இன்னும் அஞ்சே மாசம்தான்! பழைய வண்டிகளுக்கு ஆப்பு வைத்த அரசு! ஓனர்கள் தலையில் இடியை இறக்கீட்டாங்க!

இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையில் சிக்கி தடுமாறி கொண்டுள்ளன. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் பழைய வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. எனவே பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வரும் நவம்பர் 1ம் தேதியில் (November 1) இருந்து, அதிரடியான புதிய விதிமுறை ஒன்றை அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

Pollution Testing Centre

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெல்லி (Delhi) முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே அங்கு காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகதான் அங்கு வரும் நவம்பர் 1ம் தேதியில் இருந்து புதிய விதிமுறை ஒன்று அமலுக்கு வரவுள்ளது.

இந்த புதிய விதிமுறை வர்த்தக வாகனங்களுக்கானது (Commercial Vehicles) ஆகும். இந்த புதிய விதிமுறையின்படி, வரும் நவம்பர் 1ம் தேதியில் இருந்து, பிஎஸ்6, சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வர்த்தக வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். மற்ற வர்த்தக வாகனங்களுக்கு, அதாவது பழைய வர்த்தக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

Electric Buses

இந்த திட்டத்தை கடுமையாக அமல்படுத்த டெல்லி மாநில அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியின் நுழைவு வாயில்களில் எல்லாம், வாகனங்களின் நம்பர் பிளேட்களை பரிசோதித்து, அவை என்ன வாகனங்கள்? என்பதை கண்டறியும் அதிநவீன ஆட்டோமேட்டிக் கேமராக்களை பொருத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள், டெல்லிக்குள் நுழையும் வர்த்தக வாகனங்கள் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டதா? இல்லையா? என்பதை கண்டறியும் திறன் வாய்ந்தவை. ஒருவேளை புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்படவில்லை என்றால், அந்த வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது. டெல்லி அரசின் இந்த புது திட்டம் குறித்த தகவலை அம்மாநில முதல்வர் ரேகா குப்தா (Rekha Gupta) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''உலக சுற்றுச்சூழல் தினம் நெருங்கி கொண்டுள்ளது (ஜூன் 5ம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது). டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னையால் நாம் மிக நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே சுத்தமான, சுகாதாரமான, பசுமையான டெல்லியை உருவாக்க வேண்டும் என நாங்கள் கனவு காண்கிறோம்'' என்றார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டெல்லி மாநில அரசின் புதிய திட்டத்தின் மூலம், காற்று மாசுபாடு பிரச்னையை ஏற்படுத்தும் பழைய வர்த்தக வாகனங்கள், டெல்லிக்குள் நுழைவது தடுக்கப்படும். இதன் மூலம் வரும் காலங்களில் டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் என அம்மாநில அரசு அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

முன்னதாக டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த ஏற்கனவே ஏராளமான திட்டங்களை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இது போன்ற திட்டங்கள், காற்று மாசுபாடு பிரச்னையால் டெல்லியை விட்டு வெளியேறி, வசிப்பதற்கு பிற நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டுள்ள மக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2025, 13:57 [IST]
English summary
Only evs cng bs6 commercial vehicles to be allowed in delhi cm rekha gupta all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+