இன்று முதல் சுங்கசாவடிகளில் அமலுக்கு வந்த புதிய நடைமுறை! இனி இது தான் புது ரூல்ஸ்!

இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த பாஸ்ட் டேக் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டு என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறையை தற்போது அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்ட அங்கே சுங்க கட்டணம் என்பது அந்த வழியாக கடந்து போகும் அனைத்து வாகனங்களுக்கும் வசூல் செய்யப்படுகின்றன. சுங்க கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் பணம் மூலமே சுங்க கட்டணங்கள் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறை மாறி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

one vehicleone fastag

பண பதிவிறக்கம் செய்வதற்கு அதிக நேரம் எடுப்பதால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அனுபவித்து நிற்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அதன்படி பாஸ்ட் டேக் கார்டு முறையில் ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்தால் அந்த கார்டு கொண்டு சுங்கச்சாவடிகளை கடந்து விடலாம் என தெரிவிக்கப்பட்டு அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட் டேக் கார்டு கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒரே வாகனத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாங்கி சிலர் முறைகேடு செய்து வருவதாக மத்திய அரசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஃபாஸ்ட் டேக் கார்டுகளை முறைப்படுத்தும் பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு பின்பற்றியது. இதன்படி தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டுகளை கேஒய்சி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

one vehicle one fastag

இப்படி கேஒய்சி செய்வதற்கான கடைசி நாள் கடந்த மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டு என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இனி இந்தியாவில் ஒரு வாகனத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் டேக் கார்டுகளை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் இதுவரை ஒரே வாகனத்திற்கு பல்வேறு ஃபாஸ்ட் கார்டுகளை பயன்படுத்தி வந்தனர். சிலர் ஒரே கார்டுகளை பல்வேறு வாகனங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். இது கணக்கை கையாள்வதற்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்த பிரச்சனைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

one vehicleone fastag

இதனால் வாகன ஓட்டி ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டை மட்டுமே பயன்படுத்த முடியும் ஒரு வாகனத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் டேக் கார்டு பதியப்பட்டால் அந்த கார்டு பதிவு செய்யப்படும்போதே ரத்து செய்யப்பட்டு விடும். இதனால் இரண்டாவது ஃபாஸ்ட் டேக் கார்டை குறிப்பிட்ட வாகனத்திற்கு பதிவு செய்யவே முடியாது.

ஏற்கனவே இந்தியா முழுவதும் 8 கோடி ஃபாஸ்ட்டேக் காடுகள் பயன்பாட்டில் உள்ளன. அது 98 சதவீதமான ஃபாஸ்ட்டேக் கார்டுகள் கேஒய்சி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து விட்டன. மீதி இரண்டு சதவீதமான ஃபாஸ்ட்டேக் கார்டுகள் தற்போது செயல் இழந்துவிட்டன. இந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகளை தற்போது பயன்படுத்த முடியாது. இந்த ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் ரீசார்ஜ் செய்யப்பட்டு அதில் பணம் இருந்தாலும் அந்த பணத்தை தற்போது பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

இனி சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து பணம் செலுத்தி செல்பவர்கள் பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டு தான் என்பதால் அந்த ஃபாஸ்ட் டேக் கார்டை ரீசார்ஜ் செய்து பயணம் செய்து விட முடியும். அந்த கார்டு பணம் இல்லை என்றால் நேரடியாக இரு மடங்கு பணத்தை டோல்கேட்டில் கட்டி சுங்கச்சாவடியை கடக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் நீண்ட ஆண்டுகளாக பிரச்சனை நீடித்துக் கொண்டே இருக்கிறது. பணம் செலுத்துவதிலிருந்து ஃபாஸ்ட் டேக் கார்டு அறிமுகமானது வரை இந்த பிரச்சனை இருக்கும் நிலையில், மத்திய அரசு ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை விரைவில் அமல்படுத்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 23:30 [IST]
English summary
One vehicle one fastag rule whats new details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X