இதை எதிர்பார்க்கவே இல்ல... டோல்கேட் விஷயத்தில் மகிழ்ச்சியான செய்தி... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!
டோல்கேட் விஷயத்தில், இந்தியாவின் வாகன உரிமையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை விதிகள் 2008-ன்படி, 60 கிலோ மீட்டருக்கு ஒரு டோல்கேட் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து வரும் 2 டோல்கேட்களுக்கு இடையேயான இடைவெளி 60 கிலோ மீட்டராக இருக்க வேண்டும். இதற்கு குறைவான இடைவெளிகளில் டோல்கேட்களை அமைக்க கூடாது.

ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது. விதிமுறைப்படி அல்லாமல், மிகவும் குறைவான இடைவெளிகளிலேயே டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது வாகன உரிமையாளர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் டோல்கேட்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை இந்த விதிமுறை மீறல் உருவாக்கியுள்ளது.

எனவே விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் அனைத்து டோல்கேட்களையும் அகற்ற வேண்டும் என மிக நீண்ட காலமாக வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பிரச்னையை நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் மக்களவையில் எழுப்பினார்.

தமிழ்நாட்டில் விதிமுறைகளை மீறி டோல்கேட்கள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், அவற்றை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி பதில் அளித்தார். அவர் அளித்த பதில் வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்புகளை பெற்றுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் விதிமுறைகளை மீறி செயல்படும் டோல்கேட்கள் மூடப்படும் என அவர் தற்போது உறுதியளித்துள்ளார். அதாவது 60 கிலோ மீட்டருக்கும் குறைவான இடைவெளிகளில் இயங்கி கொண்டுள்ள டோல்கேட்கள் மூடப்படும் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அமைச்சர் நிதின் கட்காரியின் இந்த பதிலுக்கு வாகன உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 60 கிலோ மீட்டருக்கு ஒரே ஒரு டோல்கேட் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதே நேரத்தில் 60 கிலோ மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் செயல்பட்டு வரும் டோல்கேட்கள் அடுத்த 3 மாதங்களுக்கு உள்ளாக மூடப்பட்டு விடும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்துள்ளார்.

விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் டோல்கேட்களை அகற்றவுள்ள அதே நேரத்தில், இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மிக நீண்ட காலமாகவே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிட்டத்தக்க விஷயம் ஆகும்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றில்லாமல், சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் அனைத்து வகையான வாகனங்களின் பயன்பாட்டையும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஊக்குவித்து வருகிறார். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு மற்றும் காற்று மாசுபாடு உயர்வு ஆகிய பிரச்னைகளுக்கு முடிவு கட்ட மத்திய அரசு விரும்புகிறது.

மேலும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது மேற்கொண்டு வருகிறார். அத்துடன் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு விரைவான மற்றும் தரமான சாலைகள் அவசியம் என்பதால், சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார்.

நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் உள்ள பிரச்னைகளை விரைவாக களைய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு இணையான சாலைகள் இந்தியாவிலும் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இது நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








