முன்னாள் காதலனுக்கு காதலி கொடுத்த சூப்பரான கிஃப்ட்.. 90ஸ் கிட்ஸ்க்கு இன்னும் வயித்தெரிச்சலா இருக்க போகுது!

இளம் பெண் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலனுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். யார் அந்த இளம் பெண்? அவர் பரிசளித்த விலை உயர்ந்த காரின் சிறப்புகள் என்ன? மற்றும் அதன் விலை என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் அன்னா பால். இவரே தற்போது உலகின் மிக சிறந்த முன்னாள் காதலி என கூறும் அளவிற்கு மாறி இருக்கின்றார். ஒன்லி ஃபேன்ஸ் ஸ்டாரான இவர், அவருடைய முன்னாள் காதலனுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியதன் வாயிலாகவே இந்த அந்தஸ்தை அவர் பெற்றிருக்கின்றார்.

Onlyfans star gifted car to her ex-boyfriend

இளம் பெண்ணின் பரிசளிப்பு அவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இன்னாள் காதலனையே கண்டுக்கொள்ளாத காதலிகள் இருக்கும் இந்த காலகட்டத்தில் அன்னா பால், தன்னுடைய முன்னாள் காதலனுக்கு மிக மிக விலை உயர்ந்த காரை பரிசளித்திருப்பதே பலரின் ஆச்சரியத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது.

அவர் நிஸான் ஸ்கைலைன் ஜிடி-ஆர் ஆர்33 (Nissan Skyline GT-R R33) கார் மாடலையே தன்னுடைய முன்னாள் காதலனுக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இதன் இந்திய மதிப்பு 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். அதேவேளையில், இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Gifetd car pic

உலக நாடுகளிலும் ஆஸ்திரேலியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அன்னா பாலின் முன்னாள் காதலன் கிளென் தாம்சன். இவரே அந்த அதிர்ஷ்டசாலி இளைஞர் ஆவார். ஆமாங்க, இவருக்கே 2 கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

உணவிற்காக வெளியே அழைத்துச் செல்வதைப் போன்று கூட்டிச் செல்லப்பட்டே அவருக்கு அந்த கார் பரிசளிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிகழ்வின்போது அன்னா பால் மற்றும் தாம்சன் ஆகிய இருவரின் குடும்பத்தினரும் இருந்தனர். மேலும், அன்னா பாலின் இந்த திடீர் பரிசளிப்பால் சற்று நேரம் தாம்சன் திகைத்தே போயிட்டார்.

அவர் மட்டுமல்ல அவரை சுற்றியிருந்த அவரது குடும்பத்தினரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். இது அனைத்தையும் அன்னா பால் காட்சிப் பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டா, டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருக்கின்றார். பரிசாக வழங்கப்பட்டு இருக்கும் நிஸான் கார் தாம்சனின் கனவு வாகனம் என கூறப்படுகின்றது.

எனவேதான் அந்த காரை அவருக்கு எதிர்பாராத நேரத்தில் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். நிஸான் ஸ்கைலைன் ஜிடி-ஆர் ஆர்33 ஓர் அரிய வகை கூபே ரக கார் மாடலாகும். இரண்டு கதவுகள் மட்டுமே இது கொண்டிருக்கும். இந்த காரின் உற்பத்தி பணிகள் கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இருப்பினும், இந்த காருக்கு உலக சந்தையில் நல்ல டிமாண்ட் உள்ளது.

இதன் விளைவாகவே இப்போதும் மிக மிக காஸ்ட்லியான ஓர் கார் மாடலாக அது காட்சியளிக்கின்றது. இந்த காரில் 2.0 லிட்டர் டிஓஎச்சி எஸ்20 இன்லைன்-6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 162 பிஎஸ் பவரையும், 176 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இது ஓர் ரியர் (பின்) வீல் இயக்கம் கொண்ட கார் மாடலாகும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 96 கிமீ வேகத்தை எட்ட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அனைத்து காதலும் திருமணத்தில் முடிவதில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக ஈருடல் ஓருயிராக இணைந்திருந்தவர்கள்கூட பிரிய நேரிடுகின்றது. அந்தவகையிலேயே இவர்களும் பிரிந்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இவர்களின் பிரிவிற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சென்ற ஆண்டிலேயே இவர்களின் எட்டு ஆண்டு கால காதல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்பட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2024, 13:36 [IST]
English summary
Onlyfans star gifted car worth rs 2 crore to her ex boyfriend
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+