ஒன்இந்தியாவின் ஒருங்கிணைந்த, வரப்பற்ற, வெளிப்படையான புதிய அடையாளம்!
ஒன்இந்தியா, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மொழியல் செய்திகளையும் தகவல்களையும் கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல்படுகிறது. தற்போது ஒன்இந்தியா பெருமையுடன் தன்னை புதுப்பித்துக்கொண்டுள்ளது. இந்த மாற்றம் ஒன்இந்தியாவின் நோக்கத்தையும், அர்பணிப்பையும் எடுத்துக்காட்டும் விதமாகவும்; ஒருங்கிணைப்பு, வரம்புகள் அற்ற தன்மை, அனைவருக்குமானதாக செயல்படுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் மாறியுள்ளது.
பலமான அடித்தளம்
இந்த புதிய அடையாளம் "There's only Oneindia" என்ற அடைமொழியுடன் வருகிறது. இது ஒன் இந்தியாவின் எதிர்கால அணுகுமுறை கடந்த கால அனுபவத்தை வைத்து அமையப்போவதை எடுத்துகாட்டுகிறது. இந்த புதிய அடையாளம் எல்லையற்ற வாய்ப்புகளுக்கான கதவுகளை திறந்துள்ளது. இதன் பலன் ஒவ்வொரு இந்தியனுக்கும் சென்று சேரும்.

கடந்து வந்த பாதை
Indiainfo.com என்ற பெயரில் 1999ம் ஆண்டு ஒன்இந்தியா துவங்கப்பட்டது. ஒன் இந்தியா முதலில் ஜென்-எக்ஸ் தலைமுறையை கவர்த்து கடந்த 25 ஆண்டுகளில் தற்போது ஜென்- இசட் தலைமுறையை கடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. எங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பயணம் எங்களது ஏற்பு தன்மையையும் வாசகர்களின் தேவையை அறிந்து செயல்படும் திறனையும் காட்டுகிறது.
ஒன்இந்தியாவின் உறுதி
ஒன் இந்தியாவின் இந்த அர்பணிப்பான பணி தேவையான, மதிப்புமிக்க, ஒரிஜினலான, அதிக தரம் வாய்ந்த, உணர்வுபூர்வமான தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது. இந்த புதிய மாற்றம் வாசகர்களுக்கு புதிய சக்தியை வழங்கும். வாசகர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும், அனுபவத்தை பெறவும், சமூக அந்தஸ்தை உருவாக்கவும் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு வாசகர்களின் விருப்பத்தையும், ஆர்வத்தையும் அறிந்து அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கி வருகிறோம், இதனால் ஒன்இந்தியா ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் தளமாக மாறியுள்ளது.
ஒன்இந்தியாவின் புதிய லோகோ
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஒன்இந்தியாவின் லோகோ மினிமலாகவும் டைனமிக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மொழிகளுக்கான தளமாக விளங்குகிறது. இது ஒன்இந்தியாவின் பெர்சனாலிட்டி, மதிப்பு மற்றும் பிராண்டை பரைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. இது நவீனத்துவம்,தொடர்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
பல மொழி ஊடகம்
ஒன்இந்தியா இந்தியாவின் பல மொழி ஊடகத்தின் முன்னணி ஊடகமாக திகழ்ந்து வருகிறது. தற்போது ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், கன்னடா, மலையாளம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, ஓடியா, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் ஒன்இந்தியா செயல்பட்டு வருகிறது. இதனால் பல மொழிகளில் வாசகர்களக்கான தகவல்களை அவரவர் மொழியிலேயே வழங்கி வருகிறது.
வியக்கதக்க வளர்ச்சி மற்றும் செல்வாக்கு
ஒன்இந்தியா தளத்தை ஒவ்வொரு மாதமும் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் படித்து வருகிறார்கள். இண்டர்நெட் பயன்படுத்தும் 5ல் 1 பயனர் ஒன்இந்தியா தளத்தை பயன்படுத்துகிறார். இதனால் டிஜிட்டல் தளத்தில் ஒன்இந்தியாவின் செல்வாக்கு வியக்கதக்க வகையில் இருக்கிறது. இந்திய தேசம் முழுவதும் பரந்து விரிந்து கிடைக்கும் வாசகளுக்கு தேவையான விஷயங்களை கொண்டு சேர்ப்பதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
விளம்பரதாரர்களுக்கு தனித்துவமான வாய்ப்புகள்
புதுப்பிக்கப்பட்ட ஒன்இந்தியாவின் டைனமிக் உலகிற்கு உங்களை அழைக்கிறோம். இந்த தளம் பயனர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் பலனளிக்கும் விதமாக வடிவைமக்கப்பட்ட தளம் தான். இந்த தளத்தில் இருக்கும் சமநிலையான, நியாமான சூழ்நிலை மூலம் இரு தரப்பினரும் பலன்களை பெற முடியும். ஒன்இந்தியா தளத்தில் அனைவரும் தகவல்கள், ஈடுபாடு மற்றும் சமூகத்துடனான இணைப்பு ஆகியவை கிடைக்கிறது.
ஒன்இந்தியாவின் குடையில் உள்ள பிராண்டுகள்
ஒன் இந்தியாவின் குடையின் கீழ் ஒவ்வொரு தனித்துவமான போர்டல்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவின் கீழ் தனித்துவமான அம்சத்தை வழங்குகிறது.
*ஃபிளிமிபீட் - பொழுதுபோக்கு
*டிரைவ்ஸ்பார்க் - ஆட்டோமொபைல்
*குட்ரிட்டர்ன்ஸ் - ஃபைனான்ஸ்
*மைகேல் - விளையாட்டு
*கிஸ்பாட் -தொழிற்நுட்பம்
*நேட்டிவ்பிளானட் - பயணம்
*போல்டுஸ்கை - லைஃப்ஸ்டைல்
*கேரியர் இந்தியா - கல்வி
*ஹிட்ஸ்ஃபீடு - வைரல்
இந்த போர்டல்கள் எல்லாம் தனித்துவமான ஆர்வம் கொண்ட வாசகர் சமூகத்தை ஒன்றிணைக்கிறது.இதன் மூலம் மதிப்புமிக்க, ஈடுபாடுகளுடன் கூடிய தகவல்களை வழங்குகிறோம்.
முன்னேற்றத்திற்கான பாதை
ஒன்இந்தியாவின் இந்த மாற்றம் எங்கள் பயணத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. பாசிடிவ்வான மாற்றத்தை கொண்டு வரவும் ஒவ்வொருவரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தவும் எங்களது ஒவ்வொரு முயற்சியும் இருக்கும்.
ஒன்இந்தியா சிறு பார்வை
ஒன்இந்தியா டிஜிட்டல் ஊடக தளமாக செயல்படுகிறது. இது செய்திகள், பொழுதுபோக்கு, இந்திய வாசகர்களுக்கு தேவையான தகவல்கள் ஆகியவற்றை வழங்கும் தளமாக செயல்படுகிறது. இதில் ஒற்றுமை, வெளிப்படைதன்மை, எல்லையற்ற வாய்ப்புகள் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. டிஜிட்டல் தளத்தில் ஒன்இந்தியா புதுமைகளை புகுத்தும் தளமாக செயல்படுகிறது.


Click it and Unblock the Notifications








