எங்க முதலாளி.. நல்ல முதலாளி... ஊழியர்களின் ராயல் என்பீல்டு பைக் கனவை நிறைவேற்றிய ஊட்டி எஸ்டேட் உரிமையாளர்!

தீபாவளிக்கு போனஸ் தருவதற்கே யோசிக்கும் முதலாளிகள் இருக்கும் நம்ம ஊரில்தான், ஓர் எஸ்டேட் உரிமையாளர் தன்னிடம் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக விலை உயர்ந்த பைக்குகளை பரிசாக வழங்கி அசத்தி இருக்கின்றார். ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களே ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியிலேயே இந்த தரமான சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. பல்வேறு சாக்கு-போக்கு காரணங்களை கூறி ஒரு சில நிறுவனங்கள் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வை நிறுத்தி வைத்திருக்கின்ற நிலையில், இவர்களுக்கு மத்தியில் நம்ம ஊட்டிக்காரர் தனித்துவமாகக் சம்பவத்தை செய்து அனைவரையும் ஆச்சரியமத்தில் மூழ்க செய்திருக்கின்றார்.

Ooty businessman gives bike as diwali bonus

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார். இவருக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் சுமார் 15 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒன்று என ஓர் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளை தீபாவளி போனஸாக வழங்கி இருக்கின்றார் தொழிலதிபர் சிவகுமார்.

எஸ்டேட்டின் ஓட்டுநர் தொடங்கி மேனேஜர் வரை என அனைவருக்கும் மோட்டார்சைக்கிள் போனஸாக வழங்கப்பட்டு இருக்கின்றது. கோத்தகிரியில் கேரட், பீட்ரூட் மற்றும் கொய்மலர் உள்ளிட்டவற்றையே சிவகுமார் சாகுபடி செய்து வருகின்றார். இந்த பணியில் தனக்கு பெரும் உதவியாக இருக்கும் பணியாளர்களுக்கு அவர் ஒவ்வொரு ஆண்டும் பரிசுகளை வழங்குவது வழக்கும்.

Royal enfield bike diwali gift

சர்ப்ரைஸாக இதுவரை பல்வேறு பரிசுகளை அவர் வழங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் தன்னுடைய ஊழியர்களுக்கு விலை உயர்ந்த பைக்கை பரிசாக வழங்கி இருக்கின்றார். பணியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே மோட்டார்சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன்படி, நான்கு பேருக்கு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கும், ஒருவருக்கு இதே பிராண்டின் ஹிமாலயன் பைக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, ராயல் என்பீல்டு ஹண்டர் 7 நபர்களுக்கும், யமஹா ரே ஸ்கூட்டடர் 3 பேருக்கும் வவங்கப்பட்டு இருக்கின்றது. ஓர் மேடையில் வைத்தே அவரவர்களுக்கான சாவியை தொழிலதிபர் சிவகுமார் வழங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸையே பரிசாக வழங்க யோசிக்கும் தொழிலதிபர்களுக்கு மத்தியில் சிவகுமார் தற்போது தனித்துவமாக தெரிய ஆரம்பித்திருக்கின்றார்.

மேலும், இவரை தற்போது நெட்டிசன்கள் பலர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சென்னையில் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 2.40 லட்சம் வரை நெறுங்கும்.

இதேபோல், ஹிமாலயன் பைக்கும் சற்று காஸ்ட்லியானதாகவேக் காட்சியளிக்கின்றது. இதன் சென்னை ஆன்-ரோடு விலை ரூ. 2.60 லட்சத்தை தொடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ராயல் என்பீல்டு ஹண்டர் நிறுவனத்தின் மலிவு விலை மோட்டார்சைக்கிள் மாடலாகும். இது ரூ. 1.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் மெட்ரோ ஹண்டர்ஸ் (Metro Hunters) மற்றும் ரெட்ரோ ஹண்டர்ஸ் (Retro Hunters) என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மெட்ரோ ஹண்டர்ஸ் இளம் தலைமுறையினரைக் கருத்தில் கொண்டு ராயல் என்பீல்டு அலங்கரித்து இருக்கின்றது.

டூயல் டோன் நிறம், காஸ்ட் அலாய் வீல்கள், அகலமான ட்யூப் லெஸ் டயர்கள், ஸ்பிளிட் அலுமினியம் ரியர் கிராப் ரெயில் மற்றும் வட்ட வடிவ ரியர் லைட்டுகள் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், ரெட்ரோ ஹண்டர்ஸ் தேர்வு பழைய பள்ளிக் கூட பையனைப் போல் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

போல்டான சிங்கிள் நிறத்தால் இந்த தேர்வு அலங்கரிக்கப்பட்டு இருக்கும். ஸ்கொயர்டு-ஆஃப் டிராஃபிகேட்டர்ஸ், ட்யூப்லர் ரியர் கிராப் ரெயில்கள் மற்றும் ஸ்டைலிஷ் ஸ்போக் வீல் ஆகியவற்றாலேயே அது அழகுப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அனலாக் ஸ்விட்ச் க்யூப், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆன் தி கோ சார்ஜிங் (செல்போனை சார்ஜ் செய்யும் வசதி) என ஏகப்பட்ட அம்சங்களை இந்த பைக்கில் ராயல் என்பீல்டு வழங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய விலை உயர்ந்த மற்றும் சிறப்பு வசதிகள் மோட்டார்சைக்கிள்களையே தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார் தன்னுடைய ஊழியர்களுக்கு பரிசாக வழங்கி அசத்தி உள்ளார். இந்த சம்பவத்தை முன்னிட்டு பலர் சிவகுமாருக்கு வாழ்த்து தெரிவித்தும், 'எங்க முதலாளி, நல்ல முதலாளி'.. என்கிற பாடலை பாடியும் அவரை புல்லரிக்கச் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2023, 14:44 [IST]
English summary
Ooty businessman gives bikes as diwali bonus to his staffs
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+