போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிப்பதில் வெளிப்படைதன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, சூப்பரான நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

உலகில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தன.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

எனினும் அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் கூட, காவல் துறையினர் அதனை சரியாக அமல்படுத்த வேண்டும். ஆனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதற்கு, சில சமயங்களில் காவல் துறையினரே காரணமாகி விடுகின்றனர். ஒரு சில போலீசார், வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் பெற்று கொண்டு அனுப்பி விடுவதால், சட்டத்தின் மீதான பயம் இல்லாமல் போய் விடுகிறது.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டை நடத்துவது ஊரறிந்த விஷயம்தான். இதுபோன்ற புகார்களை தடுப்பதற்காக, உத்தர பிரதேச அரசு தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி வரும் ஜூன் 15ம் தேதி முதல், உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த பகுதியில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறினாலும், அவர்களுக்கு இ-சலான் மட்டுமே வழங்க வேண்டும்.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

தற்போதைய நிலையில், லக்னோ, காஸியாபாத், கௌதம புத்தா நகர், வாரணாசி, ஆக்ரா, பரேலி, பிரயக்ராஜ் மற்றும் கான்பூர் உள்பட உத்தர பிரதேச மாநிலத்தின் 10 நகரங்களில் மட்டுமே இதற்கான வசதிகள் உள்ளன. ஆனால் வரும் ஜூன் 15ம் தேதி முதல், விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, இ-சலான் மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 75 மாவட்டங்கள் உள்ளன. இந்த அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஜூன் 15ம் தேதி முதல் இ-சலான் மட்டுமே வழங்கப்படும். இனிமேல் மேனுவல் சலான்கள் வழங்கப்படாது. எனவே விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில காவல் துறை உயரதிகாரிகள் கூறுகையில், ''மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில், ஒருங்கிணைந்த இ-சலான் சிஸ்டம், அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இ-சலான் வினியோகிக்கப்பட்டதும், வாகனத்தின் உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் வரும்.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

தொடர்ச்சியாக விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிவதும், இ-சலான் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள், அதிக அபராத தொகை செலுத்த வேண்டியவர்கள்'' என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''கடந்த மார்ச் மாதம் முதல் உத்தர பிரதேச மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகிறது.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

விதிமுறைகளை மீறியவர்களின் போட்டோக்களுடன், இ-சலானை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் தபால் கட்டணங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. மேலும் புதிய திட்டத்தின்படி பணியில் உள்ள போலீசாருக்கு, போர்ட்டபிள் கேமரா வழங்கப்படும். விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்களை புகைப்படம் எடுக்க அது பயன்படுத்தப்படும்.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

காவல் துறையினர் இந்த போட்டோக்களை மாவட்டத்தின் டேட்டாபேஸிற்கு அனுப்பி வைப்பார்கள். காவல் துறையினரின் செல்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆப் மூலம், அவர்களால் இதனை செய்ய முடியும். தொடர்ச்சியாக விதிமீறல்களில் ஈடுபட்டு கொண்டே இருப்பவர்களை கண்டறிவதற்கு, இந்த டேட்டாபேஸ் உதவி செய்யும்'' என்றனர்.

போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால் அரசும், அதிகாரிகளும் என்னதான் நடவடிக்கைகளை எடுத்தாலும், வாகன ஓட்டிகளாக பார்த்து திருந்தாவிட்டால், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது. வாகன ஓட்டிகள் இதனை உணர வேண்டும்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 9, 2020, 7:30 [IST]
English summary
Only e-challan For Violating Traffic Rules Across Uttar Pradesh From June 15. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+