதுவரை சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் விமானத்தில் பறந்திருக்கிறார்கள். பலரும் இந்த திட்டத்தால் பயனடைந்தும் அவர்களுக்கு இந்த திட்டம் பற்றித் தெரியவில்லை. இந்நிலையில் இந்த பகுதியில் நாம் மத்திய அரசின் இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களைத் தான் காணப்போகிறோம்.

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு உதான் என் திட்டத்தைக் கொண்டு வந்தது. Ude Desh ka Aam nagrik என்பதன் சுருக்கமே UDAN. இந்த திட்டத்தின் நோக்கம் டயர் 2, டயர் 3 நகரங்களில் கூட விமான நிலையங்களை ஏற்படுத்தி அங்குள்ள மக்களை விமானங்களைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதற்காகச் சிறு சிறு விமான நிலையங்களுக்கு விமானங்களை இயக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி இந்தியா முழுவதும் 1000 விமான ரூட்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த ரூட்களில் குறைந்த விலையில் விமானங்களை இயக்க டென்டர் விடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்க ஏலம் விடப்படும். விமான நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றுக் குறைந்த மானியம் கோரும் நிறுவனத்திற்கு இந்த அனுமதியை வழங்கும்.

அதன்படி குறிப்பிட்ட ரூட்டில் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கலாம். அதில் 9-40 சீட்கள் வரை குறைந்த விலையில் அதாவது ரூ2500 என்ற விலையில் டிக்கெட்களை விற்பனை செய்ய வேண்டும். மற்ற டிக்கெட்களை விமான நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்றார் போல விற்பனை செய்யலாம்.

இந்த விமான இயக்கம் முக்கியமான விமான நிலையத்திலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள விமான நிலையத்தை இணைக்கும்வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ2500 வசூலிக்கப்படுகிறது. பொதுவாக வாடகை வாகனம் எடுத்தால் ஒருகிலோ மீட்டருக்கு ரூ10 வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின்படி விமான பயணம் ஒரு கி.மீ ரூ5 லேயே சாத்தியமாகிறது.

இந்த திட்டத்தால் சராசரி மக்களும் விமானத்தில் பறக்க முடியும். மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் உள்ளிட்ட பல நோக்கங்களை மனதில் வைத்து மத்திய அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இது மட்டுமல்ல இந்த திட்டத்தால் விமான இயக்கம் அதிகமாகும், விமானத்திற்கான பராமரிப்பு, வான்வழி போக்குவரத்து, மற்றும் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகமாகும்.

இந்த திட்டம் இந்தியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் உதவும், அதற்காக இந்த திட்டத்திற்காக 46 சுற்றுலா மையத்தின் அருகில் உள்ள விமான நிலையங்களும் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் டில்லி- சிம்லா இடையே முதல் விமானம் இயக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் குறைவான டிக்கெட் தொகையை மக்களிடம் வசூலித்துவிட்டு மானியத்தை அரசிடம் விமான நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும். இதன் மூலம் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் ஈடு செய்யப்படும். மேலும் இந்த திட்டத்தில் இயங்கும் விமானங்களுக்கு ஏர்போர்ட் அத்தாரிட்டி விமான நிலைய கட்டணத்தை ரத்து செய்துள்ளது. மேலும் இந்த விமானத்திற்கு விதிக்கப்படும் பாதுகாப்பு, மின் கட்டணம், மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட மாநில அரசு செலவில் வழங்கப்படும் கட்டணமும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த திட்டம் 4 கட்டங்களாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 98 விமான நிலையங்கள், 33 ஹெலிபோர்ட்கள், 12 ஏரோ டிரம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 11 விமான நிறுவனங்கள் 350 ரூட்களில் இந்த திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்க முன்வந்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் லட்சத்திற்கும் அதிகமான முறை இந்த திட்டத்தின் கீழ் விமானங்கள் பறந்து வருகின்றன. இதற்காக ஆண்டிற்கு அரசு ரூ1228 கோடி பணத்தை ஒதுக்குகிறது. இதனால் மக்கள் குறைந்த விலையில் டிக்கெட்களை பெற முடியும். இந்த திட்டத்தில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணித்து பயனடைந்துள்ளனர்.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 300 நகரங்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களுடன் இணைக்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கையை ஆண்டு வாரியாக கீழே காணுங்கள்
Numbers of air passengers who availed of the UDAN scheme Year-wise details:
- 2017-18: 2,63,166
- 2018-19: 12,40,896
- 2019-20: 29,91,337
- 2020-21: 14,98,066
- 2021-22: 32,99,860

மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஒரே கோடி பேரை விமானத்தில் பறக்க வைத்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் ஆண்டிற்கு ஒரு கோடி பேர் விமானங்களில் பயணிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக 1000 ரூட்களில் விமானங்களை இயக்க தேர்வு செய்துள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் சில முக்கிய நகரங்களில் சிறிய விமான நிலையங்களை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் படி தமிழகத்தின் சேலம், வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் விமான நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மற்றும் நெய்வேலி இன்ஸ்ட்ரி பகுதி என்பதாலும் தஞ்சாவூர், ராமநாதபுரம், வேலூர் பகுதிகள் சுற்றுலா தளத்திற்கு அருகில் உள்ள பகுதிகள் என்பதாலும் இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது போக ஏற்கனவே தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications