ஐஆர்டிசிடி-ல் இனி "ஒன் இந்தியா; ஒன் டிக்கெட்" புக் செய்யலாம்! அப்படின்னா என்ன தெரியுமா?

ஐஆர்சிடிசி தளத்தில் தற்போது நமோபாரத் (ஆர்ஆர்டிஎஸ்) ரயில்களுக்கான டிக்கெட்டுகளையும் புக்கிங் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. நமோ பாரத் ரயில்கள் தற்போது டெல்லி பகுதியில் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. டெல்லியில் இருந்து மீரட் பகுதிக்கு இந்த ரயில் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த ரயில்களுக்கான டிக்கெட்டுகளையும் ஐஆர்சிடிசி ஆப் மூலமே புக் செய்து கொள்ள முடியும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நகரத்திற்குள்ளேயே பயணிப்பதற்காக மெட்ரோ ரயில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்கள் குறுகிய தூரத்தை மட்டுமே கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் உள்ள சில முக்கிய இடங்களை கவர் செய்யும் வகையில் நமோ பாரத் என்ற ரயில் சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

one india one ticket

இந்தியாவில் முதல் நமோ பாரத் ரயில் சேவை டெல்லியில் இருந்து மீரட் பகுதிக்கு தற்போது போடப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்ட பணிகள் முடிவடைந்து அப்பகுதியில் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ரயில்களுக்கான டிக்கெட் தற்போது ஐஆர்சிடிசி தளத்தில் புக் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன் இந்தியா ஒன் டிக்கெட் திட்டத்தில் இது அமல்படுத்தப்படுகிறது.

எப்படி மெட்ரோ ரயில்களில் ஒவ்வொரு தனி டிக்கெட்டுக்கும் க்யூ ஆர் கோடு அல்லது டோக்கன் வழங்கப்படுகிறதோ அதேபோல இந்த ரயிலுக்கும் ஒவ்வொரு தனி டிக்கெட்டுக்கும் தனி ஐடெண்டிஃபிகேஷன் இருந்தால் மட்டுமே ஸ்டேஷன் உள்ளேயே செல்ல முடியும் என்ற சிஸ்டத்தை தான் வைத்துள்ளார்கள். இந்நிலையில் இப்படியான வசதியை ஐஆர்சிடிசி தளத்திலும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

one india one ticket

இந்நிலையில் ஐஆர்சிடிசி தளத்தில் இந்த ரயிலுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தால் உங்கள் செல்போன் நம்பருக்கு அல்லது இமெயிலுக்கோ ஒவ்வொரு தனி நபருக்கான க்யூ ஆர் கோடு அனுப்பி வைக்கப்படும் அந்த கியூ ஆர் கோடை பயன்படுத்தி ஒவ்வொரு தனி பயணிகளும் நமோ பாரத் ரயிலில் பயணம் செய்து கொள்ள முடியும்.

இப்படியாக இந்த ரயிலுக்கான டிக்கெட் ஐஆர்சிடிசி தளத்தில் முன்பதிவு செய்ய ஒரு நபர் அதிகபட்சமாக 8 டிக்கெட்டுகளை மட்டுமே புக் செய்து கொள்ள முடியும் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. தற்போது டெல்லியில் இருந்து காஸியாபாத் வரை இந்த ரயில் பாதை போடப்பட்டு வரும் நிலையில் இந்த பகுதிக்கு மட்டுமே தற்போது டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் மற்ற பகுதிகளும் இப்படியான நமோ பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் அந்த ரூட்டிலும் ரயில் டிக்கெட்டை ஐஆர்சிடிசி தளத்திலேயே எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் தற்போது ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்கள்.

ஐஆர்சிடிசி மூலம் இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய டிக்கெட் கட்டணத்தில் இருந்து கூடுதலாக சேவை கட்டணமாக ஐஆர்சிடிசி ரூபாய் 5 கூடுதலாக வசூல் செய்கிறது. இந்த டிக்கெட்டை கேன்சல் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக கேன்சல் செய்யும் போது டிக்கெட்டிற்கான கட்டணம் மட்டுமே திரும்ப கிடைக்கும். டிக்கெட்டுக்கு போடப்பட்ட வரி மற்றும் சேவை கட்டணங்கள் திரும்ப கிடைக்காது.

இப்படியாக நமோ பாரத் ரயிலுக்கான டிக்கெட்டை 120 நாட்கள் முன்பே புக்கிங் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண ரயில் டிக்கெட் எப்படி புக் செய்கிறோமோ அதே போலவே இதையும் புக் செய்ய முடியும். இது போக கூடுதலாக தினசரி பயணத்திற்காக ரயில் டிக்கெட் புக் செய்பவர்களும் புக் செய்து கொள்ள முடியும். டூரிஸ்ட்கள் ஒரு நாள் பாஸ் அல்லது 3 நாட்கள் பாஸ் எடுக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐஆர்சிடிசி தளம் அனைத்து நபர்களும் பயன்படுத்தக்கூடிய தளமாக மாறிவிட்டது. இன்று இந்தியாவில் ஏராளமான மக்கள் இந்த தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் அனைத்து விதமான ரயில் டிக்கெட்ளையும் எடுக்கும் ஆப்ஷனை அறிமுகப்படுத்தினால் அது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். நமோ பாரத் ரயிலையும் இதற்குள் கொண்டு வந்தது மக்களுக்கு உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2024, 22:34 [IST]
English summary
One india one ticket namo bharat trains railway facility
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+