8 பைலட்டுகள் மட்டுமே இந்த விமான ஓடுபாதையில் விமானத்தை இயக்கலாமாம்!

Written By:

விமானங்களை தரை இறக்குவதும், மேலே ஏற்றுவதும்தான் பைலட்டுகளின் மிக சவாலான பணியாக கருதப்படுகிறது. ஆனால், சாதாரண விமான ஓடுபாதைகள் போல இல்லாமல், பூகோள அமைப்பின்படி மிக சவாலான ஓடுபாதைகள் உலகின் பல இடங்களில் உள்ளது.

அப்படி, சவாலானதும், அபாயகரமான பூகோள அமைப்பில் உள்ள விமான நிலையங்களில் ஒன்று இமயமலை பிரதேசத்தில் அமைந்திருக்கும் நமது அண்டை நாடான பூட்டானில் உள்ள பாரோ விமான நிலையம். ஆம், இந்த அபாயகரமான விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதும், ஏற்றுவதும் மிக சவாலான காரியமாக இருக்கிறது.

அமைப்பு அப்படி

அமைப்பு அப்படி

இந்த விமான நிலையம் பாரோ நகரிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பாரோ சூ ஆற்றின் கரையில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. அதாவது, 18,000 அடி உயரமுடைய மலைகள் சூழ்ந்த பிரதேசத்தின் மத்தியில் உள்ளது.

Picture credit: keyword-suggestions

 கால நிலை

கால நிலை

பகல் நேரத்தில் மட்டுமே இந்த விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்கவும், டேக் ஆஃப் செய்யவும் முடியும். கால நிலை சரியில்லாத நேரத்தில் அனுமதி கிடையாது.

Picture credit: Doug Knuth/Wiki Commons

ஓடுபாதை நீளம்

ஓடுபாதை நீளம்

இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை 6,500 அடி நீளம் கொண்டது. இந்த குறைவான நீளத்திற்குள் தரையிறங்கவும், ஏறவும் தகுதியுடைய விமானங்களை மட்டுமே இயக்க முடியும்.

Picture credit: Youtube/Wiki Commons

 அனுமதி

அனுமதி

உயரமான மலைப்பகுதிகளை எளிதாக வளைந்து நெளிந்து பறக்கும் சிறப்புகளை உடைய விமானங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அதேபோன்று, மலைப்பாங்கான இந்த பகுதியில் எளிதாக பறக்கும் சிறப்பம்சங்களையும் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அத்துடன், செங்குத்தாக தரையிறங்கும் அம்சத்தையும் பெற்றிருக்கும் விமானங்களை மட்டுமே இங்கு இயக்க முடியும்.

எரிபொருள்

எரிபொருள்

கொல்கத்தாவிலிருந்து பாரோ விமான நிலையத்திற்கு விமானம் இயக்க முடியும். பாரோ விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான வசதி இல்லை. எனவே, ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் கொல்கத்தாவிலிருந்து பாரோ வரை சென்று, அங்கிருந்து மீண்டும் திரும்பி வர வேண்டும். எனவே, 1,200 கிமீ தூரம் பயணிக்கும் சிறிய ரக விமானங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது.

Picture credit: Göran Höglund/Wiki Commons

இந்திய அரசு உதவி

இந்திய அரசு உதவி

சிறிய ரக விமானங்களுக்கு பதிலாக நடுத்தர வகை விமானங்களை இயக்குவதற்கான கட்டமைப்புடன், பாரோ விமான நிலையத்தை மேம்படுத்த இந்திய அரசு உதவி செய்தது. இதையடுத்து, 1988ம் ஆண்டிலிருந்து ஏர்பஸ் ஏ319-100 விமானத்தின் சேவை துவங்கியது. பூட்டான் நாட்டின் Druk Air நிறுவனம்தான் இந்த சேவையை நடத்தி வருகிறது.

Picture credit: Thomas Wanhoff/Wiki Commons

அனுபவமிக்க பைல்ட்டுகள்

அனுபவமிக்க பைல்ட்டுகள்

இந்த விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களை விசேஷ பயிற்சியும், நல்ல அனுபவமும் கொண்ட பைலட்டுகள் இயக்க முடியும். உலகிலேயே 8 பைலட்டுகள் மட்டுமே இந்த விமான நிலையத்திற்கு விமானத்தை இயக்குவதறகு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

சுற்றுலா

சுற்றுலா

இந்த விமான நிலையம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இமயமலையின் அழகையும், வனப்பையும் காண்பதற்காகவே, இங்கு பல்லாயிரணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

மகிழ்ச்சியான நாடு

மகிழ்ச்சியான நாடு

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக பூட்டான் கருதப்படுகிறது. குறிப்பாக, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லையாம்.

உலகின் அபாயகரமான விமான ஓடுபாதைகள்: தொகுப்பு

உலகின் அபாயகரமான விமான ஓடுபாதைகள்: தொகுப்பு

  

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Only 8 Pilots In The World That Are Qualified To Fly To This Airport.
Story first published: Thursday, July 7, 2016, 13:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more