OneWeb Satellites ISRO: மீனவர்களின் ரொம்ப நாள் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
இஸ்ரோ நிறுவனம் இன்று வெற்றிகரமான 36 செற்கைகோள்களுடன் விண்ணில் எல்விஎம்-3 ராக்கெட்டை ஏவியது. இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள்கள் இங்கிலாந்தில் உள்ள ஒன் வெப் நிறுவனத்திற்குச் சொந்தமானது. பலருக்கு இந்த ஒன்வெப் நிறுவனம் என்றால் என்ன? எது என்ன பயன்பாட்டிற்காக இந்த செயற்கைகோள்களை பயன்படுகிறது என்பது தெரியவில்லை. அதைப் பற்றி இங்கே காணலாம்.
ஒன்வெப் என்பது ஒரு சாட்டிலைட் கம்யூனிகேஷன் நிறுவனம் இது அதிவேகமாகப் பூமியில் உள்ளவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு நெட்வோர்க் அமைப்பாகும். இது இங்கிலாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம். இந்நிறுவனம் துவங்கப்பட்டதன் நோக்கம் குறைந்த விலையில் இன்டர்நெட் கனெக்டிவிட்டியை உலகில் இண்டர்நெட் இல்லாத பகுதிகளுக்குக் கொண்டு செல்வது தான்.

இதற்காகத் தான் இந்நிறுவனம் லோ ஆர்பிட் எர்த் எனப்படும் பூமிலிருந்து சமார் 500 கி.மீ உயரத்தில் சாட்டிலைட்களை நிலை நிறுத்தி அதன் மூலம் தகவல்களை பரிமாறும் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. தற்போது இந்நிறுவனம் ஜென் 1 செயற்கைகோள்களை அனுப்பியுள்ளது. அது 20 எம்பிபிஎஸ் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது. இதற்காக இந்நிறுவனம் 1980 செற்கைகோள்களை விண்ணில் ஏவ முடிவு செய்துள்ளது. அதில் 618 மட்டுமே தற்போது ஏவப்பட்டுள்ளது.
பலர் இந்நிறுவனத்தை எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்குப் போட்டியான நிறுவனம் என கருதுகின்றனர். ஆனால் இரண்டும் வேறு வேறு. இரு நிறுவனங்களும் லோ எர்த் ஆர்பிட் சாட்டிலைட் தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் இருவரும் வேறு வேறு சேவைகளை வழங்கவுள்ளனர். ஸ்டார்லிங்க் நிறுவனம் இன்டர்நெட் சேவைகளை வழங்கவுள்ளது. ஒன் வெப் நிறுவனம் கம்யூனிகேஷன் சேவைகளை வழங்கவுள்ளது.

ஒன் வெப் நிறுவனம் வழங்குவது போல வேறு சில நிறுவனங்களும் நேரடியாக செயற்கோள் கம்யூனிகேஷன் சிஸ்டத்தை வழங்குகின்றனர். ஆனால் அவர்களிடம் இருக்கும் பிரச்சனை ஸ்பீடு தான். இவர்கள் ஜியோ ஆர்பிட்டில் செயற்கை கோள்களை நிலை நிறுத்தி அதன் மூலம் இந்த சேவைகளை வழங்கி வருகின்றனர். அப்படி என்றால் இந்த செயற்கை கோள்கள் பூமிலிருந்து 36 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ளது.
இதனால் கனெக்டிவிட்டி மிகவும் மெதுவாக இருக்கும். இந்த பிரச்சனையைச் சமாளிக்க லோ ஆர்பிட் செற்கைகோள் முறையை ஒன்வெப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிக செயற்கைக்கோள்கள் தேவைப்படலாம். ஆனால் வேகமான கனெக்டிவிட்டி கிடைக்கும். தகவல்களை உடனுக்குடன் சொல்ல முடியும். இதற்காகத் தான் இந்த தொழிற்நுட்பத்தை ஒன் வெப் உருவாக்கியுள்ளது.

இதை யார் யார் பயன்படுத்த முடியும்?: பொதுவாக உலகின் 20 எம்பிபிஎஸ் வேகத்தை விட அதிகமான வேகத்தில் இண்டர்நெட் சேவை வந்துவிட்டது. ஆனால் அதன் பிரச்சனை எல்லா இடங்களுக்கும் அதைக் கொண்டு செல்ல முடியவில்லை உதாரணமாகக் கப்பல், விமானங்கள், சாலை வழி பயணங்களில் பல இடங்களில் சிக்னல்கள் கிடைப்பதில்லை.
அவ்வாறு சிக்னல் கிடைக்காத அல்லது வழக்கமான இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களால் வழங்க முடியாத இடத்தில் இந்த ஒன் வெப்பை வாங்கி பயன்படுத்த முடியும். இது தற்போது இந்தியாவில் இல்லை என்றாலும் விரைவில் இந்தியாவிற்கு இதன் சேவையை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது. இந்த சேவையை நாம் ஒரு வைஃபை போல பயன்படுத்தலாம்.
நேரடியாக சாட்டிலைட் உடன் தொடர்பு கொள்ளும் கருவியை இந்நிறுவனத்திடம் வாங்கி அதை வீடு,கப்பல், படகு ஆகியவற்றில் பொருத்தினால் அதன் மூலம் இன்டர்நெட் மற்றும் கம்யூனிகேஷன் சேவைகளை நாம் பயன்படுத்த முடியும். ஒரு போன் பேசுவது, மெசேஜ் அனுப்புவது, இன்டர்நெட்டை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியும்.
கப்பல், மீன் பிடிப்பவர்கள், விமானம், சுரங்கம் தோண்டுபவர்கள், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், சிறிய சிறிய தீவுகள், இப்படியாக இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்த வாய்ப்பில்லாத பகுதிகளில் இந்த ஒன் வெப் நிச்சயம் பயன்படும். இதன் பயன்படுத்தும் விலையும் மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிறுவனம் ஏற்கனவே சேவை வழங்கி வரும் நாடுகளில் மாதம் 12.95 அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ1000 கட்டணமாக வசூலிக்கிறது.


Click it and Unblock the Notifications








